சோம்பேறியே நீ எறும்பினிடத்திற்கு போ
ஆபிரகாம் லிங்கன் சிரித்துக்கொண்டே "நீங்கள் மற்றவர்கள் ஷூ விற்கெல்லாம் பாலிஷ் போடுவீர்களா?" என்று கூறினார்.
எந்த பணியும் கேவலமானதல்ல, மனிதன் எவ்வளவு தான் உயர்ந்தாலும் தன்னுடைய பணியைச் செய்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை. உலகத்தில் உயர்ந்த பணி, தாழ்ந்த பணி என்று எடுத்துக்கொண்டு ஒரு வேலையும் எனக்கு ஏற்றப்படி செட் ஆகவில்லை. எனவே தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சில வாலிபர்கள் கூறுகின்றனர். கல்லூரிக்குச் சென்று படித்தவுடன் விவசாய வேலைச்செய்வது அற்பமானதாக எண்ணக்கூடாது. பெற்றோர்கள் செய்கிறவேலையை அவமானமாக கருதி, அவர்களை பெற்றோர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகிற இளைஞர்கள், இளம்பெண்கள் பெருகி விட்டனர்.
நீங்கள் அவமானமாக கருதுகிற பணியின் வழியாகத்தான் அவர்கள் உங்களை வளர்த்து, கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் கவுரவம் பார்த்து, நான் படித்த படிப்பிற்கு வேலை என்று கிடைக்கும் என இலவு காத்த கிளியாக பறந்து வருகிறீர்கள்.
வயது 30 ஆனாலும் பொறுப்புணர்வு இன்றி பெற்றோரின் சம்பளத்திலே வாழப் பழகி விடுவதால் கொஞ்சமும் அக்கறையின்றி திரிகிற இளம் ஆண்கள், பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் பறவைகளை உற்றுப்பாருங்கள்.
எங்கள் வீட்டில் இரண்டு மைனாகள் வந்து போய் இருந்தது. ஒரு சிறிய பகுதியில் கூட்டை கட்டி முட்டை விட்டது. குஞ்சுகள் பொறித்தது. சிறு சிறு பூச்சிகளைப்பிடித்து அடிக்கடிக் கொடுத்தது. நாளாக நாளாக குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைக்க ஆரம்பித்தது. பெரிய மைனாக்கள் இரவு வருவதை தவிர்த்தது.காலை மட்டும் உணவைக் கொடுக்கும். பின்னர் மெதுவாக சிறகை அடிக்க குஞ்சுகள் ஆரம்பித்த போது அருகில் உள்ள மரத்திற்கு அழைத்துச் சென்றது. பின்னர் அடுத்த மரத்திற்கு சிறகடித்துப் போய் உட்கார்ந்தது. இவ்வாறு தன்னிச்சையாய் செயல்பட ஆரம்பித்ததும் பொறுப்பாய் இருந்த பெரிய பறவைகள் விலகிக் கொண்டன.
சாதாரணப் பறவைகளே தன் குஞ்சுகள் சிறகடிக்க ஆரம்பித்ததும் விலகிக்கொள்கிறது. ஆனால் பெற்றோர் நம்மை விட்டு விலக மாட்டார்கள் என்று நினைத்து உழைக்க மறுக்கும் இளைஞர்களே நீங்கள் சாதாரண பறவைகளைக்காட்டிலும் விசேஷித்தவர்கள் அல்லவா! முயற்சிச் செய்யுங்கள். சிறிய வேலை, குறைந்த சம்பளம் என்று எதையும் அற்பமாக எண்ணாதிருங்கள். குறிப்பிட்ட வயதிலே திருமணம் செய்துக்கொள்ளுங்கள். வயது 35 ஆனபின்னும் நல்ல வேலைக்கிடைத்தபின்னர் தான் திருமணம் என்றால், வயது 40 ஆகிவிடும். வேலை கிடைக்கும், ஆனால் மனைவி அமையாமல் போய்விடும். பெற்றோருக்கு இது மிகுந்த மன வருத்தத்தை உருவாக்கும். ஐயோ என்பிள்ளை இன்னும் செட்டில் ஆகவில்லையே, எதிர்காலம் எப்படி அமையுமோ என்று ஏங்கி ஏங்கியே அவர்கள் வேதனையில் உழல்வர்.
"சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்"(நீதி 6:6) சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்... இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்... உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும்... வரும் (நீதி 6:9-11) என்று திருமறை சோம்பலாய் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது. இளம்வயதிலேயே தூங்கியும், வீணாய் ஊரைச் சுற்றியும், cell phoneலே நேரத்தை செலவழித்தால், வாழ்க்கை கரைந்துப் போய் விடும். முதுமை வந்து தோள் மேல் அமர்ந்து விடும். பின்பு மணப்பெண்ணுக்கு ஊர் ஊராய் அலைய நேரிடும். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் கர்த்தருக்கு முன்பாக உண்மையோடும், நீதியோடும், சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதத்தை நிச்சயமாய் உங்களுக்கு அருளுவார் (நீதி 10:4). உங்கள் வாழ்வை வளமாக்க அவர் வல்லவர்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment