ஒரே சரீரம் இரு சிந்தனை


ஜீன் ரூஸ்ஸோ என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் இருந்தார். அவருடைய கருத்துக்கள் அந்த நாட்டை அரசாளுபவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாளாக நாளாக அவருடைய கருத்துக்கள் மிகவும் முரண்பட்டுப்போகவே அவரை கொலைச்செய்வதற்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.

இதைக்கேட்டு என்னச்செய்வதென்று அறியாமல் இருந்தபோது, அதே நாட்டைச் சார்ந்த வால்டேர் என்ற மற்றொரு அறிஞர் ஒரு ஆளை ரூஸ்ஸோவின் வீட்டிற்கு அனுப்பி, தன் வீட்டில் வந்து ஒளிந்துக்கொள்ளுமாறு அழைத்தார். ரூஸ்ஸோவும் வால்டேர் வீட்டில் போய் அடைக்கலம் அடைந்தார். அவர் வீட்டிற்குள் நுழைந்த போது வால்டேர் இவ்வாறு கூறினார். "உம்முடைய கருத்துக்கள் எதனுடனும் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. இருப்பினும் உம்முடைய கருத்தைச் சொல்ல உமக்கு உரிமையிருக்கிறது . அதற்காக என் உயிரைக்கொடுத்தாவது நான் உம்மைக் காப்பேன்." என்றார். இதனை "மனிதர்கள் மரபுகள் மதிப்பீடுகள்" என்ற புத்தகத்தில் வாசித்த போது ஒரு உண்மைப் புலப்பட்டது. குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒரே எண்ணத்தில் இருந்தால் மட்டும்தான் வாழ முடியும் என்று நினைப்பது தவறு.

வெவ்வேறு இடங்களில் கல்வி கற்று, வெவ்வேறு குடும்ப சூழலில் வளர்ந்து, வெவ்வேறு சமூக மதிப்பீடுகளை மனதில் ஏற்றுக்கொண்டு வளரும் ஒரு வாலிபனும், வாலிபப்பெண்ணும் குடும்பம் என்ற பந்தத்திற்குள் நுழையும் போது வேற்றுமைகள் எளிதாக வெளிப்படும். 

என்ன இப்படி பண்ணுகிறாய்? ஏன் இவ்வாறு பேசுகிறாய்? ஏன் இவ்வாறு மற்றவர்களிடம் நடந்துக்கொள்ளுகிறாய்? ஏன் மற்றவர்களோடு இணக்கமாய் செயல்பட மாட்டேன் என்று முரண் பிடிக்கிறாய்? ஏன் untime ல் phone பேசுகிறாய்? ஏன் இவ்வளவு நேரமாய் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் நான் செய்கிறதற்கு எதிர்மறையாய் நடந்துக்கொள்ளுகிறாய்? உன் நடவடிக்கைகள் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! என் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் உன் செயல் விகற்பமாக இருக்கிறது!! இப்படிப்போனா நாம் இருவரும் சேர்ந்து வாழ்வது இயலாத காரியம்!!!

திருமணமான புதிதில் இவ்வாறு வேற்றுமைகள் எளிதில் வெளிப்படலாம். ஆனால் சில வேற்றுமைகள் சூழல் நிமித்தமாக மாறலாம். சிலது மாறாமல் இருக்கலாம். என் மனைவி /கணவர் இப்படிப்பட்டவர் தான் என்று ஏற்றுக்கொள்ளுதல் மிக சிறப்பானது. ஏற்றுக்கொள்ளாதவரையில் அதுவே மிகவும் பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது .

வெவ்வேறு சிந்தனைகள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழக்கற்றுக்கொள்ளுதல் அவசியம். கணவனும் மனைவியும் எப்பொழுதும் ஒன்று போல் தான் சிந்திக்க வேண்டுமா என்றால் இல்லை. இருப்பினும் முடிவுகள் எடுக்கும்போது யாருடைய சிந்தனை இதில் சிறந்தது என்று முடிவுக்குள் வர வேண்டியது அவசியம்.

குறிப்பாக பிள்ளைகள் படிப்பதைக்குறித்து கணவன் மற்றும் மனைவியிடையே மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் முடிவெடுக்க வரும்போது பிள்ளையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முன் வர வேண்டும். திருமறைக் கூறுவதுபோல் "நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்." (பிலிப்பியர் 2:2,3) என்பது போல் நடந்து கொள்ள வேண்டும்.

நான் கூறிய கருத்து தான் இறுதியானதாக இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காமல், சரி அவர்கள் கூறுவதிலேயும் நியாயம் இருக்கும், நன்மையானதாக இருக்கும் என்று விட்டுக்கொடுக்க முன் வர வேண்டும். இவ்வாறு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டு, இணைந்து செயலாற்றும் போது குடும்பம் அறிவிலேயும், அன்பிலேயும் வளர்ந்து பெருகும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி