விலையுயர்ந்த முத்து


தங்கத்தை உரசிப்பார்த்து இது தங்கம் தான் என்று உறுதிசெய்வர். ஆனால் ஒரு பெண்மணி குணசாலியான பெண் என்று எப்படிக் கண்டு பிடிக்க இயலும். மின்னுவதெல்லாம் பொன்னாகுமா? வெளுத்ததெல்லாம் பாலாகுமா? வேதத்தை வாசிக்கும் பெண்களெல்லாம் குணசாலிகளா? ஜெபிப்பவர்கள் எல்லாம் சிறந்த பெண்மணிகள் என்று எடுத்துக் கொள்ள இயலுமா? என்றால் கேள்விக் குறிதான். ஏனென்றால் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது. ஜெபம் நாவிலிருந்து வருகிறதே ஒழிய இருதயத்திலிருந்து எழுப்புவதில்லை. எனவே குணசாலியான பெண்மணியா, சண்டைக்காரப் பெண்மணியா என்பதைத் தீர்மானிக்க திருமறை மட்டுமே நமக்கு உதவுகிறது. 

உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். புதிதாகத் திருமணமான போது அவரையும், அவரது மனைவியையும் சந்திக்க இயலவில்லை. எனவே எனது வேலைப்பளுவின் நிமித்தம் சில மாதங்கள் கழித்தே சந்திக்க முடிந்தது. மிகவும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். உள்ளே சென்றதும் வரவேற்ற எனது உறவினர் தனது மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.  அவர்களுக்கு நான் புன் முறுவலோடு வணக்கம் கூறினேன். அவர் மனைவியோ எந்தச் சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. மறுகணமே தேநீரை அருந்தி விட்டு இடத்தைக் காலி செய்தோம். பணம் அதிகமாகச் சம்பாதிக்கிறதினால் வந்தவர்களுக்கு வணக்கம் கூட கூற இயலாமல் போய் விடுமா என்று எனக்கு கலக்கமாக இருந்தது.  நாட்கள் கடந்தது.  வந்தவர்களை மட்டும் வரவேற்க விரும்பாத அவள் தொடர்ந்து தன் கணவனைக் கூட மதிக்க விரும்பாதவளாக மாறிவிட்டாள்.  கல்வி என்பது ஒரு மனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக/ ஏற்றவளாக மாற்ற வேண்டும். ஆனால் இன்று கல்வி கற்றவர்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பிறரை மதிக்கத்  தெரியாதவர்களாக மாறிவிடுகின்றனர்.

ஆகாப் அரசனின் மனைவி யேசபேல் தன் நாட்டில் உள்ள மனிதர்களை மதிக்கத் தெரியாதவளாக, ஊழியன் எலியாவை மதிக்கத் தெரியாதவளாக, இறைவனுக்கு எதிராகவே தன்னை உயர்த்தும் அளவுக்கு மமதையாக நடந்து கொண்டாள். அதே வேளையில் தாவீதுக்கும் நாபாலுக்கும் இடையே பிரச்சினை வந்த போது நாபாலின் மனைவி அபிகாயில் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து தாவீதுடைய கோபத்தை மாற்றிவிடுகிறாள். தாவீது அந்தப் பெண் நிமித்தமாக அவள் குடும்பத்தை அழிக்காமல் விட்டு விடுகிறான். ஒரு பெண்ணின் கையில் தான் ஒரு குடும்பம் இருக்கிறது. ஒரு குடும்பம் மேன்மையாவதும், தாழ்ந்து போவதும், அக்குடும்பத்திலுள்ள பெண்ணால் தான்.

கோபமாய் வீட்டிற்கு வரும் கணவனை, சாந்தப்படுத்துவதும், சாந்தமான கணவனைக் கொலைகாரனாக மாற்றுவதும் ஒரு பெண்ணின் கையிலிருக்கிறது. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான் என்று நீதிமொழிகள் 18:22 கூறுகிறது. ஆனால் திருமணமான பின்புதான் ஆண்கள் அதிகமாக மனநோயாளிகளாக மாறுகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே பெண்கள் குணசாலிகளாக வாழ்ந்தால், இல்லறம் இனிக்கும், குடும்பம் கட்டுப்படும். வாழ்வு மலரும். கடவுள் உங்களுக்கு உதவி செய்வாராக.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி