வார்த்தையே வாழ்க்கை
இன்றைய தலைமுறைகள் கடினமான வார்த்தைகளை லெகுவாக எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், சாதாரணமாக வார்த்தைகளை பயங்கரமான வார்த்தைகளாக எடுத்துக்கொள்கிறவர்களாகவே மாறிவிட்டார்கள். வெறும் வார்த்தைகளே வாழ்க்கையை வெறுமையானதாக, பிளவுபடுத்துவதாக அமைந்து விடுகிறது.சாதாரணமாக பேசினதற்கெல்லாம் பிரிந்துப் போகிறார்கள் என்றால் நமது பெற்றோர்கள், பாட்டி தாத்தா எல்லாரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பே இருந்திருக்காது அவர்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் ஒருவர் கடினமாக பேசும் போது மற்றவர்கள் காதுகேளாதவர்கள் போல் இருந்ததினால் தானே. அதனைத் தாண்டி எதோ கோபத்தில் பேசி இருக்கிறார். எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எடுத்துக் கொள்வதில் தான் அமைகிறது.
சுகிசெல்வம் என்ற சொல்வேந்தர் ஒரு அருமையான நிகழ்வை ஒரு மேடையில் குறிப்பிட்டார். ஒருவர் புதிய வீடு ஒன்றினை ஒரு நகரத்திற்கு வெளியே கட்டியுள்ளார். அவர் வீட்டைக் கட்டும் போது அருகில் வீடுகள் எதுவும் அதிகமாக வரவில்லை. அதே வேளையில் இவர் அடிக்கடி வெளி ஊர்களுக்கு போவதற்காக சென்று விடுவார். ஆகவே அவருடைய மனைவி கூறியுள்ளார். வீடு தனிமையாக உள்ளது, நீங்களோ அடிக்கடி வெளி ஊருக்குப் போய் விடுகிறீர்கள் எனவே ஒரு நாய் எனக்கு துணையாய் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். ஆகவே ஒரு நாயை வாங்கி வீட்டில் வளர்த்துள்ளார்கள். ஒரு நாள் காலையில் எழுந்ததும் காபி கேட்டுள்ளார். உடனே மனைவி முந்தின நாள் பாலை எடுத்து காய்த்து கொடுத்துள்ளார்கள். உடனே நாயை அவரிடம் வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருக்கிறது. கூடவே அவரிடம் இருந்த காபியில் கொஞ்சத்தை நாய்க்கு குடிக்க கொடுத்துள்ளார். உடனே மனைவி அடுப்படியில் நின்றுக் கொண்டு, என்னங்க அது நாய்க்கு கொடுக்காதேயுங்க, அது நேற்றுள்ள பால் என்று கூறியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தைக் கூறிவிட்டு இதை எப்படி எடுத்துக் கொள்ளுகிறோமோ அதைப்பொருத்துத்தான் நமது குடும்ப வாழ்வு கட்டப்படும், அல்லது இடிக்கப்படும்.தவறாக எடுக்க வேண்டுமானால் நானும், நாயும் ஒன்றா! நான் இல்லாத இடத்தில் உனக்கு நாயா துணை!! நேற்றுள்ள பாலைக் குடித்தால் எனக்கு ஒன்றும் செய்யாது ஆனால் நாய்க்கு கொடுத்தால் அது சுகவீனமாவிடுமோ. அப்படி என்றால் நான் நாயை விட கேவலமானவனோ !!! இதையே நேர்மறையாக எடுத்துக்கொண்டால் நான் இல்லாத நேரத்தில் உனக்கு நாய் இருப்பது ஒரு பாதுகாப்பு தான்! நாய் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கியே!! பரவாயில்லை எனக்கு சமமா நாயும் உன் மேல் பாசமாயிருக்கு!!!
அன்பிற்குரியோரே ஒரு வார்த்தையை தாய் பேசினால் வேறு விதமாக புரிந்துக்கொள்ளுகிறோம்.அதே வார்த்தையை மாமியார் பேசினால் வேறு விதமாக அர்த்தம் கொடுக்கிறோம். கூட பிறந்த சகோதரர் கூறினால் ஒரு அர்த்தம், கூடவந்து வாழ வந்தவள் கூறினால் வேறு ஒரு அர்த்தம்!
ஒருவர் எப்படித்தான் பேசினாலும் எடுத்துக்கொள்ளுகிற வர்களைப் பொறுத்தே அமைகிறது. வானிலிருந்து மழைப் பொழிகிறது கடலில் விழுகிற தண்ணீர் உப்புத்தண்ணீராக மாறுகிறது, சாக்கடையில் விழும் மழை நீர் சாக்கடையாக மாறுகிறது.கிணற்றில் விழும் நீர் நல்ல நீராக பருகுகிறோம். ஆகவே எடுத்துக் கொள்ளும் விதம் மிகவும் முக்கியம்.நேர்மறையாக எதையும் எடுத்துக் கொள்ளுகிறவர்களை எந்த தடித்த சொற்களும் ஒன்றும் செய்ய இயலாது.
இயேசுவை இகழ்ந்தவர்களையும், முகத்தில் துப்பினவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும், குட்டியவர்களையும் "பிதாவே இவர்களை மன்னியும்" என்ற இனிய சொற்களால் உலகத்தையே அன்பு மயமாக்கினாரே அவரே நமக்கு முன்மாதிரி. தொடருவோம் அவர் மாதிரியை.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment