பெற்றோர் vs தொலைக்காட்சி


இளம் வயதிலேயே வலுச்சண்டையில் ஈடுபட்டுப் பிறரைத் துன்புறுத்தும் (aggressive behavior) குணம் பிள்ளைகளிடம் காணப்படுவதைக் குறித்து பெற்றோர் வருத்தப்படுகின்றனர்.  பள்ளியில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகத் தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்கள் கூறினால் ஆசிரியர்களிடம் என் பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என்று சாதிப்பர்.

பள்ளியில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனைக் கூர்மையான compassசால் குத்துவதும், பள்ளிக்குக் கத்தியைக் கொண்டு வந்து மாணவர்களை மிரட்டுவதும், ஆசிரியையே குத்திக் கொல்வதும் நடைபெறுகிறது. தான் விரும்பிய சக மாணவியைத் திருமணம் செய்ய முடியவில்லையென்றால், அவள் உயிரோடே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுவதும் இன்று பெருகி வருகின்றது. இப்படிப்பட்ட எண்ணங்கள் நம் பிள்ளைகளிடத்தில் வளராமல் இருக்க வேண்டுமானால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையே திறந்த மனதோடு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் சூழல் வளர வேண்டும்.

அமெரிக்காவில் பிள்ளைகளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  உங்களுக்குப் பெற்றோர் முக்கியமா? அல்லது டி.வி முக்கியமா? என்று கேட்டபொழுது, 80% பிள்ளைகள் டி.வி தான் அவசியம். பெற்றோர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பதிலளித்துள்ளனர். இது இன்றைய பெற்றோர்-பிள்ளைகளின் உறவில் எவ்வளவு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

அதே வேளையில் பிள்ளைகளை நெறிப்படுத்தும் பள்ளிகள் பிள்ளைகளிடம் நல்ல உறவை வலுப்படுத்த மறந்து வருகின்றன.  பள்ளியில் Counselling Camp நடத்துவதற்காக சென்றிருந்தபொழுது அவர்களுக்குப் பிடித்த பிடிக்காத நபர்களைக் கோடிட்டு காட்டக் கூறினோம்.  அதில் அதிக அளவில் பிடிக்காத நபர் யார் என்று கேட்டால் ஆசிரியர்கள்.  இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  ஆசிரியரைப் பார்த்தாலே தெய்வத்தைப் பார்த்தது போன்று நினைத்த காலம் போய், பரம எதிரியாக மாறிப் போய் விட்டனர் ஆசிரியர்கள்.  படிக்கின்ற மிஷின் போன்று பிள்ளைகளைத் துன்புறுத்துவது எரிச்சலை ஊட்டி வருகிறது என்பதே உண்மை.

பிள்ளைகளுக்கு (Moral Class) நன்னெறிக் கதை கூறும் வகுப்புகள் தற்பொழுது பாடத்திட்டத்தில் இல்லை.  நன்னெறி புகட்டி என்ன பயன் என்று நினைத்து மார்க் அடிப்படையிலேயே பாடத்தைப் புகட்டி வெறியர்களாக மாற்றி வருகின்றனர்.  பிள்ளைகளுக்கு அன்பு, விட்டுக்கொடுத்தல், உதவுதல், மன்னித்தல் போன்ற பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள், இதை மறந்து விட்டதால் பெற்றோர் கண்டிப்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இது சம்பந்தமான கதைகள், கட்டுரைகள் போன்றவற்றைப் படிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  பெற்றோரும் நல்ல முன் மாதிரிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும்.  அப்பொழுது அல்ல அடிச்சுவடுகளைப் பிள்ளைகள் கற்று வளர்ந்து வருவர்.  குடும்ப அங்கத்தினர்களே நற்பண்புகளைக் கற்பிக்கும், செயல்படுத்திக் காட்டும் பல்கலைக் கழகங்களாக இருக்க வேண்டும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க எங்களின் facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்