சேலஞ்ச்


வீரம் நிறைந்த அரசர் ஒருவர் இருந்தார். திறமையாக ஆளுகை செய்துவந்தார். பகைவர்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். தன்னை போல வீரம் நிறைந்தவனாய் நெஞ்சை நிமிர்த்தி தனக்குப்பின் ஆளுகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். எனவே போர் கலைகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அவ்வளவு வீரம் செறிந்தவனாய் எதிராக சண்டை செய்தவர்களை துவேஷம் செய்யும் அளவிற்கு தேறினான்.

ஒரு நாள் பயிற்சி அளிக்கும் குரு அரசனை பார்க்க வந்தார். உங்கள் மகன் இன்னும் வீரக்கலைகளை கற்க வேண்டும். எனவே நாளை தினம் உங்கள் மகனை நம் நாட்டில் உள்ள அடர்ந்த காடுகளும், கொடிய வன விலங்குகளும் நிறைந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வீரனாக திகழ முடியும் என்றார்.

அரசன் அதிர்ந்து போனான். மன அளவில் சற்று தடுமாறிய அரசன் வெளியே காட்டிக்கொள்ளாமல் தலையை அசைத்தான். அன்று மாலை குருவுடன், மகன் அம்புகளையும், வீரவாளையும் எடுத்துக் கொண்டு சென்றான். மிகுந்த அடர்ந்த காடு, எப்பக்கம் திரும்பினாலும் வனவிலங்குகளின் சத்தம் காதை கிழித்தது. எங்கும் இருள் சூழ்ந்துக்கொண்டே வந்தது.  நடு காட்டிற்குள் சென்றவுடன் குரு, அரசனின் மகனை பார்த்து கூறினார், விழிப்புடன் எப்பொழுதும் இருந்துக்கொள்.  எப்பக்கத்திலிருந்து உன் மீது வனவிலங்குகள் தாக்கும் என்பது தெரியாது. நான் புறப்படப் போகிறேன், நாளை காலை உன்னை சந்திக்கிறேன் என்று கிளம்பினார்.

அரசனின் மகனுக்கு பகிர் என்று இருந்தது. என்னசெய்வதென்று விழித்தான். தன் கண்களுக்கு முன் நடந்து, மறைந்து போனார் குரு.

இருள் கவ்வ ஆரம்பித்தது. ஒரு மரத்தின் கீழே நின்றுக்கொண்டான். மரத்துக்குக் கீழே சுற்றி சுற்றி வந்தான். கண்களுக்கு தூக்கம் வராமல் பார்த்துக் கொண்டான். இதயம் படபடத்தாலும் நாளைக் காலை வரைப் போராடித்தானே  ஆகவேண்டும் என்று  உயிர் காத்துக்கொள்ள கவனமாக இருந்தான்.

மெதுவாக விடியல் தென்பட ஆரம்பித்தது. அந்நேரத்தில் ஒரு சலசலப்பு, திகைத்துக் கொண்டு, வில்லை ஏந்தி குறிபார்க்க ஆரம்பித்தான். எந்த மிருகம் தெரியவில்லையே என்று விழிப்புடன் நின்றான். மெதுவாக தலையை தூக்கியதும் அதிர்ந்து போனான். தன் தகப்பனை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அப்பா நீங்களா? என்றான். ஆம் மகனே,நீ வீரத்துடன் வாழ வேண்டுமென்றுதான் உன்னை இங்கு அனுப்ப திட்டமிட்டேன்.  அதேவேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட மிருகங்கள் உன்னைத் தாக்கும் சூழல் ஏற்பட்டால் உனக்கு உதவிடவே வந்தேன் என்றான்.

குடும்ப வாழ்விலும் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த பின்பு அவர்கள் விவேகத்துடனும், அறிவுடனும் வாழ்வில் முன்னேற சற்று விட்டுவிடவேண்டும். ஐயோ என் மகள் இதையெல்லாம் சாப்பிட்டு வாழ முடியுமா? இப்படியெல்லாம் வேலை செய்துதான் குடும்பம் நடத்த வேண்டுமா? எல்லாருடைய பேச்சையும் கேட்டு எப்படி அந்த வீட்டில் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட மாமியார் உள்ள ஒரு குடும்பத்தில் என் பிள்ளை எப்படி சமாளிக்க முடியும்? என்று பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் சிந்திக்கின்றனர்.

அதைப்போல் சில பெற்றோர், ஐயோ என் மகன் எவ்வளவு நல்லவன். வந்திருக்கிறவள்  ஒரு வேலையும் செய்யாத சோம்பேறி. இப்படிப்பட்டவளுடன் என் மகன் எப்படி வாழ்வான்? எப்பொழுதும் சண்டையும், கூப்பாடும் போடுகிற பெண்ணுடன் என் மகன் எவ்வளவு நாள் தான் சமாளித்துக் கொண்டு வாழ முடியும்? காலையில் இருந்து இரவு வரை எப்போதும் செல்போனும் கையுமாக அலையும் இப்படிப்பட்ட பெண்ணோடு என் மகன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று கூறுகிற மாமியார்களும் இருக்கின்றனர்.

எல்லா பெற்றோருமே தாங்கள் தான் அறிவாளி, பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது! சமாளித்துக் கொள்ள மாட்டார்கள் என்று கணக்கிடுகிறோம். பொதுவாக இரண்டு விதமான சவால்கள் வருகிறது. ஒன்று நமது பிள்ளைகள் மனதில் இருந்து வரும் சவால்கள் [internal]. அதை சந்திக்க ஊக்கம் கொடுக்க வேண்டும். தன்னம்பிக்கையும் சவால்களைக் கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள உதவிட வேண்டும். இரண்டாவதாக சந்தர்ப்ப சூழல்களால் ஏற்படும்  பிரச்சினைகள் [external]. இதையும் மேற்கொள்ள உதவிடலாம். காரணம் பிள்ளைகள் இன்று வெளியே போய் வேலை பார்த்து வருகின்றனர். அங்கே ஏற்படுகிற நெருக்கடிகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் வெறுப்புகள். இவைகளையெல்லாம் மேற்கொண்டு குடும்பத்தையும் வழிநடத்த அவ்வப்போது உதவிடலாம்.

அதேவேளையில் பிள்ளைகள் இந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து கொள்ள மாட்டார்கள் என்று குடும்பத்தை பிரித்துவிட்டு விடாதிருங்கள். “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்” (ஆதியாகமம் 2:24a) இது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் பொருந்தும். அட்டைபோல் பிள்ளைகளை ஒட்டிக்கொண்டு பிள்ளைகளை செயல்படாமல் செய்து விடாதிருங்கள். அவர்கள் உலகத்தில் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறுகிறார்கள். அதைபோல் குடும்ப வாழ்விலும் வெற்றி பெற வழி விடுங்கள் அல்லது விலகிக் கொள்ளுங்கள். தூரத்திலிருந்து கவனியுங்கள். தேவைக்கு அழைக்கும்போது மட்டும் உதவி விட்டு சென்று விடுங்கள். வாழ்வை எதிர்கொள்ள கர்த்தர் பிள்ளைகளுக்கு உதவிச் செய்ய வல்லவர் என்பதை மறந்துவிடாதிருங்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி