மாற்றுத்திறனாளியின் மீது அன்பு
பெரிய மனம் படைத்த பெண்ணுக்கு தியாகமனம் இல்லை என்பது பின்பே தெரியவந்தது. திருமண வரன் பார்க்கும் போது மாற்று திறனாளிகளாக உள்ள பிள்ளைகளுக்கு வரன் கிடைப்பது தாமதமாகும் போது ஏதாவது ஏழையாய் இருக்கிற குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணையோ அல்லது பையனையோ பார்த்தால் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று தப்புக்கணக்குப் போடுகின்றனர் பெற்றோர்கள் அல்லது உறவினர்களில் ஒருவரைப் பார்த்து திருமணம் செய்தால் நம் பிள்ளையைப் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று கணக்கிடுகின்றனர்.
ஆனால் இந்த கணக்கிற்குள் மணமகனோ அல்லது மணமகளோ வருவது இல்லை. கரு கருத்து வரும் மேகம் மழைபெய்யாமல் மெதுவாக கலைந்துச் செல்வது போல் சென்று விடுகின்றனர். குடும்பத்தில் வறுமை நிமித்தமாக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும், அவர்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் பொய்த்துப் போவதை அவர்கள் பெற்றோரிடம் சொல்லாமல், மனதிற்குள் போட்டு பூட்டிவைத்துக் கொள்வதால், சுயம் அவ்வப்போது வெளிப்பட்டு மாற்று திறனாளிகளை வேதனைக்குள்ளாக்கி விடுகின்றனர்.
தன்னுடைய நண்பர்களோடு தன் வாழ்க்கையை ஒப்பிடும் போது மற்றவர்களைப் போல் நம்மால் வெளியே சுற்ற முடியவில்லையே என்ற உணர்வுகள் மேற்கொள்ளும் போது பாம்பைப் போல விஷத்தைக் கக்கி விடுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அதிகமாக அன்பு வைத்திருப்பார்கள். மற்ற பிள்ளைகளைக்காட்டிலும் அதிகமாக நேசித்திருப்பார்கள் அதே பாசத்தை, அன்பை வருகிற மருமகனோ/மருமகளோ செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவைகளில் சற்று குறைந்தாலும் பெற்றோர்களால் அதை சகித்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் மருமகள்/மருமகனுக்கும் மாற்றுதிறனாளிப் பெற்றோருக்கும் இடையே பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து விடுகிறது. இதன் விளைவாகவே குறைந்த காலக்கட்டத்திலே மாற்று திறனாளிகளின் பெற்றோரை கழற்றி விடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் மருமகனோ/மருமகளோ!
மாற்றுதிறனாளியின் மீது அன்புக்கொண்டு, கரிசனைக் கொண்டு உண்மையாய் வருகிறவர்களுக்கு கடவுளின் நிறைவான ஆசியுண்டு. காரணம் மாற்று திறனாளிகள் கடவுளின் அன்பிற்குரிய பிள்ளைகள். அவர்களோடு குடும்ப வாழ்வை பகிர்ந்துக் கொள்வது என்பது கடவுளுக்குக் தொண்டு செய்வதற்கு சமானம். இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசுவானவர் குறிப்பிடும் "சிறுவர்கள்" இந்த மாற்றுத் திறனாளிகளே. எனவே உண்மையான அன்புக் கொண்டு, தியாகம் கொண்டே திருமணம் செய்ய வேண்டும். பொருளாதார அடிப்படையை மட்டுமே மனதில் கொண்டு செய்தல் கூடாது.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment