அம்மா பொய் சொல்றீங்க
பிள்ளைகளுக்கு நேர்மையையும், உண்மையையும், நீதியையும் கொடுத்து வளர்த்தாலும் சில வேளைகளில் நாம் பொய் சொல்ல வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் இவைகளை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்.
ஆனால் பெற்றோர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பீடுகளையோ அல்லது மோசமான மதிப்பீடுகளையோ நாம் கொடுத்துக்கொண்டேத் தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. காந்தியடிகள் வாழ்க்கையில் அவருடைய பெற்றோர்கள் பக்தி நூல்களையும், சான்றோரின் வாழ்க்கையையும் படிக்க கொடுத்து வளர்த்தனர். சமய நூல்களின்படியேயும், நல்ல சிறந்த மனிதர்களைப்போல் வாழ்வதும்தான் சிறந்த வாழ்க்கை என்று அவரின் இரத்தத்தில் ஊறிவிட்டது. சிறுவயதில் சரவணன் என்பவனின் வாழ்க்கை சரிதையை படித்தபோது அவர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இதனால் பெற்றோரை மிகவும் மதிப்பவராக மாறினார். அதைப்போன்று அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த போது , அரிச்சந்திரன் போல் உண்மையாக வாழ வேண்டும் என்று உறுதியோடு காந்தி வாழ ஆரம்பித்தார்.
திருமறை கூறுகிறது பிள்ளையாண்டவனை நடத்த வேண்டிய வழியில் நடத்து அப்பொழுது அவன் முதிர்வயதிலும் விடாதிருப்பான். நல்ல வழிகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போமானால் அவர்கள் பெரியவர்களாக வளரும்போது வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியான வாழ்வையும் பெற்றுக்கொள்வர். அதே வேளையில் பொய் , ஏமாற்று, பிறர் பொருளை அபகரித்துக்கொள்ளுதல், புறங்கூறுதல், பிறரை அவ மரியாதை செய்தல், பெரியவர்களை இழிவாக நடத்துதல், கோபம், சண்டையிட்டு பொருள்களை உடைத்தல் போன்ற தவறான தகவல்களையோ அல்லது மதிப்பீடுகளையோ அவர்களுக்குக் கற்றுக்கொடுப்போமானால் அவர்களின் பிற்கால வாழ்க்கையானது அமைதியற்ற, மன நிம்மதியற்ற வாழ்வாக மாறிப்போகும்.
பிள்ளைகளை இறைபக்தியில் வளர்ப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. திருமறையைப் படிக்கும்போது நல்ல மனிதர்களின் வாழ்க்கை முறையானது அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம்" என திருமறை கூறுகிறது. நமது பிள்ளைகள் எப்படிப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை நாம் நேரடியாக கூறமுடியாததை திருமறை அவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும்.
நாம் எதற்க்கெடுத்தாலும் பொய்யையும், பிறரை அவதூறாகவும் பேசிக்கொண்டே இருப்போமானால், நம் பிள்ளைகளின் வாய் நிறைய பொய்யையேக் காணலாம். சூழல் நிமித்தமாக ஒரு நன்மைக்காக பொய் சொல்வது குறித்து மேற்கண்ட சம்பவத்திலே பார்த்தோம். அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது. ஆனால் எதற்க்கெடுத்தாலும் பொய் சொல்வதும், ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் கூறுவதும் தவறான வாழ்விற்கு வழிநடத்திவிடும். (கொலோ 3:9)
நல்ல தகவல்களுடன் வளர்க்கப்பட்ட தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா போன்றோர்களின் பெயர்களைத்தான் ராஜாவினால் மாற்ற முடிந்ததே தவிர அவர்களிடம் காணப்பட்ட சிறந்த குணங்களை மாற்ற இயலவில்லை. ராஜாவின் உணவினாலும், மதுபானத்தினாலும் தங்கள் உடலை மோசம்போக்கக் கூடாது என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு செயல்பட்டதை காணமுடிகிறது.
நம்முடைய பிள்ளைகள் உண்மையுள்ளவைகளிலும், ஒழுக்கமுள்ளவைகளிலும், நீதியுள்ளவைகளிலும், கற்புள்ளவைகளிலும், அன்பான காரியங்களிலும், நல்ல புகழ் உண்டாக்கும் நற்செயல்களிலும் வளருவதற்கு நாம் உதவியாக இருந்தால், இறைவனும் நமது பிள்ளைகளோடு இருந்து அவர்களை வழிநடத்துவார். (பிலிப்பியர் 4:8)
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment