கருப்பே அழகு


என் நண்பன் ஒருவன் முகத்தில் புண்களாக இருக்கக்கண்டு அவனைப் பார்த்து ஏன், எப்படி இவ்வளவு வந்தது என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னான். அழகாய் இருப்பதற்காக "கிரீம்" ஒன்றைப் போட்டேன். அது ஒத்துக்கொள்ளாமல் புண்ணாக மாறிவிட்டது என்றான். இன்றைய ஆண்களுக்கும், பெண்களுக்கு எப்படி அழகாக மாறுவது? கடவுள் ஏன் என்னை இப்படி கருப்பாக படைத்துவிட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்றொரு புறம் அழகாய் இருப்பதற்கு பல்வேறு விளம்பரங்கள் வந்து மனதை உருட்டுகிறது. ஒரு வாரத்தில், நான்கு வாரத்தில் மாற்றங்கள் தெரியும் என்று பல்வேறு "கிரீம்"கள் போட்டிப்போட்டு விளம்பரங்கள் செய்கின்றன. இவைகளை மனதில் கொண்டு, விளம்பர யுக்திகளைப் புரியாமல் பல யுவதிகள் மாட்டிக் கொள்ளுகின்றனர்.  தங்கள் கரங்களிலே எப்பொழுதும் மேக்கப்பை சுமந்துக் கொண்டே செல்லுகின்றனர்.

ஒரு முறை அண்டங்காக்கை ஓன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தனக்கு கிடைக்கும் மீனையோ, சிறிய பூச்சிகளையோ உண்டு வாழ்வதை இனிதே கழித்தது. ஒரு நாள் ஒரு குளத்தில் ஒரு அன்னப் பறவையைப் பார்த்தது. அது வெண்மையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டது. அந்த அன்னப்பறவை குளத்தில் மிதந்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.

காக்கைக்கு தன் நிறத்தை, அன்னப்பறவையுடன் ஒப்பிட்டுப்பார்த்த போது மிகுந்த வருத்தமாக இருந்தது. எனவே உட்கார்ந்து யோசித்தது. நாமும் எப்படி இதைப்  போன்று வெண்மையாக மாறுவது?

இந்த அன்னப்பறவையும் நம்மைப்போல் கருப்பாகத்தான்  இருந்திருக்க வேண்டும். நன்றாக இந்த குளத்தில் குளித்து குளித்து தான் இப்படி வெண்மையாய் மாறி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

எனவே இரவு, பகலாக நன்றாக குளித்து உடலை தண்ணீரில் கழுவி கழுவி சுத்தம் செய்தது. பசியை மறந்தது, குளிப்பதிலே தன்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டதால் ஒரு வாரத்தில் அது உண்ணாமல் மெலிய ஆரம்பித்தது.

இதைக் கண்ட அன்னப்பறவை மெதுவாக அண்டங்காக்காவிடம் வந்து, ஏன் இப்படி ஒரு வாரமாய் குளித்துக் கொண்டிருக்கிறாயே உனக்கு ஜலதோஷம் வந்திடாம என்றது.

அதற்கு அந்த காகம், நானும் உன்னைப் போல வெண்மையாக வேண்டும், அதற்கு தான் இந்த முயற்சி என்றது. உடனே அன்னம் கூறியது, அடடாடா என்னைக் கேட்டால் கருப்பு தான் அழகு என்பேன். என்னுடைய வெண்மை எனக்கே அலுத்துவிட்டது. கருப்பை போல அழகான நிறம் ஒன்றும் இல்லை என்றது. அப்பொழுது தான் காகத்திற்கே புரிந்தது கருப்பும் அழகுதான். நாம்தான் வெண்மை அழகு என்று தவறாக யோசித்துவிட்டோம் என்று வருந்தியது. தனது சிந்தனையை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு Black in beautiful என்று பறந்து மீனைச் சாப்பிடச் சென்றது. இந்த கதையை "நிஜம்-நீதி" என்ற புத்தகத்தில் வாசித்த போது இன்றைய இளைஞர்கள் தங்கள் நிறத்தைக் குறித்து வருத்தப்படுதல் கூடாது.

இந்த உலகத்தில் அழகாய் இருப்பவர்கள் சாதித்ததைக் காட்டிலும், ஞானமுள்ளவர்களும், அறிவுள்ளவர்களும், புத்தியுள்ளவர்களும் சாதித்த சாதனை என்பது அதிகம்.

அழகான பெண்ணை மணந்துக்கொண்ட ஆபிரகாம், எகிப்துக்குப் போகும் போது தன் அழகான மனைவியின் நிமித்தமாக தன்னைக் கொன்றுப் போட்டு விடக் கூடாது என்று பயந்து சகோதரி என்றுக் கூறுமாறு சொல்லுகிறான். (ஆதி 12:11,12) அதேப் போன்று ஈசாக்குச் செயல்படுகிறான். "யோசேப்பு அழகான ரூபமும், சௌந்தரிய முகமும் உள்ளவனாக இருந்தான்". (ஆதி 39:6) தன் அழகினிமித்தம் ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழலுக்குள்ளானான். தன் அழகினிமித்தம் பிறர் தவறிவிடக் கூடாது என்ற வைராக்கியத்தினால் செயல்பட்டவன்.

உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்து விடு. அபொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார் ...(சங் 45:10,11) இவ்வசனத்தையும் திருமண வீட்டில் அடிக்கடி வாசிப்பது உண்டு. ஏனெனில் மணமகள் / மணமகன் இருவருமே தங்கள் குடும்பத்தின் பெருமைகளை விட்டு விட்டு வர வேண்டும். தகப்பன், தாயிடம் திருமணமான பின்பும் ஒவ்வொரு விஷயத்தையும் தொலைப்பேசியில் கேட்டு விட்டு முடிவெடுப்பதையும் விட்டு விடவேண்டும். அப்பொழுது தான் கணவர் / மனைவி மற்றவர்கள் மீது உள்ள அழகின் மீது பிரியம் வரும். உள்ளான மனதின் அழகு என்பது திருமணத்திற்கு பின்பு மேலோங்கி, முக அழகு கீழேச் சென்று விடுகிறது. எனவே உள்ளான அழகில் பெருக கர்த்தர் விரும்புகிறார். அதுவே நிலையான,  நிலைத்திருக்கும் அழகு. வெளி அழகு மாயையானது, நிரந்தரமற்றது, அழிந்துப் போகக் கூடியது. வெளி அழகைக் கூட்டுவதற்கு அதிக முயற்சி எடுக்காமல், உள்ளான அழகைக் கூட்ட முயற்சி எடுங்கள்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்