எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்?


இன்றைய திருமண வாழ்வு என்பது பல்வேறு மாறுதல்களுக்குள் உட்பட்டு வருகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அமெரிக்காவில் 73% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற செய்தி இறைவனின் திட்டத்திற்கு எவ்வளவு மாறாக சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு ஆணோடு மற்றொரு ஆணும், ஒரு பெண்ணோடு மற்றொரு பெண்ணும் திருமண வாழ்வில் ஈடுபடுவதை பல நாடுகளும் அங்கீகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில், முதல் முதலாக மாகா சூசெட்ஸ் மாகாணத்தில் தான் இந்த திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்பு இந்த சிந்தனை மற்றும் மாகாணங்களுக்குள்ளும்  பரவி அங்கீகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இறுதியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு போன வழக்குகளால் நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்று 2015ஆம் ஆண்டு ஜூலை அங்கீகாரம் வழங்கியது.

இவ்வகையான திருமணத்திற்கு 1996இல் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி 75% பேர் ஆதரவு அளிக்கும் நிலைக்கு மாறிவிட்டது என்பதை “கோல்ப்” என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களே மிக அதிகமாக இதை வரவேற்கும் வண்ணமாக  அமைந்துள்ளது. இளம் வயதினர் 84% பேரும், நடுத்தர வயதினர் 72% பேரும் வயதானவர்கள் 60% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்கிற குடும்ப வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு அளித்த திட்டம். ஆனால் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது வருகிற எதிர்காலத்தை எந்த விதத்தில் அசைக்க போகிறது என்பது தெரியவில்லை.

அமெரிக்காவில்தான் இந்த நிலைமை சென்றுக்கொண்டிருக்கிறது என்று மட்டும் நாம் கவலையற்று இருந்துவிட முடியாது. தற்பொழுது டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நீதிபதிகள் அவர்களுடைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனை தனி மனித சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு இந்திய குடும்ப முறையுடன் இவ்வகையான திருமண வாழ்வை ஒப்பிட முடியாது எனவும், அப்படி செய்தால் ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகவும் கூறியுள்ளனர்.

திருமணம், குடும்பம் என்ற அமைப்பானது பல்வேறு சூழல்களினால் ஆட்டம் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழில் குடும்ப வாழ்க்கைக்கு பயன்படுத்தும் மற்றொரு சொல் இல்லறம் என்பதாகும். ‘இல்’ என்றால் வீடு, அறம் என்றால் நல்லொழுக்கம். அறத்தில் எல்லாம் உயர்ந்த அறமாகவே குடும்ப வாழ்க்கையை நினைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சார்ந்த நாத்திகவாதியான ராபர்ட் G. இங்கர்சால் என்பவர் குடும்பவாழ்வைப் பற்றி  குறிப்பிடும் போது “மனித வாழ்க்கையின் மிக முக்கியமான பழக்கங்களில் மிகச்சிறந்ததும், புனிதமானதுமாக இருப்பது திருமணபந்தம்தான்” என்கிறார்.

திருமறையும் சங்கீதம் 128ல் "உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்.. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்." போன்ற வாக்கியங்கள் யாருக்குப் பொருந்தும்? ஆணோடு ஆண் திருமணம் செய்து கொள்வது இறைவனின் திட்டமா? இதன் வழியாக உலகம் பலுகி பெருக முடியுமா?

பறவைகள், மிருகங்கள் கூட இவ்வாறு சேர்ந்து வாழாத போது ஏன் மனிதர்கள் இவ்வாறு ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கிறார்கள்.

உபாகமம் 22:5ல் "புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்." என்று திருமறை கட்டளையிடுவதற்கு  காரணம் என்ன? ஒரு ஆண் ஆண் போலும், ஒரு பெண் பெண் போலும் நடந்து கொள்வது முக்கியம். ஆண்கள் பெண்களைப் போல் நீளமாக முடியை வளர்த்து பெண் உருவத்தை போன்று காட்சியளிப்பதும், பெண்கள் ஆண்களைப் போன்று உடை அணிந்து ஆண்களைப் போல் தோற்றத்தை உருவாக்குவதும் ஓரினச்சேர்க்கை திருமணம் ஏற்பட வழிவகுக்கலாம் என்று திருமறை எச்சரித்திருக்கலாம்.

அதே வேளையில் வெளிநாடுகளில் கூட சில ஆலயங்களில் இப்படிப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆசிர்வதிக்க முடியாது என்று நிமிர்ந்துள்ளது. பாவ வாழ்க்கையை திருச்சபை ஒருபோதும் ஆசீர்வதிக்காது என்ற திருமறையின் அடிப்படையில் நிற்கவேண்டிய காலத்திற்குள் நாம் வர வேண்டியதுள்ளது. ஏனென்றால் சில திருச்சபைகள் பாவத்தை குறித்து கண்டிப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட தம்பதியினரை ஆசீர்வதிக்கவும், திருச்சபையின் ஐக்கியத்திற்குள் குற்ற உணர்வின்றி ஏற்றுக்கொள்வதும் வெளி நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஆகவே இறைவனின் திட்டத்தை திருமறையின் பார்வையில் நின்று பார்த்து புதிய சமுதாயத்தை உருவாக்க முற்படுவோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி