தாக்கும் வலை தளம் தடுமாறும் குடும்பம்
நாம் பார்க்கிற, கேட்கிற,வாசிக்கின்ற ஒவ்வொன்றும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். நல்ல தகவல்கள் நல்ல குடும்பத்தை அமைக்க உதவிடும், தவறான செய்திகள் தவறான வாழ்க்கைக்கு நேராக நம்மை வழிநடத்திடும். இன்றைக்கு வலை தளங்கள் மூலம், தொலைக்காட்சிகள் மூலம் தொடர்ச்சியாக அருவிப் போன்று தகவல்கள் குடும்ப வாழ்வில் வந்து முட்டி மோதிக் கொண்டும், குடும்பங்களை உருட்டிப் போட்டுக் கொண்டும் இருக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக பிரசித்தப் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர். போர்ச்சுக்கலைச் சார்ந்த இவர் அநேக கால்பந்து ரசிகர்களால் தூக்கி சுமக்கப்படுகிறார். உலக அளவில் அதிகமான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்ட விளையாட்டு கால்பந்தாட்டம் தான்.
ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது மேசையில் இரண்டு குளிர்பான பாட்டில்கள் இருந்தது. அவர் அதனை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்காட்டி, 'தண்ணீர் குடியுங்கள்' என்று கூறிவிட்டு பேசத் தொடங்கினார். இதனை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் இந்தச் செயலானது வலைத்தளங்களில் வைரலானது. இதன் விளைவு என்ன தெரியுமா? குளிர்பான நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பின் அளவில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலக குளிர்பான சந்தையையே நிலை குலையச் செய்து விட்டது.
மற்றும் முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தந்தை குடி பழக்கத்தின் விளைவினால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனார். ஆனால் ரானோல்டோ குடி பழக்கம் இல்லாமல் வாழ்பவர். ஆகவே குடிபழக்கத்தை கொஞ்சமும் ஊக்குவிக்கக் கூடாது என்ற திடமான எண்ணம் உடையவர். அதே வேளையில் குளிர்பானமும் உடலுக்கு நல்லது அல்ல, தண்ணீரே நல்லது என்பதை உலகிற்கு எடுத்துச்சொன்னார். இந்த சிறிய நிகழ்வு எவ்வளவு ரசிகர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது! இவ்வாறு நல்லத் தகவல்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நல்லத்தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அதேவேளையில் தீயதாக்கத்தையும் YouTube பயங்கரமாகச் செய்துக் கொண்டே இருக்கிறது. உலகில் யூடியூப்பின் மிகப் பெரிய சந்தையாக உலாவிவருவது இந்தியாவில் தான். ஒரு புள்ளி விபரப்படி இந்தியாவில் 22.50 கோடி பயனாளர்கள் இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியுள்ளனர். இந்தியாவின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரில் 93% பேர் யூடியூப்பில் பல மணிநேரங்களை செலவிடுகின்றனர். இந்தியாவைப் பொருத்த வரையில் இந்தி மொழிக்குப் பிறகு தமிழ் மொழியில் தான் அதிக வீடியோக்கள் அமைந்துள்ளதாம். இந்த சூழ்நிலையில் யூடியூப் பல்வேறு செய்திகளை குடும்பங்களுக்கு கொடுத்து நிலைகுலையவும் செய்து விடுகிறது.
எனவே திருமறை நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் "ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்" என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் (பிர 12:14). மேலும் பிரசங்கி கூறும் போது "உன் நெஞ்சின் வழிகளிலும் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப் போடு; இளவயதும் வாலிபமும் மாயையே" (பிர 11:9,10) என்றும் நியாபகப்படுத்துகிறார். எனவே வாழ்க்கையை திசை திருப்பி, தவறான சந்தோஷங்களுக்கும், தவறான வாழ்க்கை முறைக்கும், தவறான வீராப்புக்கும், வரட்டு கவுரவத்தும், சந்தேகத்துக்கும், வன்முறைக்கும் வழிநடத்தும் அலைவரிசைகளுக்கு நம்மை விலக்கி காக்க வேண்டும்.
கைகளில் எப்பொழுதும் அலைப்பேசி இருப்பதால் யாரையும் இனிக்கட்டுப்படுத்த இயலாது. யார் என்ன விரும்பினாலும் அதனை உடனே தேடிப்பிடித்துப் பெற்றுக்கொள்ளலாம். எனவே ஒரு காரியம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை பகுத்துப்பார்ப்பது நம் கையில் தான் உள்ளது.
ஆண்டவர் ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளை வைத்து விட்டு எல்லா கனிகளையும் புசிக்க கூறினார். அதே வேளையில் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியை புசிக்கவும், தொடவும் வேண்டாம் என்று கூறினார். (ஆதி 3:1). கீழ்ப்படிவதும், கீபடியாமல் இருப்பதும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தீர்மானிக்க வேண்டியது ஆதாமும் ஏவாளும் தான். ஆண்டவர் அவர்கள் கைகளைக் கட்டிப்போடவில்லை. சுயாதினத்தை மனுஷனுக்கு கொடுத்தார். அதேப்போன்று தான் இன்றும் நமக்கு தயமாக முடிவெடுக்கிற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எப்பொழுதும் செல்போனும் கையுமாக அலைந்தால், பிள்ளைகளும் அதே நிலைக்குள் தள்ளப்பட்டு விடுவார்கள். நீங்கள் ஒரு அலை வரிசையை பார்த்தால், மற்றொரு அலை வரிசையில் பப்ஜி போன்ற விளையாட்டுகளில் இறங்கி வாழ்க்கையை வேறு ஒரு விதத்தில் தொலைத்து விடுவார்கள். யார் கட்டுப்படுத்த முடியும்?
செல்போனை பலவருடமாக பார்த்திராத பெற்றோரே அடிமைகளாக வாழ்ந்தால், புதிய தலைமுறையை நாம் என்னச் சொல்ல முடியும். சின்னவயதில் பார்க்கும் கார்ட்டூன் கூட விஷத்தன்மை உடையதாக சில உருவெடுத்து சில பிள்ளைகளை வன்முறையில் வளர்த்து எடுத்து விடுகிறது. சிறு வயதிலேயே துப்பாக்கி எடுத்து தருகிற விளையாட்டுகள் இரத்தத்தின் மதிப்பை அறியாமலே வளரச் செய்து விடுகிறது. விளையாடும் போது தடைச் செய்தால் பெற்றோரையே போட்டுத்தள்ளி விட முற்படும் அளவிற்கு கொண்டு சென்று விடுகிறது. கவனம்! கருத்தோடு பயன்படுத்தவோம் வலைதளத்தை !!
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment