பிள்ளைகளோடு நேரம் செலவிடுவோம்


குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது என்பது இன்பத்தைக் கொடுக்கும் செயல். டிவியில் நேரம் செலவிடுவதால் பிள்ளைகள் மகிழ்ச்சியடைகின்றனர் என்று 24 மணி நேரமும் டிவியைப் பார்க்க வைப்பது தவறு. நாம் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு நமது நிலையிலிருந்து இறங்கிக் குழந்தையைப் போல் விளையாட முற்பட வேண்டும்.  குறிப்பாக நமது சிறுவர் ஊழியங்கள், VBS இயக்குநர்கள் நல்ல கதைகளைக் கூறி குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப இறங்கிச் செயல்படுவர். அதைபோன்று பெற்றோர் பிள்ளைகளுடன் உட்கார்ந்து படம் வரைவது, அதைப் பிள்ளைகள் கலர் அடிக்க உற்சாகப்படுத்துவது போன்று மாற வேண்டும். அப்பொழுது சிறு குழந்தைகளுக்குப் பெற்றோருடன் நேரம் செலவிடப் பிடிக்கும். 

ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்தக் குடும்பத்தின் தலைவர் தன் பிள்ளைகளோடு உட்கார்ந்து மாலையில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்.  பிள்ளைகள் மகிழ்ச்சியோடு தகப்பனோடு பேசி சந்தோஷமாக இருந்தனர். அதே வேளையில் மற்றோரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயும் கேரம்போர்டு இருந்தது. ஆனால் மூலையில் யாரும் தேடுவார் இல்லாமல் இருந்தது. டிவி தன் பணியைச் செவ்வனே செய்து குடும்பத்தைத் தன் பக்கமாய் வைத்திருந்தது. டிவி பேசிக் கொண்டே இருந்ததால் பிள்ளைகள் பெற்றோருடன் பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தது. திடீரென கரண்ட் போய் விட்டது. டிவி முன் உள்ள படுக்கையே தஞ்சம் என்று இருந்தனர். இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறுதான். வேறு பேச்சே கிடையாது. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட்டால் பிள்ளைகள் மனம் திறந்து பெற்றோருடன் பேச முடியும். நல்ல ஒரு உறவுநிலை வளர முடியும். பிள்ளைகள் பெரியவர்களாக வளர வளர நல்ல உறவு தொடர  வேண்டுமானால் நண்பனைப் போன்று பேசி, விளையாடி மகிழ வேண்டும். இல்லையென்றால் அவர்களோடு நேரம் செலவிடும் தனி வட்டத்தை உருவாக்க ஆரம்பித்து நம்மைத் தவிர்க்க விரும்புவர். ஒரு திருமண வீட்டிற்குச் சென்றால் கூட உங்களுடன் பிள்ளைகள் வரமாட்டார்கள். 

யோசுவா, நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே செவிப்போம் என்று குறிப்பிடும்போது பிள்ளைகளுடன் சரியான உறவை ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட உறவை எப்படி ஏற்படுத்த முடியும் என்று பெற்றோர்கள் யோசிக்கின்றனர். பிள்ளைகளுடன் நாம் கடற்கரைக்குப் போனால் அவர்களை விளையாட விட்டு விட்டு நாம் கடகரையில் உட்கார்ந்திருக்கக் கூடாது.  அவர்களோடு உட்கார்ந்து மணலில் விளையாடினால் நல்ல உறவு ஏற்படும். வீடு கட்டி விளையாடினால் அப்பொழுது கூட திருமறையில் வரும் மணலின் மேல் கட்டின வீடு எப்படி தண்ணீர் வரும்போது விழுந்து விடுகிறதோ அதைப்போன்று ஆண்டவரின் வார்த்தையின்படி நடக்காதவர்கள் வாழ்க்கை அழிந்து விடும் என்று கூறலாம். ஆண்டவரின் வார்த்தையைக் கூற முடியும். அதே வேளையில் பெற்றோருடன் பிள்ளைகளுக்கு நல்ல உறவு வலுப்படும்.

இதைப்போன்று பிள்ளைகளுடன் பூங்கா செல்லும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் பிள்ளைகளோடு பேசி மகிழ்ந்து உறவை வலுப்படுத்துங்கள். அப்பொழுது பிள்ளைகள் பெற்றோருடன் பிரச்சினையான காரியங்களையும், மறைமுகப் பிரச்சினைகளையும், பாலியல் சம்பந்தமான சிக்கல்களையும், தவறான பழக்க வழக்கத்தை ஏற்படுத்தும் சூழல்களையும், தற்கொலை எண்ணங்களையும் வெளியரங்கமாக பகிர்ந்து கொள்ள இயலும். அப்பொழுது தான் சுமூகமான உறவு பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே மலரும். இல்லறம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்