தவறான தீர்மானங்கள்


வீட்டுக்கு வீடு வாசற்படி. அது இந்தியாவிற்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் பொருந்தும். சீனாவிலே ஒரு வீட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளுக்கு, சில நாட்களுக்குள்ளே மாமியாரிடம் கசப்பு வந்து விட்டது. கசப்பு நாட்களாக நாட்களாக உச்சக்கட்டத்திற்குப் போய் மாமியாரை ஒழித்துக்கட்டி விடவேண்டியது தான் என்ற நிலைக்குச் சென்றுவிட்டாள் மருமகள். ஒரு நாள் ஒரு மூலிகை வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் சென்றாள். ஐயா எங்கள் வீட்டின் கதை இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. எனவே மாமியாருக்கு முடிவு கட்ட ஒரு விஷத்தை தயார் செய்து தாருங்கள் என்று கேட்டாள். சற்று யோசித்த வைத்தியர் தன் வீட்டிற்கு பின் புறத்திலுள்ள மூலிகைத் தோட்டத்திற்குள் சென்றார். ஒரு சிறு பை நிறைய சில மூலிகை இலைகளைக் கொண்டு வந்தார். மருமகள் உள்ளமெல்லாம் குளிர்ந்துப் போனது. வைத்தியர் அவளைப் பார்த்து நான் விஷத்தை தந்து உடனே மாமியார் மரித்துப் போய் விட்டால் வீட்டில் உள்ள அனைவரும் உன் மீது சந்தேகப்படுவார்கள். விஷத்தைக் கொடுத்த நானும் மாட்டிக் கொள்ளுவேன். எனவே இந்த இலைகளைத் தருகிறேன். இவைகளை சமையல் செய்யும் போது இரண்டு இரண்டு இலைகளாக யாருக்கும் தெரியாமல் சேர்த்து விடு. நாளாக நாளாக மாமியார் ஆறு மாதத்திலே சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்து விடுவார்.ஆனால் ஒரு கன்டிசன் , நீ செய்கிற இந்த காரியம் மாமியாருக்கோ, வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக மாமியாரிடம் மிகவும் அன்பாக பேசவேண்டும்,மாமியாருக்குப் பார்த்துப் பார்த்து விரும்பின உணவைச் செய்துக் கொடுக்க வேண்டும். அவங்க கேட்காமலே அனுசரனையான காரியத்தை செய்து நடந்துக் கொள்ள வேண்டும் என்றார். சரி ஆறு மாதம் தானே என்று தலையை ஆட்டிவிட்டு,மூலிகை இலைகளை மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றாள்.இரண்டு இலைகளாக உணவில் சேர்த்து மாமியாருக்குக் கொடுத்தாள்.மாமியாரிடம் அதிகமாக பாசங்காட்டினாள். மாமியாரும் மருமகள் காட்டுகிற பாசத்தை பார்த்து பிரமித்துப் போனாள். இதுவரையிலும் அண்டை வீடுகளில் மருமகளை தரக்குறைவாக பேசின மாமியார் இப்பொழுது மருமகளை உயர்த்திப் பேச ஆரம்பித்தாள்.மருமகளை தன் மகளைப்போல நடத்த ஆரம்பித்தாள்.மருமகளும் தன் தாயைப் போல மாமியார் நடந்துகொள்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.சுற்றுவட்டார பெண்கள் லீலியின் மாமியார் லீலியை உயர்வாகப் பேசுவது அவள் காதுக்கே வந்து சேர்ந்தது. மாமியாரின் அன்பு லீலீயை நிலை குலையச் செய்தது. ஆனால் மாதம் மூன்று தாண்டிவிட்டது. மாமியார் பாதி குழிக்குள்ளேப் போய் கொண்டிருக்கிறதை நினைச்சா லீலீக்கு கொஞ்சம் மனசு பதை பதைத்தது. இந்த மாமியார் இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் நமக்கு நல்லது என்று தோன்றியது. ஓடினாள் வைத்தியரிடம், ஐயா மாமியாருக்கு விஷ மூலிகைக் கொடுத்து மூன்று மாதம் ஆயிட்டே, செத்துருவாங்களோ, காப்பாத்துகிறதற்கு வேறே மூலிகை ஏதாவது இருக்கிறதா என்றாள் லீலீ. நமட்டு சிரிப்பு சிரித்தார் வைத்தியர். கவலைப்படாதே! மாமியார் சாகமாட்டாங்க. நீ சமையலில் சேர்த்த மூலிகை விஷம் நிறைந்தது அல்ல.அது முழுவதும் வைட்டமின்கள் நிறைந்தவை. நீ எப்படியும் உன் மாமியார் மீது அன்பு செலுத்த நினைக்கும் போது மாமியாரும் அன்பு செலுத்த ஆரம்பித்து விடுவாள் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் நல்ல மூலிகையையே கொடுத்தேன் என்றார். நாம் வங்கியில் எதை செலுத்துகிறோமோ அதை வட்டியுடன் திரும்பிப் பெற்றுக் கொள்ளலாம். அது போலத்தான் நாம் யாரிடம் பழகினாலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் அன்பை டெபாசிட் பண்ணிக்கொள்ளவேண்டும்.அப்பொழுது வட்டியுடன் அந்த அன்பை எப்படியாகிலும் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும். அன்பிலே ஒருவருக்கொருவர் கடன் படுங்கள்.வேறு ஒன்றிலும் கடன் படாதிருங்கள். அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும். அன்பு இல்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார் என திருமறையில் அன்பு, அன்பு என்று ஏன் இவ்வளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.நமது கர்த்தர் அன்பானவர், நாமும் அன்பானவர்கள்.பகைவரையும் மன்னிக்கும் அன்பை நாம் கற்றுக்கொள்ளும் போது மாமியார் என்ன? மாமனார் என்ன? கொழுந்தியாள் என்ன? யார் நமக்கு எதிராக இருந்தாலும் அன்பு என்ற ஆயுதத்தால் அனைவரையும் விழத்தட்டிவிடாலாம் ஏனென்றால் உலகத்தின் இறுதியில் நிலை நிற்பதும் அன்பு தான். உலகத்தில் பெரியதும் அன்பு தான். எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்