புத்தியுள்ள மனைவி


குடிக்கு அடிமையானவர்களுக்கென்று சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் கூறும் பதில் குடும்பத்தில் ஒரே பிரச்சினை. எனவே தான் நான் குடிக்கிறேன். இந்தப் பதில் எனக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதில் முழுமையான உண்மையில்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட உண்மையும் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. சிறிய பிரச்சினைகளை அப்படியே விட்டு விடாமல், அதைப் பெரிதுபடுத்தும் மனைவியால் குடும்பத்தில் பிரச்சினை தான். மனைவிக்கும் தன் அம்மாவுக்கும் பிரச்சினை வருமானால் அதை அவர்களே முடிந்த அளவு தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஆண்கள் நினைக்கின்றனர். அதைத் தீர்க்க, கணவனை நீதிபதியாக மாற்றும் போது அவர்கள் தீர்ப்பு வழங்க இயலாது தடுமாறுகின்றனர். எந்தத் தீர்ப்பும் ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் மாறிவிடும். மகிழ்ச்சியோடு வாழ்ந்த இளைஞர்கள் இதைப் போன்ற பிரச்சினைகளால் திருமணமானவுடன் கசப்பை உணரும் நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.

பல வேளைகளில் திருமணமான பின் ஆண்கள் நாம் குடும்பத்திற்காக அதிகமாக உழைக்க வேண்டும் என்று வேலையே வாழ்க்கையென வாழ்கின்றனர். ஆனால் பெண்கள் கணவன் தன்னோடு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நிறைவேறாத போது மனைவி நச்சரிக்க ஆரம்பிக்கிறாள் அல்லது சந்தேகிக்க முற்படுகிறாள்.

நம் நாட்டிலிருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு ஒரு புதுமணத் தம்பதியினர் சென்றனர். மனைவி வீட்டில் இருந்தாள். அந்த கணவனோ மூன்று இடங்களில் வேலை பார்த்தார். ஆகவே அதிகமாகச் சம்பாதித்து வீடு வாங்கி, நகைகள் வாங்கிக் கொடுத்தார். தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதாக நினைத்தார். ஆனால் குடும்பத்தில் மனைவி ஒரே பிரச்சினை செய்து கொண்டிருந்தார். முடிவில் கணவன், மனைவியைப் பார்த்து நடத்தை சரியில்லை என்று குற்றம் சாட்டினார். அந்த மனைவியோ தன் கணவன் என்னை நேசிக்கவில்லை என்று குற்றம் சாட்டினாள். அந்தக் கணவனுக்கு கோபம் வந்தது. நான் உன்னை நேசிக்காமலேயா, நகைகள், புதுப்புதுச் சேலைகள் வாங்கிக் கொடுத்தேன் என்று கத்தினார். அவளோ நகைகள் யார் கேட்டது? சேலையை யார் கேட்டது? நான் என்னோடு உட்கார்ந்து பேசி இருக்கத்தானே கேட்கிறேன் என்றாள்.   

அவர்கள் பிரச்சினையின் மையம் கணவன், மனைவியோடு உட்கார்ந்து பேசாதது தான். மனைவியின் சண்டை, கோபம், நியாயமானதாகவும் இருக்கிறது. சில வேளைகளில் கணவன், மனைவியோடே சண்டையிடுவது இயற்கை தான். சண்டைகள்  ஆரோக்க்கியமானதாக இருந்தால் உறவுகள் வளரத்தான் செய்யும் என உளவியலாளர்களும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியமில்லாத சண்டையினால் உறவுகளில் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இல்லற வாழ்வில் சண்டைகள் ஏற்படும் போது கணவன் மன்னிக்க வேண்டுமா? அல்லது மனைவி மன்னிக்க வேண்டுமா? என்ற கேள்விகள் எழலாம். சூழலைப் பொறுத்து ஒருவருக்கொருவர் மன்னிப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்று தான் ஆண்டவர் அழைப்புக் கொடுக்கிறார். புத்தியுள்ள மனைவியோ தன் வீட்டைக் கட்டுகிறாள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

உண்மையை உரக்க சொல்வோம்