உங்களிடம் இருப்பது என்ன?


கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையே 1961 முதல் 1989 வரை மிகவும் பிரிவினையாய் இருந்தது. இச்சூழலில் கிழக்கு ஜெர்மனி மக்கள் தங்கள் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்கும்படியாக தங்கள் நாட்டில் உள்ள குப்பைகளை சுவரைத்தாண்டி மேற்கு ஜெர்மனிக்குள் போட்டனர். மேற்கு ஜெர்மனி மக்கள் இதைப்பார்த்த போது என்னச் செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவை எடுத்தனர். தங்களால் முடிந்த அளவு பழங்களை சேர்த்து அவைகளோடு ஒரு குறிப்பையும் எழுதி கிழக்கு ஜெர்மனிப்பக்கமாகப் போட்டனர். கிழக்கு ஜெர்மனி மக்கள் அதைப் போய் பார்த்தபோது அதில் ஒரு வாசகம் இருந்தது "நீங்கள் தந்தவற்றிக்கு நன்றி. எங்களிடம் இருப்பவற்றை தான் உங்களுக்குத் தரமுடிந்தது". இதைப்பார்த்த கிழக்கு ஜெர்மனி மக்கள் கண்கலங்கினர். அந்த தவறை மீண்டும் செய்யவில்லை.

திருமண வாழ்விற்கு ஆயத்தப்படுகிறவர்களுக்கும், திருமண வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்கும் முன்பாக நாம் எழுப்பவேண்டிய கேள்வி உங்களிடம் இருப்பது என்ன? நாம் பார்க்கிற T.V நிகழ்ச்சிகள், பிற குடும்பங்களில் நாம் பார்க்கிற காரியங்கள், நமது பெற்றோர் நடந்துக் கொள்ளுகிற விதங்கள், Network வழியாக சேகரிக்கிற காரியங்கள் எல்லாம் நமது இதயமாகிய பொக்கிஷத்திற்குள் சென்று சேருகிறது. அவைகள் அவ்வப்போது அன்பாகவோ அல்லது எரிச்சல்களாகவோ வெளிப்படுகிறது. திருமறை கூறும் வண்ணமாக நல்ல மனுஷன் தன்னுடைய இருதயத்திலிருந்து நல்ல பொக்கிஷத்தை தனது மனைவிக்கு கொடுக்கலாம், கெட்ட மனுஷன் கெட்ட பொக்கிஷத்தை தனது மனைவிக்கு கொடுக்கலாம். கெட்ட மனுஷன் கெட்ட பொக்கிஷத்தை கோபமாக எரிச்சலாக, சந்தேகமாக, சண்டையாக, வன்முறையாக வெளிப்படுத்தலாம்.

என் மனைவி என்னிடம் இவ்வாறு நடந்துக் கொண்டதால் தான் நான் இவ்வாறு செயல்பட்டேன் என்று விளக்கம் கொடுக்கலாம். மற்றவர்கள் நம் மீது குப்பைப் போன்ற சந்தேகம், எரிச்சல், வைராக்கியம், தீமைச் செய்தல், பிறரை அடக்கி வைத்தல் என எதைக்கொண்டு நம்மை தாக்கினாலும் நாம் அன்பு, நட்பு பாராட்டுதல், மென்மையாக நடந்துக்கொள்ளுதல், மெதுவாக பிரதியுத்திரம் கொடுத்தல், தாழ்மையாக நடந்துக் கொள்ளுதல் போன்ற நல்ல பொக்கிஷத்தை எடுத்து நமது துணைக்கு முன்பாக தொடர்ந்து வைக்கப் பழகினால் அவர்களே வெட்கப்பட்டு, தன் செய்கைக்காக கண்கலங்கும் நாட்கள் வரும். 

ஒரு முறை ஒரு நபர் தன்னுடைய வாகனத்தை ஒட்டிக் கொண்டு சென்றார். எதிராக வந்த வாகனம் ஓன்று தாறுமாறாக வந்தது. ஆனால் ஒழுங்கீனமாக ஒட்டிய ஓட்டுநர், ஒழுங்காக ஒட்டிய நபரைப்பார்த்து திட்டினார். ஆனால் அந்த நபரோ அதைச் சட்டைச் செய்யவே இல்லை. அருகில் இருந்த அவரின் நண்பர் அவரைப்பார்த்துக் கேட்டார்.நீங்கள் ஒழுங்காகத் தானே வண்டியை ஒட்டினீர்கள், ஆனால் நீங்கள் பதில் சொல்லாமலே வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் கூறினார்.  அவன் மனதில் அதிகமான குப்பையை சுமந்துக் கொண்டு வருகிறார்.யாரிடமாவது கொட்டவேண்டும் என்று முற்படுகிறான். அதற்கு நாம் இடங்கொடுக்கக் கூடாது.நாம் பேசினால் குப்பையை நம்மிடம் தட்டிவிடுவான் நாம் பேசாவிட்டால் அவன் குப்பையை அவனே சுமந்துச் செல்லுவான் என்றார்.

அன்பிற்குரியோரே குடும்பவாழ்வில் ஒருவர் பயங்கரமாக சண்டையிடுகிறார் என்றால் சற்று விலகிக்கொள்ளுங்கள் நீங்கள் பதிலுக்குப் பேசி உங்கள் நீதியை நிலைநாட்ட முற்படாதிருங்கள். பொறுமையாக இருந்தால் அவர்கள் கோபங்களை உங்களிடம் முழுமையாக காட்ட முடியாது. பதிலுக்கு பதில் செய்வது கடவுள் பணி அந்த பணியை நாம் செய்யவேண்டாம். பதிலுக்குப் பதில் பேசாமல் இருப்பது நமது பணி. நாம் இறைவனின் பிள்ளைகள் இறைவனின் குணாதிசயங்கள் நம்மிடம் வெளிப்பட நாம் இடங்கொடுப்போம். அப்பொழுது குடும்ப வாழ்வு இனிமையாக அமையும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி