துணையே துணை
கொரானா மிகுந்த இக்கால கட்டத்தில் ஒரு வயதானவர் தன் மனைவியை இழக்கக் கொடுத்து விட்டார். அந்த பெண்மணியை அடக்கம் செய்யவோ, உயிரை இழந்த பெண்மணியைப் பார்க்க மருத்துவமனைக்கோ யாரும் வரவில்லை. மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாத நிலையில் தன்னுடைய சைக்கிளில் இறந்த மனைவியை வைத்து தள்ளிக் கொண்டே போகிறார். போகிற வழியில் நிலை தடுமாறி சைக்கிள் விழ, தான் நேசித்த இறந்த மனைவியின் சடலமும் கீழே விழுகிறது. தூக்கி வைக்கவோ, சைக் கிளைத் தள்ளிச் செல்லவும் முடியாமல் மனைவியின் அருகில் உட்கார்ந்து அழுதார். இது பலரின் உள்ளத்தை உருக்கியது. கணவன் / மனைவியின் முக்கியத்துவம் நமக்கு எப்பொழுது புரியும் என்றால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தான். கணவன் / மனைவி என்ற உறவானது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கத்தை எந்த ஒரு நண்பர்களும் கொடுக்க இயலாது. காரணம் எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது. எல்லாரும் குடும்பத்திற்குரிய கடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது. என் நண்பன் என்னைப் பார்த்துக் கொள்வான் என்று மனைவி / கணவன் தேவையில்லை என்று உதறுகிறவர்களே சற்று சிந்தித்துப்பாருங்கள். "தேவன் ஏற்ற துணையை உண்டாக்கினார்" என்றால் உங்கள் கணவன் / மனைவி உங்களுக்கு ஏற்ற துணை என்று இறைவன் நினைத்ததால் தான் உங்களை திருமண பந்தத்தில் சேர்த்துள்ளார். ஆனால் நாமோ இறைவன் நியமித்த துணையைக் காட்டிலும் மற்றவர்கள் சிறந்த துணை என்று நினைத்தால் "ஆலமரத்தை நம்பி புருஷனை கைவிட்ட நிலையைப்போல்" மாறி விடும்.
துணையின் முக்கியத்துவம் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை இக்கொரானா காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. 35 வயதான பெண் ஒருவர் நல்ல சம்பளம் வாங்க வேண்டும் என்று தன் கணவன் மற்றும் பிள்ளைகளை விட்டு விட்டு அடுத்த மாநிலத்தில் போய் வேலைச் செய்தார். இக்காலத்தில் கொரானாவினால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு அவரே தன்னுடைய காரை ஓட்டி சென்றார். மருத்துவமனையிலோ இடம் இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. மூன்று மணி நேரமாக தன்னுடைய வாகனத்திலேயே இருந்து ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரித்துப்போனார். இந்த சம்பவத்தை வாசித்த போது எனக்குள் எழுந்த கேள்வி பணம் என்பது முக்கியம், அதை விட குடும்பம் மிகவும் முக்கியம். பணம், பணம் என்று குடும்பத்தை உதறிவிட்டு தூர இடத்தில் போய் சம்பாதிக்கும் போது இப்படிப்பட்ட இக்கட்டான காலங்களில் நாம் அனாதைகளைப் போல் மாறிவிடுகிறோம். இப்படிப்பட்ட சூழல்களில் குறைந்த வருவாய் இருந்தாலும் குடும்பத்தோடு இருப்பதற்கே முக்கியத்துவம் அளியுங்கள். ஒருவருக்கு கொரானா வந்துவிட்டால் நண்பர்களோ, உறவினர்களோ நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. எல்லாருக்கும் உயிர் பயம். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு வரும்போது உயிர் பயத்தையும் தாண்டி கணவன், மனைவி, பிள்ளை என்ற உறவு வட்டத்திற்குள் தன் உயிரையும் பெரிதாக கருதாமல் உணவு, உடை, உதவி என்று பல விதங்களில் கொடுத்து வாழவைக் காப்பாற்றிட முயல்வர்.
எனவே துணையே நமக்குத் துணை.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment