சரியானதைத் தெரிந்தெடு
வலைத்தளங்கள் பெருகிய பின் குடும்பவாழ்வில் பல்வேறு விதமான மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கூட்டுக்குடும்பங்கள் மறைந்தபின் இளம் தம்பதியினர் வாழ்க்கையானது பல்வேறு சூழல்களுக்குள் கடந்துச் சென்றுவிடுகிறது. முறையற்ற, வரைமுறையற்ற வாழ்க்கையானது எளிதில் சாத்தியமாகிறது. இதனால் குடும்பங்களில் பிரச்சனைகளும், கொலைவெறித்தாக்குதல்களும் நடந்து விடுகிறது.
மதுக்கடைகள் தாராளமாக திறந்துவிடப்பட்டதால் "பார்ட்டி" என்ற பெயரில் குடித்துவிட்டு, மனைவியை நண்பர்களுக்கு தானம் பண்ணுகிற வாழ்க்கைமுறையும் அரங்கேறுகிறது. குடிக்கு அடிமைகளாக பெண்களும் மாறுவதால் முறையற்ற வாழ்க்கைமுறை கட்டுக்கடங்காமல் சென்றுவிடுகிறது. இவ்வாறு செல்லும் நபர்களால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துவிடுகின்றன. இன்றல்ல மன்னர்கள் காலத்திலேயும் இப்படிப்பட்ட தாறுமாறான வாழ்க்கையால் உயிரை இழந்த வரலாற்றை "துரோக சுவடுகள்" என்ற புத்தகத்தில் வாசித்தேன்.அது இன்றைய குடும்பங்களுக்கு விடும் எச்சரிக்கையாக உள்ளது.
காண்டிலிசஸ் என்ற மன்னன் லிடியாவை ஆண்டுவந்தான். தன் மனைவியின் அழகில் மிகவும் பெருமைக்கொண்டான். தன் மெய்காப்பாளனிடம் அதனை மிகவும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டான். உலகிலேயே அவளைப்போன்று சிவப்பானவள் இல்லை, ஆடையற்றிருக்கும்போது அவளைப்பார்க்குமாறு வற்புறுத்தினான். அதற்கு உடன்பட்ட டைகஸ் என்ற மெய்க்காப்பாளன் மறைந்து நின்று பார்க்கிறான்.
இந்த விஷயம் அரசிக்குத் தெரியவே மெய்காப்பாளனை கூப்பிட்டு "நீ தர்மத்தை மீறி என் உடலை பார்த்துவிட்டாய். ஒன்று நீ மடிய வேண்டும் அல்லது என் கணவனைக் கொன்று நீ அரசனாக வேண்டும்" என்று ஆணையிட்டாள்.
இறுதியில் டைகஸ் தன் மன்னனையே கொன்று அரசனாக மாறிவிடுகிறான். தவறான வாழ்க்கை முறைக்கு மற்றவர்களை அழைத்த அரசனின் வாழ்வு பரிதாபமாக முடிவுற்றது.
தவறான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த யாக்கோபின் மகனாகிய ரூபனைப்பார்த்து "தண்ணீரைப்போல தளம்பினவனே நீ மேன்மையடையமாட்டாய்," (ஆதி 49:4) என்று தன் தகப்பனாலே சபிக்கப்பட்டான் . தவறான வாழ்க்கைமுறையை யாரும் இனிமையாகத் தொடர இயலாது. அது தன் மடியிலே தனலை சுமப்பது போல் என்று நீதிமொழிகள் ஆக்கியோன் குறிப்பிடுகிறான். தன்னுடைய ஆடையில் சூடான எரி தனலைச் சுமந்தால் எப்படி நமது உடலுக்கு ஆபத்தை வருவிக்குமோ அதைப்போன்று தான் அமையும் வாழ்க்கையை சிதறடித்துவிடும் .
அப்சலோம் இதைப்போன்று தவறாக தாவீதின் மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான். அவன் வாழ்க்கையும், இதற்கு ஆலோசனை வழங்கிய அகித்தோப்பேலின் வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்துப்போனது.
"உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு." "மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்." (நீதி 5:18,21) ஆண்டவர் படைத்த , உருவாக்கித்தந்த குடும்ப வாழ்வு என்பது பரிசுத்தமுள்ளதாகக் காக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார் .தவறான வாழ்க்கை முறையை குடும்பத்தில் ஒருவர் பின்பற்றினாலும் அது பிறருக்கு மிகவும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாக மாறிவிடும். "குணசாலியான ஸ்திரி தன் புருசனுக்கு கிரீடமாயிருக்கிறாள் . இலச்சை உண்டு பண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்." ("A helpful wife is a jewel for her husband, but a shameless wife will make his bone rot ") (நீதி 12:4) என்று கூறுகிறது. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தலைவலியாக மாறிவிடுவர். எனவே சரியான வாழ்க்கை முறையை பின்பற்றி மகிழ்வோடு வாழ்வோம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment