பார்வைகள் பலவிதம்
விருந்து ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. அதில் பல விஞ்ஞானிகள் பங்குக்கொண்டனர். இதில் விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் போயிருந்தார். எதிர்பாராதவிதமாக அவருடைய மனைவி அதில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.
விருந்தில் பங்குபெற்று விட்டு ஐன்ஸ்டீன் வீடு திரும்பினார் . மனைவி அவரைப்பார்த்து விருந்து எப்படி இருந்தது என்று கேட்டார். ஐன்ஸ்டீன் பதிலாக நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு தான் சந்தித்த விஞ்ஞானிகளிடம் பேசின முக்கியமான விஷயங்களைப்பற்றி விளக்க முற்பட்டார்.
மனைவிக்கு கோபம் தலைக்கேறியது! நான் இந்த அறுவையை எல்லாம் கேட்கவில்லை. அங்கு வந்த பெண்கள் எப்படிப்பட்ட மாடல்களில் டிரஸ் அணிந்திருந்தார்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் என்றாள்.
ஐன்ஸ்டீனுக்கு தலைச்சுற்றியது. தன் மனைவியைப்பார்த்து விருந்தில் பங்குகொண்ட பெண்களின் முகம் மட்டுமே மேசைக்கு மேலே என் கண்களுக்குப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த ஆடையை நான் பார்க்க முடியவில்லை. உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற விரும்பினால் மேசைக்கு கீழே நான் குனிந்து தான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு கவுரவமாய் இருந்திருக்காது என்று முடித்தார். இதைக் கேட்டு அவர் மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். இதனை "வெற்றி நிச்சயம்" என்ற புத்தகத்தில் வாசித்தபோது இன்றைய பெண்களின் நிலை இதைப்போல் பலருக்கு இருக்கிறது என்பது புரிகிறது. இன்றும் பல ஆண்கள் திருமணத்திற்குப் போய் வந்தால் மணமகன்/ள் யாரென்றே தெரியாமல் சாப்பிட்டு விட்டு வந்து விடுவர்.
இருப்பினும் பெண்கள் இன்றைக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்க்காக செய்யும் செலவீனங்கள் அதிகம். முகத்தை, கண்களை, கழுத்தை, தலைமுடியை, நகத்தை, கை, விரல்களை, உள்ளங்கைகளை அழகுப்படுத்த வேண்டும் என்று அதற்கு அதிகப்படியான பணத்தை செலவிடுகின்றனர். உழைப்பதில் ஒரு பெரும்பங்கை ஆடைக்கும், அணிகலன்களுக்கும், ஆடம்பரத்திற்கும் செலவிட வேண்டும் என்று ஏழைப்பெண்மணிகளும் முற்பட்டு செலவு செய்கின்றனர். இதனால் குடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது .
இன்றைய விளம்பரங்களும் பெண்களை மையப்படுத்தியே அமைகின்றன. சீரியல்கள், திரைப்படங்களில் வரும் பெண்களைப் போலே ஆடைகளை போட்டுக்கொண்டு அலைய நிர்பந்திக்கப்படுகின்றனர். மாயையான, நிழல்படங்களுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்துக்கொள்ளாமல் வாழ முற்படுகின்றனர்.
திரைப்படம், சீரியலில் நடிக்கிறவர்களுக்கு மேக்கப் போட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. சிறிது மேக்கப் குலைந்தாலும் மேலும்,மேலும் போட நிர்பந்திக்கப்படுகின்றனர். ஆனால் பள்ளி ஆசிரியைகளாக, அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களாக, வெளி வேலைக்குச் செல்லுகிறவர்களாகிய நீங்கள் அவர்களைப் போல மேக்கப் ஓவ்வொரு மணித்துளிக்கும் போட நினைத்தால் தோல் வியாதிகள் தான் வரும். திரைப்படத்தில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அது தான் வேலை. நமக்கு அப்படியல்ல. நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் சாப்பாடு. நம்முடைய ஒப்பீடு தவறுதலாக இருக்கக்கூடாது.
சமுதாயத்தில் பிறரால் அங்கீகரிக்கும் அளவிற்கு உடையை உடுத்த தேர்ந்தெடுங்கள். சீரியலில் நடிக்கிறவர்களைப் பார்த்து அதைத் தேர்ந்தெடுக்காதிருங்கள். உங்களுக்கு சுயாதீனம் உண்டு. யாரும் உங்களை வற்புறுத்த வேண்டிய தேவையில்லை. இருப்பினும் இறைவன் உங்கள் உடையைக்கண்டு மகிழ்ச்சியடைவாரா என்று சிந்தித்து பாருங்கள்.
பேதுரு தன்னுடைய நிருபத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "மயிரைப்பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாகிய சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது.அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது." (1 பேதுரு 3:3,4) என்கிறார். வெளிப்புறமான அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க உங்கள் குடும்பங்களைப்பற்றிய அக்கறை குறைந்து போய் வெளியே உள்ள மக்களை திருப்திசெய்வதற்காகவே நாம் முயலுகிறோம். நம்முடைய சுய ரூபத்தை மறைத்து போலியான அலங்காரத்தை நாம் வெளியே காட்ட முற்படுகிறோம். பேதுருவினுடைய ஆலோசனை என்னவென்றால் அவ்விதமான அலங்காரத்திற்கு உங்கள் நேரங்களை பணங்களை செலவிடாமல் சாந்தம், அமைதல், நல்ல குணாதிசயத்தில் வளருவதற்கு முற்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
வெளிப்புற அலங்காரத்தினால் உங்கள் கணவனை வசீகரிக்க முற்படுகிறீர்களா அல்லது வெளி உலகத்தினர் நாம் அழகாக இருந்தால் தான் நம்மோடு பழகுவார்கள் என்று நினைக்கிறீர்களோ. உண்மையிலே உள்ளான அலங்காரமாகிய நல்ல குணாதிசயத்தில் நீங்கள் பெருகுவீர்களாகில் உங்கள் குடும்பம் மட்டுமல்ல, நீங்கள் பணிபுரியும் இடம், நீங்கள் சேவை செய்யும் இடம் எங்குப்போனாலும் மக்களால் நீங்கள் கவர்ந்திழுக்கப்படுவீர்கள். எனவே உங்கள் பார்வையை மாற்றிப்பாருங்கள். மேலானவைகளை நாடி மேன்மக்களாக திகழ்வீர்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment