அழகு


மிகவும் கர்வத்தோடு, யாரையும் மதிக்காத வாலிபப்பெண் ஒருத்தி வளர்ந்து வந்தாள். அவளுடைய திருமண நாளை எட்டின போது யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.எனவே வெளியூர்களில் வாழும் மணமகனைப் பார்த்தாவது திருமணம் செய்து வைக்க நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.நாட்கள் கடந்து சென்றதால், அந்த வாலிபப் பெண்மணியும் தன் அழகை இழந்து அவலட்சணமானாள்.   தனக்கு இனி ஒரு வாழ்க்கை அமையப்போவதில்லை என்று நினைத்து தன்னைப் பேணுவதையும் விட்டுவிட்டாள். ஒரு நாள் விழியை இழந்த வாலிபன் ஒருவன் அவ்வூருக்கு வந்தான்.  இதை பார்த்த அந்த வாலிபப் பெண்ணின் தந்தை தன் மகளை எப்படியாவது இந்த விழியை இழந்த மனிதனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது தான் என முடிவெடுத்தார்.  அதன்படியே திருமணத்தை நடத்தி வைத்தார். அந்த வாலிபப் பெண் தனக்கு கணவனாக வந்த விழி இழந்தவரிடம் தன்னை மிக அழகுள்ளவள் என்று பெருமையடித்துக் கொண்டாள். 

எதிர்பாராத விதமாக அவ்வூரில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.  அதில் கண்பார்வை இழந்த அந்த மனிதன் கலந்து கொண்டான். டாக்டர் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைத்து விடும் என்றார். இதைக்கேட்ட அந்த பெண்ணுக்கு வருத்தமாக இருந்தது. தன் கணவனிடம் மிகவும் அழகானவள் என்று தவறாக வர்ணித்து வைத்துள்ளேனே அவையெல்லாம் பார்வை தெரிந்து விட்டால் பொய் என தெரிந்து விடுமே என்று பயந்தாள். எனவே உங்களுக்குப் பார்வை கிடைக்காது.   டாக்டர் பணம் பிடுங்குவதற்காகத் திட்டம் போடுகிறார் என்று பேசி நம்பிக்கையை இழக்க வைக்க முயற்சி எடுத்தாள். ஆனால் அவரோ பார்வையைப் பெரும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அறுவை சிகிச்சை மூலம் பார்வையடைந்தார். அறுவை சிகிச்சை முடிந்ததும் தன் மனைவியையே முதன் முதலாக பார்க்க விரும்பினார். அவளைப் பார்த்த பின்பு முன்னிலும் அதிகமாக அன்பு செலுத்தத் தொடங்கினார்.   

இதைப் பார்த்த அந்தப் பெண், 'என்னங்க நான் உங்களை ஏமாற்றிவிட்டேனே, அதிக அழகுள்ளவள் என்று! என் மீது கோபம் இல்லையா?' என்றாள்.   அவரோ அவளைப் பார்த்து, அழகு தோற்றத்தில் அல்ல.   உள்ளத்தில் அல்லவா இருக்கிறது என்றார்.

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, தன் கணவன் மிக அழகாக இருப்பதால் தன்னை நிராகத்து விடுவாரே என்றோ அல்லது தன் மனைவி நல்ல கலராகவும் நான் கருப்பாகவும் இருப்பதால் நாளடைவில் நம்மை வெறுத்து விடுவாளோ என்றோ பயப்படவேண்டாம்.அழகு என்பது வெளிப்புறமான தோற்றத்தில் மட்டும் அல்ல நல்ல உள்ளத்தில் தான் இருக்கிறது.

அழகான ஆணும், பெண்ணும் கூட ஒருவரை ஒருவர் வெறுத்து விடுகிறார்களே ஏன்? வெளிப்புற அழகு நிரந்தரமற்றது.   நல்ல குணாதிசயம் தான் நிரந்தரமான அழகு.   நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன் என்று மகிழ்ச்சியாயிருங்கள்.   இந்தியர்களில் பலர் சாக்லெட் கலர் தான். சாக்லெட் எல்லாருக்கும் பிடிக்கும் அல்லவா! அப்படியென்றால் நம்மையும் நம் கணவனுக்கு அல்லது மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.     

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்