விட்டுக்கொடுத்தல்
விட்டுக்கொடுத்தால் நமது பிரிஸ்டிஜ் என்ன ஆகும்? என்று யார் குடும்பத்தில் நினைக்கிறார்களோ அவர்கள் குடும்பம் சிக்கலைச் சந்திக்க நேரிடும். விட்டுக் கொடுப்பதால் ஒருவர் தாழ்ந்து விடுவதாகவும், மற்றவர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் நினைப்பது தவறு.
நாம் செய்வது தவறு. எனவே இந்த காரியத்தில் நாம் பிடிவாதம் பிடிக்காமல் விட்டு விட வேண்டும் என்று நினைக்க வேண்டும். வறட்டு கவுரவம் பாரத்தல் கூடாது.
ஆணாதிக்கச் சிந்தனையோ, பெண்ணாதிக்கச் சிந்தனையோ வாழ்வை வாழ்வை வளப்படுத்தாது. அவை வாழ்வை அழித்து விடும்.
ஒரு குடும்பம் இணைந்து வாழ வேண்டுமானால், விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது என்பது பல்வேறு சூழலில் இன்றியமையாதது. குறிப்பாக ஒருவர் தவறு செய்தும் விட்டுக் கொடுக்கவில்லையாயினும் பிரச்சினையை அப்பொழுது தற்காலிகமாக விட்டு விட வேண்டும். ஏனெனில் கோபத்தின் விளைவாக தான் நினைத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படுவது வழக்கம். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பொதுவாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. சில நாட்கள் கழித்து அல்லது சில மணி நேரத்திற்குப் பின்பு அதைத் தெளிவாக எடுத்துக் கூறினால் துணைவர் விட்டுக் கொடுத்து விடுவார். தான் முன்பு விட்டுக் கொடுக்காதது தவறு என்று உணர நேரிடும்.
திருமண நாளில் நடைபெறும் ஒரு இனிய நிகழ்வு குறித்து திருமண கையேடு என்ற புத்தகத்தில் வாசித்தேன். திருமணமான உடன் கணவன், மனைவியினரிடையே போட்டி ஒன்றை நடத்துவார்களாம். மணமக்கள் இருவர் கையிலும் அரிசியும், சீரகமும் கொடுப்பார்களாம். இருவருக்கும் இடையே ஒரு சேலையைத் திரைபோன்று மறைத்துக் கட்டி விடுவார்களாம். அந்தத் திரையை கீழே இறக் கியவுடன் யார் முதலில் தம் கையிலிருப்பதை மற்றவர் தலை மீது போடுவார்களோ அவர்களே மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அர்த்தமாம்.
எனவே அன்று புதுமணத் தம்பதிகளை அவரவர் உறவினர்கள், முதலாவது மற்றவர் மீது போடுவதற்கு ஊக்கப்படுத்தினார்கள். மணமகளை அவள் சிநேகிதிகள் விட்டு விடாதே என்று உற்சாகப்படுத்தினார்கள். எனவே மணமகள் தயாராக இருந்தார்.திரையைக் கீழே தள்ளினார்கள். மணமகள் வேகமாக மணமகன் மீது கொட்டினாள். பதிலுக்கு மணமகள் மீது எதுவும் விழவில்லை. மணமகள் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவர் கையில் அப்படியே வைத்துவிட்டு கூறினார், நீயே என்னை அதிகாரம் செய், நீ சொல்லுகிறபடி நான் கேட்கிறேன் என்றார்.மணமகன் உள்ளமெல்லாம் பூரிப்பாகி விட்டது.
நமது ஆண்டவர்(ஆதி.2:24)ல் இசைந்து வாழும் படி அழைப்பைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலேயும், எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். (கொலோ .3:18).
தீமைக்குத் தீமையையும், உதாசினத்திற்கு உதாசினத்தையும்(Do not repay..... insult with insult) செய்யக் கூடாது. (1பேதுரு 3:9)
இனிய இல்லறம் வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வதில் தான் இருக்கிறது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment