குடும்ப வாழ்விற்கு உலை வைக்கும் குடி


பிஷப் சார்ஜெண்ட் மறுவாழ்வு மையத்திற்கு குடியிலிருந்து விடுதலைப் பெறுவதற்காக அநேக ஆண் நண்பர்கள் வருவதுண்டு. அவர்களிடம் நீங்கள் குடிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்று எழுதக்கூறினால், ஏறக்குறைய 99% பேர் தங்கள் மனைவி தான் காரணம் என்பார்கள். மற்ற காரணங்களாக பொருளாதாரப் பிரச்சனை, மன நிம்மதியில்லை, ஏமாற்றம் போன்ற காரணங்களையும் குறிப்பிடுவர்.

தொடர்ந்து அவர்களிடம் பேசும்போது என் மனைவி நடத்தை சரியில்லை, எனக்கு நம்பிக்கைக்குரியவளாக இல்லை, மற்ற ஆண்களோடு பேசுகிறாள், சொன்னாலும் கேட்பதில்லை என்று புலம்புவார்கள். அவர்கள் மனைவியிடம் கேட்டால், ஐயா இவர் வீணாக சந்தேகப்படுகிறார், எனக்கு இவர் சொல்வதைக்கேட்கும் போது அவமானமாக இருக்கிறது. எனக்கு வயது 50 ஆகிறது. என்னைப்போய் சந்தேகப்படுகிறார் என்பார்கள். 

Dr.அனிதா ராவ் அவர்கள் கூற்றைக்கவனிக்கும் போது பிரச்சனையின் வேரை நாம் புரிந்துக்கொள்ளலாம். "நாள் பட்ட குடி ஒருவனின் தாம்பத்ய வாழ்வை நிச்சயம் பாதிக்கும். தொடர்ந்து குடிப்பது என்பது ஒரு மனிதன் தனக்குத் தானே செய்துக்கொள்ளுகிற வேதியியல் குடும்பக்கட்டுப்பாடு [chemical castration]" என்கிறார். ஆனால் இதனை ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை. மதுவுக்கும், கஞ்சாவுக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதென்றால், இவையிரண்டும் முதலில் செக்ஸ் உணர்வைத் தூண்டும். ஆனால் போகப்போக ஆண்மையையே பாதித்து விடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிடுகிறார். இதனை கோகுலவாச நவநீதன் அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். 

எனவே இன்றைய குடிக்கும் ஆண்மக்கள் தங்கள் குறைகளை மறைப்பதற்காக தங்கள் மனைவியர் மீது குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக வைப்பது வழக்கமாக உள்ளது. இதனை கூறினாலும் எளிதில் புரிந்துக்கொள்ள மாட்டார்கள். 

தற்கொலைச் செய்யும் ஆண்களைப்பார்த்தால், பெரும்பாலான ஆண்கள் போதைப் பொருளை உபயோகித்த பின் தான் தற்கொலைச் செய்துக் கொள்ளுகிறார்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறுகின்றார். 

மற்றொரு புறத்தில் குடிக்கிற ஆண்கள் குடும்பத்தை சரியாக கவனிக்காமலும், அடித்துத் துன்புறுத்துவதும், வீட்டில் உள்ள பொருள்களை உடைப்பதும், அவைகளை எடுத்து விற்றுக்குடிப்பதும் என்று அளவுக்கு அதிகமாகப் போகும் போது அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்தில் மனைவியோ அல்லது தாயாரோ தற்கொலைச் செய்து விடுகின்றனர். இச்சூழலில் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் நடுத்தெருவிற்கு வந்து விடுகிறார்கள்.

சிலர் பண்டிகை நாட்களிலும், ஏதாவது நண்பர்களுடன் சேரும் போதும், நட்புக்காக எப்பொழுதாவது குடிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நண்பர்களே மதுவை லேசாக தொட்டுவிட்டால், பின்பு மது உங்களை லேசாக விடாது.

நீதிமொழிகள் 23: 29-35ல் உள்ள திருமறைப்பகுதி இவ்வாறு கூறுகிறது. "ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்."

ஆகவே மதுபானம் என்பது வாழ்வை தீய முடிவுக்கு நேராக வழிநடத்தக்கூடியதொன்று. அதற்கு விலகி ஓடினால் முழு குடும்பத்திற்கும் நன்மை கிடைக்கும். அப்படிப்பட்ட வாழ்வை இறைவன் நமக்குத் தருவாராக.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி