பொருந்தாத, பொருந்தும் திருமணம்


உத்திரபிரதேசம் மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு இரண்டாவது வாய்ப்பாடு தெரியவில்லையென்று மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணத்தன்று தான் மணமகனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததும் போய், மணக்கோலத்தோடு வந்த மணமகனிடம் ஒரு கேள்வியைக்கேட்டார். " 2ம் வாய்ப்பாட்டை கொஞ்சம்சொல்லுங்க" திகைத்தார் மணமகன். படிக்காத மாப்பிள்ளையை கட்டிவிடக்க்கூடாது என்று நினைத்த மணமகள், 2ம் வாய்ப்பாட்டை சொல்லத்தெரியாத மாப்பிள்ளையை reject செய்தாள். பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்து படுக்காதவரோடு திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டாள். மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகளை சமாதானம் செய்ய முயற்சித்தும் தோல்வியுறவே திருமணத்திற்கு வந்தவர்கள் வருத்தத்தோடே நடையை கட்டினார்கள். இது தினசரி நாளேட்டில் வெளிவந்த செய்தி.

படித்தவர்கள் படிக்காதவர்களோடு திருமணம் செய்தால் சிக்கல்கள் வரலாம். ஆனால் எல்லாருக்கும் வருவதில்லை. திருமணத்திற்கு முன்பே தான் படிக்காத மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம், சம்பாதிக்கிறார், திறமை இருக்கிறது போதும் என்ற மனப்பான்மையுடைய பெண்கள் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்வதை நாம் காண இயலுகிறது.

அதைப் போல் நன்கு படித்த ஆண்கள் படிக்காத அல்லது தன் அளவிற்கு கற்காத பெண்களை திருமணம் செய்து வெற்றியுள்ள வாழ்வு வாழ்வதையும் காண முடிகிறது. நாம் சம்பாதிக்கிறோம், நன்றாக படித்திருக்கிறோம், நம் மனைவி நன்றாய் குடும்பத்தை, பிள்ளைகளை பார்த்துக்கொண்டால் போதும். வருவாய் இருவர் சம்பாதிக்க நினைத்தால் குடும்பம் சீராய் செல்லாது என்று நினைக்கிற ஆண்கள் பலர் இருக்கின்றனர்.

நண்பர் ஒருவரை அரசு அலுவலர்களுக்கான கூட்டத்தில் பார்த்தேன். என்ன இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டேன். என் மனைவி meetingல் கலந்துக்கொள்ள வந்திருக்கிறாள். அவளை அழைத்துச் செல்வதற்காக காத்திருக்கிறேன் என்றார். அவர் மேல்நிலைக்கல்வி கற்காதவர் தான், ஆனால் அவர் மனைவி நன்றாக படித்தவர், வேலைபார்ப்பவர். அதில் அவர் மகிழ்ச்சிக்கொள்ளுகிறார். அவர் மனைவியும் தன் கணவர் கற்காதவர் என்று தெரிந்தே திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்.

 கல்வி தான் வாழ்வை தீர்மானம் செய்கிறது என்று நினைப்பது தவறு. கல்வி முக்கியம், சமமாக கல்வி பெற்றிருப்பது சிறப்பானதே. அதேவேளையில் கல்வி அதிகமாக கற்றவர்கள், குறைவாக கற்றவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்போது மனத்தாங்களோடு திருமணம் செய்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுடைய வற்புறுத்தலின் பெயரிலோ, பணம் அதிகமாக வருகிறது என்றோ திருமணம் செய்துவிட்டு பின்னாட்களில் கல்வி கற்காத நபரைத் திருமணம் செய்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடாது.

கல்விகற்றவர்கள், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது தங்களது துணையை குறைத்து பேசவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் .

கல்வியில் தனக்கு ஈடாக துணையும் பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் திருமணத்திற்கு முன்பே பெற்றோர்களிடம் கூறி வெளிப்படையாக நடந்துக் கொள்ளவேண்டும். திருமணத்திற்கு பின்பு இப்படி திருமணம் செய்துவிட்டோமே என்று வருத்தப்படக்கூடாது. பிறரை இழிவாக நடத்தக்கூடாது . 

படித்தவர்களைக்காட்டிலும் பல படிக்காதவர்கள் நல்ல குணம் நிறைந்தவர்களாகவும், சூழலுக்கு ஏற்ப பிறருக்கு நன்மைச்செய்து பெயர் பெற்றவர்களாகவும், ஞானமாய் செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். "...எவன் நன்மைச் செய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்" (ரோமர் 12:10) பிறருக்கு உதவிடும் குணம், பிறரோடு இசைவாகச்செல்லும் குணம், மனரம்யமாய் நடந்துக்கொள்ளும் மனநிலை, குறைந்த வருவாயிலும் குடும்பத்தை செவ்வனே நடத்திச்செல்லும் மனப்பான்மை, பிள்ளைகளை சரியான பாதையில் நடத்திச்செல்லும் குணம், கர்த்தருக்குப்பயந்து பரிசுத்தமான வாழ்வை வாழும் குணாதிசயம், கணவன்/மனைவியை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ளும் மனப்பான்மை போன்றவற்றை எந்த கல்லூரியும் கற்றுக்கொடுப்பதில்லை. எனவே தான் கல்வி கற்றவர்களை விட கல்வி கற்காதவர்கள் நீதிமன்ற வாசலை அணுகாமல் இருக்கின்றனர் போலும்! 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்