Selection எப்படி


திருமண தகவல் மையத்திற்கு ஒரு நண்பர் அடிக்கடி வருவார். அவர் நன்றாக படித்து அரசு துறையிலே மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தவர். தன்னுடைய பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்து அழகு பார்த்தார். இன்னும் பிள்ளைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வரன் பார்க்க திருமண தகவல் மையத்திற்கு வருவார். எல்லா பிள்ளைகளின் தகவல்களையும் பார்ப்பார். தொலைப்பேசி எண்களை எல்லாம் குறித்துக்கொண்டு போவார். மீண்டும் அடுத்த வாரம் வருவார், தொலைப்பேசி எண்களையெல்லாம் குறித்துக்கொண்டு போவார். சார், கடந்த வாரம் எடுத்துச்சென்ற தொலைப்பேசி எண்களில் பேசிப்பார்த்தீர்களா? ஏதாவது ஒழுங்காகவில்லையா என்றால் பதில் என்ன வரும் என்றால் "ஒன்றும் சரியில்லை சார்... நாம எதிர்பார்க்கிறது மாதிரி ஒன்றும் சரியாக அமைய மாட்டேங்கே" என்று வருத்தப்படுவார். 

நடையாக நடந்து நடந்து திருமண வரன்களைப் பார்த்தவர், பணி நிறைவுப்பெற்றார். ஆனால் திருமண தகவல் மையத்திற்கு அவர் வருவது மட்டும் நிறைவடையவில்லை. 

தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்குத்தான் எவ்வளவு அக்கறை என்பதை நான் உணர்ந்து பார்த்தேன். இவ்வளவு அக்கறைக்கொண்டு பெற்றோர் வரன்களைத்தேடி கண்டு பிடித்தாலும், பிள்ளைகள் இரண்டு மாதங்கள் கூட சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் போய்விடுகின்றனர். பிரிக்நெர் என்பவர் மணவாழ்வில் துணையை தேடுவதைக்குறித்து கூறும்போது "மணவாழ்க்கை வெற்றிகரமாக அமைய, நல்ல வாழ்க்கை துணையைத் தேடிக்கொண்டால் மட்டும் போதாது. நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்."  என்கிறார்.

தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது பெற்றோர் கொண்டுள்ள தவறான கருத்துக்களைப்பற்றி அ. அல்போன்ஸ் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 

  1. தங்கள் மருமகள்/ன், மகனின்/ளின் தேவையை விட, தங்களது தேவைகள் பூர்த்திச்செய்கிறவர்களாக இருப்பார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.
  2. தங்களது வருங்கால மருமகள் தங்களது வீட்டிற்கு நன்றாக வேலைச்செய்கிற ஊதியமற்ற வேலைக்காரியாக எதிர்பார்க்கின்றனர்.
  3. தங்களின் மகனின் திருமணத்திற்கு முக்கியமாக எதிர்ப்பார்ப்பது வரதட்சணையே. எவ்வளவு தங்கம், பணம், கார், பைக், நிலம் கிடைக்கும் என்று அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு 
  4. மணமகள்/ன் சிறப்பான பண்பை விட, குடும்ப அந்தஸ்து, பொருளாதாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலை 
  5. மணமகள்/ன் ஒழுக்கத்தை மட்டும் பார்க்கிறவர்கள் அதைத்தாண்டி சமூகத்தில் எவ்வளவு ஈடுபாடு உள்ளது, பிடிவாத குணமுள்ளவரா, எதற்க்கெடுத்தாலும் எரிச்சல் கொண்டு செயல்படுபவரா, மூர்க்கமாய் சண்டையிடுகிறவரா, சந்தேக குணங்கள் உள்ளவரா என்று சிந்திப்பது இல்லை. இவைகளெல்லாம் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியை சிதைக்கும் காரணிகள் என்பதை உணர்ந்துக்கொள்வது இல்லை. 

திருமறை என்னக்கூறுகிறது "குணசாலியான ஸ்திரியைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்." (நீதிமொழிகள் 31: 10,12) நம்முடைய பிள்ளைகள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறோமா அல்லது பணத்தில் மிதந்து, அழுதுக்கொண்டு வாழவேண்டுமா? என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்