தடுமாற்றத்தில் உதிக்கும் திருமணம்


தாவீதுக்கு அம்னோன் என்ற மகன் இருந்தான். அவன் சில நாட்களாக சாப்பிடாமல் உடல் மெலிந்துக் கொண்டே போனான். அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொண்ட யோனதாப் என்பவன் ஒரு குறுக்கு வழியை அவனுக்கு கூறுகிறான். அதை அப்படியே தன் தகப்பனிடம் கூறுகிறான். உடனே தாவீதும் தாமாரை அழைத்து தன் மகனாகிய அம்னோனுக்கு பனியாரம் சுட்டுக் கொடுக்கக் கூறினான். அவனோ தவறிழைத்துவிடுகிறான்.

"பிற்பாடு அம்னோன் அவளை  மிகவும் வெறுத்தான். அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு  என்று அம்னோன் அவளோடு சொன்னான்".(2சாமு :3:15)

இவ்வாறு திருமறையில் இடம்பெற்ற செயல் ஒன்று இரண்டு என்பது பல மடங்காக பெருகி குடும்ப வாழ்வை இன்று சிதைத்து வருகின்றன. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வலைத்தளங்கள் எல்லாம் காதலைப் பூதாகரமாக ஊதிப் பலூனைப் போல் பெரிதாக்கிவிடுகிறது. ஆனால் அந்த பலூன்கள் சீக்கிரமாக வெடித்து விடுகிறது.

வெறும் உடல் தோற்றத்தை மாத்திரம் (Infatuation) கவர்ச்சியை மாத்திரம் மனதில் கொண்டு முடிக்கப்படும் திருமணங்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளுகிறது. குறிப்பாக பணம் படைத்த நன்றாக படித்துக் கொண்டிருக்கிற கல்லூரி மாணவிகள் ஆட்டோ ஓட்டுனருடனோ, கூலித் தொழிலாளியுடனோ திடீர் திருமணம் செய்துக் கொள்வதும், காவல் துறையினர் முன் தங்கள் பெற்றோரை துச்சமாக மதித்து கழுத்தில் போட்டுள்ள செயின் போன்றவற்றை கழற்றி பெற்றோரிடம் வீசி எறிந்து விட்டுப் போகிற திருமணங்களை, நாம் அலசிப்பார்க்கும் போது அவர்கள் வாழ்வு மிகவும் சிறப்பாக அமைவதில்லை. நான் இங்கு ஆட்டோ ஓட்டுனருடனோ, கூலித் தொழிலாளியுடனோ திருமணம் செய்வது தவறு என்று சொல்ல வரவில்லை. திடீரென்று பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெற்றோரை தூக்கி எறிந்து விட்டு புதிய ஒருவரை நல்லவர் என்று நம்பிச் செல்வதில் உள்ள சிக்கல்களையே குறிப்பிட விரும்புகிறேன். அதோடு உடல் தோற்றத்தால் மட்டும் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை மிகவும் பிரமாண்டமானதாக, (Larger than life) இருக்கிறதைக் காட்டிலும் மிகவும் பெரிதாக நினைத்து செய்துக் கொள்ளும் திருமணங்களையே குறிப்பிடுகிறேன். இவ்வாறு கவர்ச்சியினால் நிறைவேறும் திருமணங்கள் நீர்குமிழியைப் போல உடைந்து விடுகிறது. அம்னோன் வாழ்விலேயும் அப்படித்தான் நடந்து விட்டதை அறிந்துக் கொள்ளலாம்.

கிறிஸ்தவ வட்டாரங்களிலும் நன்றாக பாடுகிறவர்கள், இசை வாசிக்கிறவர்கள், முன்னால் நின்று நிகழ்ச்சிகளை நடத்துகிறவர்கள் எளிதாக பிறரால் ஈர்க்கப்படுகிறார்கள். இவர்களுடைய பாடலை எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும், எப்பொழுதும் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று திருமணத்தைச் செய்துக் கொள்கிறவர்கள், நாளடைவில் கணவனோ/மனைவியோ வீட்டில் பாடிக்கொண்டும், இசையை வாசித்துக் கொண்டேயிருந்தால் எரிச்சல் மேலோங்கி இசைக்கருவிகளை உடைத்துவிடுவேன் என்று மிரட்டும் அளவிற்கு திருமணம் செய்பவர்கள் சென்று விடுவார்கள். ஏன்? ஒருவரின் திறமையினால் உண்டாகும் உணர்ச்சி என்பது பாடல் கேட்பதோடும், இசையை மீட்டுவதைக் கேட்பதோடும் நின்றுக் கொள்ளவேண்டும். அதைத் தாண்டி உறவை வளர்த்துக் கொள்ள நினைத்தால் அது உங்கள் தவறு. ஒருவரின் திறமையை மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானவரா/ளா என்று சிந்தித்து திருமணம் செய்யவேண்டும்.

கவர்ச்சி (Infatuation) என்பது நாளடைவில் சலித்துக் போகிற ஒன்றாகவே மாறுகிறது. மருத்துவர் அழகான செவிலியரைத் திருமணம் செய்வதும், மிகப்பெரிய தொழில் அதிபர்கள் அழகான நடிகைகளைத் திருமணம் செய்வதும் பலவேளை கவர்ச்சிக்காகவே. ஆகவே தான் இந்த திருமணங்கள் நீர் குமிழிப் போல் சீக்கிரமாக காணாமல் போய்விடுகிறது. சலித்துப் போய்விடுகிறது.  எனவே இறை சமூகத்தில் - பொறுமையோடு அமர்ந்து, நிதானத்தோடு திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டவேண்டும்.                   

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி