புது வழி


ஒரு கணவனும் மனைவியும் பயங்கரமாக வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  இறுதியாக மனைவி தன் கணவனைப் பார்த்து இந்தா பாருங்க உங்களுக்கும் எனக்கும் இந்த ஜென்மத்தில் ஒத்து வராது.  என் கருத்து உங்க கருத்தோடு ஒத்துப்போகாது.  நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் காலம் முழுவதும் சண்டை போட்டுகிட்டுதான் இருக்கணும் என்று பேசி முடித்தார்.  

கணவனும், மனைவியுமாக வாழ வேண்டுமானால் ஒத்தக் கருத்துக்கள் இருந்தால் மட்டும்தான் வாழ முடியுமா? எனக் கேள்வி எழுப்பினால் பதில் இல்லை என்பது தான்.  உலகிலே ஒத்தக் கருத்துக்கள் உள்ள மக்களைத் தேடிச் சென்றால் ஒரு போதும் திருமணம் நடைபெறாது.

நானும் நன்றாகக் பாடுகிறேன்.  நீயும் நன்றாகக் பாடி இசையமைக்கிறாய் எனவே நம் இருவருக்கும் பொருத்தம் இருக்கிறது என்று கூறித் திருமணம் முடித்தால் பாடுவதிலும், இசையிலும் தான் ஒற்றுமையே தவிர மற்றக் காரியங்களில் வேறுபாடு மிகுதியாக இருக்கும்.

இரண்டு பேரும் ஒரே கருத்தைத்தான் நேற்று நினைத்துள்ளோம்.  எனவே எவ்வளவு மனது ஒற்றுமை என்றால், நாளை மறுதினம் மற்றொரு காரியத்தில் பொருத்தம் இல்லை.  எனவே படிப்பில், ஒற்றுமை, வேலையில் ஒற்றுமை, செயல்பாடுகளில் ஒற்றுமை என அனைத்து ஒற்றுமைகளையும் பார்த்தாலும், வேற்றுமையுடைய அநேக சிந்தனைகள், செயல்பாடுகள் ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும்.  ஆங்கிலத்தில் “Worship the difference” என்ற பழமொழி உண்டு.  வேற்றுமையை நாம் மதிக்க வேண்டும், அதனைச் சகிக்க வேண்டும்.  அது தான் வாழ்க்கை.  வேற்றுமைகள் வரும்போது வாழ்க்கையில் சிறுசிறு மோதல்கள் வருவது இயற்கையே.  சண்டை போடாத குடும்பம், மனக்கசப்பு வராத குடும்பங்கள் உண்டா என்றால் அது கேள்விக்குறிதான்.  ஒருவர் கருத்து மற்றவர்களுக்கு உடனடியாகப் பிடிக்காமல் இருக்கலாம்.  அதனால் அதை மற்றவர் எதிர்த்துப் பேசலாம்.  ஆனால் மற்றவர் நமது கருத்தை ஏற்றே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போது தான் பிரச்சினைகள் பெரிதாக மாறுகின்றன. 

சில கருத்துக்களை மற்றவர் உடனே அங்கீகரிக்கலாம் அல்லது சில காலம் செல்லலாம்.  சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.  ஆனால் நமது கருத்தை மற்றவர் ஏற்றே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் பிடிப்பது தான் தவறு.  எனவே மூன்று விதமான வழிகளை நாம் கடைப்பிடிக்கலாம்.

1.  மற்றவரோடு அனுசரித்து சென்று விடவேண்டும்.  இப்படி செல்வதால் தான் அநேக குடும்பங்கள் இன்னமும்   பிழைத்திருக்கின்றன.  எனவே மற்றவர் கருத்தோடு Compromise ஆகுங்கள்.  குறிப்பாக குழந்தைகளுக்காகக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற தியாக மனப்பான்மை வேண்டும்.

2.  கூட்டாகச் செயல்படுவது அடுத்த வழியாகும்.  மற்றவர் கருத்து பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் co-operate பண்ணி வாழ முற்பட வேண்டும்.  உன்னுடைய கருத்துப்படி நீ நன்றாக வாழ முற்பட்டு என்று விட்டு விடுவது.

3.  மற்றவர் கருத்தையும் தனது கருத்தையும் இணைத்துப் பார்த்து மேன்மையான கருத்துக்களை உருவாக்கி, புது வழி அமைத்து வாழ முற்படுவது. 

இப்படி வாழ முற்படும்போது மகிழ்ச்சி வாழ்வில் பரிமளிக்கும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்