பொறுத்தார் குடும்பத்தை ஆள்வார்


தமிழக தலைமைச்  செயலராக வெ.இறையன்பு அவர்கள் பொறுப்பேற்றபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. குடும்ப வாழ்விற்கு ஏற்ற ஒரு கதையை அவர்கள்  "அன்பே அமிர்தம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள். அது ஒவ்வொருவருடைய குடும்ப வாழ்விலும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று.

ஒரு மலையடிவாரம் அருகில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த மருத்துவராகவும், சிறந்த ஆலோசனைகள் கூறுகிறவராகவும் இருந்து வந்தார். ஒரு இளம் பெண் அவரைத் தேடி சென்று தன் கணவன் மிகவும் முரடனாகவும், கோபக்காரராகவும் இருக்கிறார். எனவே அவரை சரிசெய்ய ஏதாவது நல்ல மருந்து ஒன்றைத்  தருமாறுக் கேட்டுக்கொண்டாள்.  

அவளின் நிலைமையை உணர்ந்த அந்த சாது, அந்த மருந்தை தன்னால் உருவாக்கித் தர இயலும். ஆனால் அதற்கு புலியின் மீசை ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்றார் . அதைக் கேட்ட அந்த பெண் அதிர்ந்து போனாள். இதுவெல்லாம் முடியாத காரியமாயிற்றே என்றாள். ஆனால் அவரோ புலியின் மீசை முடியில்லாமல் அதை உருவாக்குவது சாத்தியமல்ல என்று உறுதிபடக்கூறவே காட்டிற்கு செல்ல தீர்மானித்தாள்.  

புலியிடமிருந்து மீசை பிடுங்குவதற்கு திட்டமிட்டு, குறிப்பிட்ட காட்டின் பகுதிக்குள்  சென்று, குகை ஒன்றின் அருகே இறைச்சி துண்டுகளை போட்டுவிட்டு மறைந்து நின்று பார்த்தாள். புலி மகிழ்ச்சியோடு தின்றது. இறைச்சியை தொடர்ந்து போட்டுவிட்டு தன் முகத்தை மெதுவாக காண்பித்தாள்.   

புலி அவளைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போனது. தொடர்ந்து புலியின் கண்களுக்கு முன்னே உணவைப் போட போட அவளுக்கும் புலியின் மீது பயம் போனது, புலியும் உருமல் இல்லாமல், நெகிழ்ச்சியோடு வந்தது. மெதுவாக அருகில் சென்றாள்.தடவிக் கொடுத்தாள். ஒரு நாள் தடவிக்கொண்டே ஒரு முடியைப்  பிடுங்கிக்கொண்டு மெதுவாக நகர்ந்தாள். புலியோ அதைச் சட்டை செய்யவே இல்லை .  

சாதனையை நிகழ்த்திய மகிழ்ச்சியோடு சாதுவிடம் ஓடிவந்து முடியை நீட்டினாள். அவர் மகிழ்ச்சியோடு புலியின் முடி என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, குளிரில் தீயின் முன்பு காய்ந்துக் கொண்டிருந்த அவர் அந்த தீயில் அந்த முடியைப் போட்டார். அதைப் பார்த்த அவள் மூர்க்கத்தோடு என்னச்செய்து விட்டீர்கள் சாதுவே என்றாள்.   

சாது  சற்று அமைதியுடன் இந்த முடியை எப்படிக்கொண்டு வந்தாய் என்றார்? ஆறு மாத காலமாக தான் எவ்வாறு புலியுடன் பழகி அதனிடம் நல் நம்பிக்கைப்  பெற்று முடியைக்கொண்டு வந்தேன் என்று விளக்கினாள் .

புன்னகைத்த சாது அவளிடம், காட்டில் வாழும் புலியையே உன் நடவடிக்கையினால், அன்பினால், பொறுமையினால் அடக்கி விட்டாயே!. உன் கணவன் புலியை விடவா கொடுமையானவனாக, கோபக்காரனாக, தீங்கு இழைக்கிறவனாக இருக்கிறான் என்றார். உன் அன்பையும், பொறுமையையும், அரவணைப்பையும் உன் கணவனுக்குக் கொடு. எளிதாக சரிப்படுத்தி விடலாம். முயற்சி செய் என்றார் .  

காட்டுப்புலியை அடக்கிய மனதோடு சென்றவள், வீட்டுப்  புலியையும் பொறுமையுடன் கட்டுப்படுத்தினாள். மீண்டும் சாதுவை காண வரவேயில்லை.

திருமறையும் "எல்லாவித பொறுமையோடும்" (2 கொரி 12:12) வாழவேண்டும் என்று குறிப்பிடுகிறது . "சந்தோஷத்தோடு கூடிய எல்லா பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்க்காக வேண்டுதல் செய்கிறார் பவுலடியார் (கொலோ 1:11) குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் வரத்தொடங்கியதும் இந்த வாழ்க்கையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று ஓடத்தொடங்கக்கூடாது. பொறுமையோடும் நீடிய சாந்தத்தோடும் அதனை சந்திக்கவேண்டும். குடும்பவாழ்விலேயே பொறுமையில்லாதவர்கள் பெரிய குடும்பமாகிய திருச்சபையில் எப்படி பொறுமையுடன் வாழ இயலும். பொறுமையாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் யாக்கோபு (யாக் 5:11) குடும்ப வாழ்வில் பொறுமையுடன் கணவன்/மனைவிச் செய்கிற தவறுகளை மன்னித்து, பொறுத்து, சீர் பொருந்தப்பண்ணி வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாறு பொறுத்தவர்கள் மட்டுமே குடும்ப வாழ்வில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி