அழகென்ன பொன்மூக்குத்தியா?


விருந்தொன்றில் முன்னாள் இந்திய குடியரசு தலைவராக இருந்த  Dr.இராதாகிருஷ்ணன் அவர்கள் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களோடு அமர்ந்திருந்தார்.அப்பொழுது வெள்ளைக்காரர் ஒருவர் விருந்தில் பேசும்போது வெள்ளையர்களாகிய எங்களை கடவுள் அதிக அன்புக்கொண்டு அதிக முயற்சி செய்து வெள்ளையாகப் படைத்துள்ளார் என்று பேசினார். இறுதியாக கூறினார் "அதனால் தான் நாங்கள் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறோம்".

தொடர்ந்து பேசிய இராதாகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே கீழ் வருமாறு கூறினார்.   கடவுள் கேக் செய்ய விரும்பினார்.முதலில் செய்த "கேக்"கானது சரியாக வேகாமல் போய் விட்டது.   அது தான் வெள்ளையாக பிறந்த மக்கள். இரண்டாவதாக முறையாக கேக் செய்தார். அது அதிக நேரம் வெந்து விட்டது. அதனால் தான் சிலர் கருப்பாக இருக்கின்றனர்.இறுதியாக கேக் செய்ய முற்பட்டார். அவர் பெற்றுக் கொண்ட அனுபவத்தினால் சரியாக பக்குவத்தில் செய்தார். இப்போது அரைவேக்காடும் அல்ல, கரிந்தும் போகல, ஆக சரியாக பக்குவத்தில் வந்தவர்கள் இந்தியர்கள் என்றார்.   இதைக் கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர், மகிழ்ந்தனர்.

பொண்ணு சிவப்பா, அழகா, பையன் எப்படி நல்ல கலரா?. என்  பொண்ணுக்கு ஏற்றார்போல இருப்பானா? என்று பலர் வலை வீசுகின்றனர்.

திருமறை "அழகு வீண்" என்றும், "வஞ்சனை" உள்ளது என்றும் சொல்லுகிறது.   அழகு இருந்து ஞானம் இல்லாத பெண்ணை பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது.இவ்வாறு திருமணங்களை மக்கள் ஏன் அழகையே நோக்கிச் செல்லுகின்றனர். திருமணத்திற்கு முன் கவர்ச்சியே முதன்மையிடம் பிடிக்கிறது. குணத்தைப்பற்றிப் பார்ப்பதில்லை. ஒருவரின் முகத்தையோ, படங்களையோ பார்த்துதான் பலர் எடைப்போடுகின்றனர். நாட்கள் போகப் போக அழகு என்பது பின்னுக்குப் போய் நற்குணம் முன்னுக்குப் போய் விடுகிறது.

திருமணம் ஆனவர்களிடம் உங்கள் மனைவி/கணவன் நீங்கள் எதிர்பார்ப்பது எது என்றுக் கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பேர் முன்புபோல் அழகு மாறாமல் மேக்கப் போட வேண்டும் என்று கேட்கிறார்கள். எத்தனைப் பேர் அன்போடும், பண்போடும் நடந்துக்கொள்வதை எதிர்பார்க்கிறேன் என்று கூறுகிறார்கள்.

எத்தனைப் பேர் என் மனைவி/கணவன் அழகு குறைந்து விட்டார் எனவே திருமணமுறிவை நான் விரும்புகிறேன் என்று நீதிமன்ற வாசலில் நிற்கிறார்கள்.   எத்தனைப் பேர் என் கணவன்/மனைவி குணம் சரியில்லை நடவடிக்கைச் சரியில்லை என்று விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் நிற்கிறார்கள்? என்று கணக்கிட்டுப்பாருங்களேன்.

எத்தனை வீடுகளில் நீ அழகாக இல்லை என்று சண்டையிடுகின்றனர்? எத்தனை வீடுகளில் உன் குணம் சரியில்லை, பேச்சு சரியில்லை, நடந்துக் கொள்ளும் விடும் சரியில்லை, சந்தேகப்படுவது சரியில்லை, மற்றவர்களோடு பழகுவது சரியில்லை என்று சண்டை நடக்கிறது?

அழகான மனைவியை / கணவனை உடையவர்கள் எத்தனைப்பேர் தன் மனைவி / கணவன் வேலைக்குச் செல்லும் இடங்களில் ஒழுங்காக இருப்பானா/ளா என்று சந்தேகப்பார்வையோடு வாழுகின்றனர். எத்தனை முறை தொலைப்பேசியில் அழைத்து அவர்களின் இருப்பிடம் நடைமுறைகளை கண்காணிக்கிறோம்.

குணசாலியான பெண்ணை / கணவனைப் பெற்றவர்கள் எவ்வளவு நிம்மதியாக தன் துணை பணிக்கு சென்று வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ளுகின்றனர். பிற பால் மக்களுடன் பழகுவதை எவ்வளவு நேர்மறையாக எடுத்துக் கொள்ளுகின்றனர்.

குடும்ப வாழ்வின் மகிழ்ச்சி என்பது அழகில் தான் இருக்கிறது என்ற நிலைக்குள் செல்லாமல் நல்ல குணங்களில் தான் இருக்கிறது என்று உண்மையை உணர்ந்துக் கொண்டு திருமண வரன்களைப் பார்க்க வேண்டும். அழகானவர்கள், நல்ல கலரானவர்கள் குணம் இல்லாதவர்கள் என்று நான் கூறமுன்வரவில்லை மாறாக நிறத்தைக் கொண்டு மாத்திரம் வரன் தேடக்கூடாது என்பதையே நான் கூறவிரும்புகிறேன்.     

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்