குடும்பத்தில் பணிந்து நடப்பது கோழைத்தனமல்ல


குடும்பத்தில் கணவனுக்கு அல்லது மனைவிக்கு பணிந்து நடந்தால் மற்றவர்கள் கோழைத்தனம் என்று கருதுவார்கள் என்று சிலர் எண்ணுகின்றனர். எனவே மற்றவர்கள் சொல்லுகிறபடி நாம் நடக்கக் கூடாது அவர்கள் கட்டளையிடுகிற காரியங்களை எல்லாம் நாம் கேட்கக் கூடாது. அடிக்கடி நான் ஒன்றும் உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவன்/ள் அல்ல என்பதை நிரூபிக்குமாறு எதிர்த்துப் பேச வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

அதே வேளையில் திமிராக நடந்துக் கொள்ளுவது தான் வீரம் என்று ஆணோ/பெண்ணோ நினைத்து செயல்படுகின்றனர். நானும் உன்னைப்போல கைநிறைய சம்பளம் வாங்குகிறேன். உன்னை விட நான் பணிபுரிகிற இடத்தில் உயர்ந்த அந்தஸ்து இருக்கிறது. நான் கூப்பிட்டால் ஓடி வந்து என்ன என்று கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு "பெல்" அடித்தால் அத்தனை ஊழியர்களும் என்னுடைய மேசைக்கு முன் வந்து நிற்பார்கள். அப்படியிருக்க நான் ஏன் உன் முன் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். நான் இப்படி திமிராகத் தான் நடந்துக் கொள்ளுவேன் என்று தன்னுடைய வீரத்தை காண்பிக்கிற ஆண் மகனையோ அல்லது பெண் பிள்ளைகளையோ காணமுடிகிறது. இப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்கள் இணைந்து வாழ்வதில் சிக்கல்கள் இருக்கிறது.

உலகிற்கு நீங்கள் ராஜாவானாலும் வீட்டிற்கு நீங்கள் கணவனாக இருக்க வேண்டும். உலகிற்கு நீங்கள் இராணியாக இருப்பினும் குடும்பத்தில் நீங்கள் நல்ல மனைவியாக இருக்க வேண்டும். "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவியதுன்டாணால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்". (யோவா 13:14). உலகைப்படைத்தவருக்கே இவ்வளவு தாழ்மை இருக்குமானால் நேற்று முளைத்த காளானுக்கு எவ்வளவு தாழ்மை, பணிவு இருக்க வேண்டும். திடீரென்று நம் கை நிறைய சம்பளம் வாங்குவதால் கணவனை/மனைவியை மதிப்பதை அவமானமாக கருதி திமிருடன் நடப்பது என்ன வீரம் என்று நினைக்கிறீர்களா? கணவன்/மனைவி சொல்வதற்கு ஏன் நாம் பணிந்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

"ஓடும் நதியின் ஓசை" என்ற புத்தகத்தில் ஒரு கதை ஒன்றை வாசித்தேன். அது குடும்ப வாழ்விற்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு சிறுவன் எப்பொழுதும் தன் தகப்பன் சொல்கிறதற்கு எதிர்மாறாகச் செய்துவந்தான். "கதவைத் திற" என்றால் கதவை மூடுவான், "எழுந்து நில்" என்றால் படுத்துக்கொள்ளுவான், "படி" என்றால் தூங்குவான். தகப்பனுக்கு என்னச் செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ தன் மகனோடு பேசியும் அவன் கீழ்ப்படிவதும் இல்லை. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தன் மகனிடம் எதிர்மறையாக கூற ஆரம்பித்தார். கதவை திறக்க வேண்டும் என்றால் மூடு என்று கூறுவார் அவன் வேண்டுமென்று திறந்து வைப்பான். தகப்பனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த சிறுவன் யோசிக்க ஆரம்பித்தான். தன் தகப்பனின் விருப்பத்திற்கு எதிராகச் செய்தாலும் ஏன் இப்பொழுது அவர் கத்துவதில்லை. ஓகோ! அவர் எதிர்மறையாக கூறுவதை நாம் செய்வதால் தான் அவருக்கு மகிழ்ச்சி, நம்மை திட்டுவதில்லை என உணர்ந்தான்.

எனவே இப்பொழுது தகப்பன் எதிர்மறையாக கூறினால் உடனே அவன் செயல்படவில்லை. மெதுவாகக் கேட்டார் "ஏன் நீ செய்யவில்லை?"

இனி எதற்கு கீழ்ப்படியவேண்டும், எதற்கு கீழ்ப்படியக் கூடாது என்பதை நான் தீர்மானித்துச் செய்வேன் என்றான்.

அன்பிற்குரியோரே நமது துணையுடனும் வாழும் போது அவர்கள் மனநிலையை உணர்ந்து பொறுமையோடு செயல்படுங்கள். மாற்றங்கள் விரைவில் வரும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி