நல்லதைக் கற்றுக் கொடுப்போம்


மாம்பழச்சங்கப் பண்டிகையன்று என் மகளோடு, பிறர் உதவியை நாடுகின்ற மக்களுக்கு உதவச் சென்றேன். பத்து பத்து ரூபாயாக மாற்றி வைத்திருந்தேன்.   அவைகளை எடுத்து என் மகளிடம் கொடுத்து நீ கொடு என்றேன். அவள் உற்சாகமாக ஒவ்வொருவருக்காகக் கொடுத்து வந்தாள். Daddy அந்த ஆளுக்குக் கொடுக்கல்ல.  இந்த ஆள் பாவம் என்று கேட்டு கேட்டு வாங்கிக் கொடுக்கும் போதே பகிர்ந்து கொடுக்கப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம். தெருக்களிலே மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள்  நின்று கொண்டிருந்தால் என் மகள் என்னை அழைத்துச் Daddy இவர்களுக்கெல்லாம் வீடு கொடுக்கணும், உணவு கொடுக்க வேண்டும் என்று கூறுவாள்.

சிறு பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. வீட்டில் ஒரே ஒரு பிள்ளை மட்டும் இருக்கும். வாங்கிக் கொடுக்கும் பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் அவர்களுக்கே உரியது.பெரியவர்கள் யாரும் பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளோடு விளையாடுவதில்லை.   ஆனால் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகள் இந்தப் பொம்மையைக் கேட்டு விளையாட வந்தால் அவர்கள் சேர்ந்து விளையாட மாட்டார்கள். காரணம் பகிர்ந்து விளையாடும் எண்ணம் குறைந்து வருகின்றது.    சுயநலமிக்க குழந்தைகள் பெருகி வருகிறார்கள். இந்தக் குறுகிய எண்ணம் எதிர்காலத்தையே பிரச்சினைக்குரியதாக மாற்றிவிடும்.

பெற்றோரே, பிள்ளைகளைப் பார்த்து நீ பள்ளிக்கூடத்தில் சாப்பிடும்போது யாருக்கும் கொடுக்காதே என்று கூறிவிடுவர்.   உனக்கு நல்ல விலை உயர்ந்த பண்டம் கொடுத்துள்ளேன். உனக்கு அருகில் உள்ள பையன் விலை குறைந்த சாதாரணத் திண்பண்டம் வைத்திருப்பான். அவனுக்கு கொடுக்காதே நீ அவனிடம் வாங்கியும் சாப்பிடாதே என்று நச்சு விதையை பிள்ளைகளுக்குள் போட்டுவிடுகின்றனர்.இப்படி வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் கணவனுக்கோ, மனைவிக்கோ பொதுவாக ஒரு வங்கிக் கணக்கை கூட வைத்து வாழ மறுத்துவிடுவர். 

பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மறுக்கும்போது பெற்றோர் அதிகார அடிப்படையில் பிடுங்கிக் கொடுக்காமல், என்ன செய்யலாம் சொல்லு, தம்பி பாவம் இல்ல என்றால் அவர்களே யோசித்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவார்கள்.   பிரச்சினையை நாமே முடிவுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் பிள்ளைகளுக்குள் வெறுப்புணர்வும், கோபமும் பெருகிவிடும்.

பிள்ளை தவறு செய்யும்போது sorry என்று கேட்கச் சொல்ல வேண்டும். அப்படி மறுத்தால் பிள்ளைகளுக்காக நாம் sorry கேட்க வேண்டும். அப்பொழுது பிள்ளைகள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள இயலும்.

பிள்ளைகள் தங்களுடையதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுதலால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை. லாபம் தான் என்பதை உணர வைக்க வேண்டும். பகிர்ந்து விளையாடும் போது அவர்களுக்குள் மகிழ்ச்சி, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, நல்ல நட்பு ஆகியவை வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படி வளரும் பிள்ளைகள் நாளடைவில் குடும்ப வாழ்வில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றில் பெருகி மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்வர்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க எங்களின் facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி