அப்புறம் பாத்துக்கலாம்
அவன் அவளிடம் திருமணம் பிறகு செய்து வாழ்வோம் இப்பொழுது சேர்ந்து வாழ்வோம் என்று கூற இணைந்து வாழ்ந்தார்கள். இணைந்து வாழ்ந்து வந்தால் போதாது திருமணம் செய் என்றால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மறுத்துவிடுவான். கருவுற்றால் அதை அழித்து விடுவோம் திருமணத்திற்கு பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்பான்.
காலங்கள் மாறியது இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது. அவன் தன் வேலையினிமித்தம் வேறு இடம் கிளம்பிப் போய்விட்டான். வாழ்க்கையை வீணாக்கியவள் விரக்தியின் விளிம்பிற்கு போய் காலமெல்லாம் எல்லா ஆண்களும் மோசமானவர்கள். எனவே திருமணமே வேண்டாம் என்று வாழ்நாள் முழுவதும் தனித்தே பயணப்பட்டாள்.
ஆலயங்களில் திருமண ஆராதனையன்று திருமண வாழ்க்கை பற்றி மாற்கு 10: 6 to 8 யை வாசித்தபின் கூறுவது என்னவென்றால் “திருமணத்தை ஒருவரும் அற்பமாக எண்ணி, யோசனையின்றி செய்யாமல், கருத்தோடும் ஜெபத்தோடும் திருமணம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நோக்கங்களை சிந்தித்து அதை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறோம். திருமண வாழ்க்கையில் மூன்று முக்கிய காரியங்களை பகிர்ந்து கொள்ளுகிறோம்.
முதலாவது திருமண வாழ்க்கையின் பந்தத்தில் ஒருவருக்கொருவர் இன்பத்திலும் துன்பத்திலும் தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை ஆதரவாக இருக்க வேண்டும். இரண்டாவது மனித சுபாவ உணர்ச்சிகளை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்ள திருமணம் வாய்க்காலாக அமைந்துள்ளது. மூன்றாவது குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்த மூன்று திட்டங்களும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்பவர்கள் வெறுக்கிறார்கள். எப்படி என்றால் இன்பத்தை அனுபவிக்கவே சேர்ந்து வாழ விரும்புகின்றனர். சுய ஆதாயத்திற்காக இந்த உறவு அமைந்துள்ளது. கருவுற்றால் கலைத்துவிட வேண்டும் என்ற சூழலே உருவாகுகிறது.
இந்த சமுதாயத்தில் பெண் வேண்டும் என்றால் திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள் வரவேண்டும். சில பொறுப்புகளை சுமந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை வைத்துள்ளது. திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு ஆணுக்கு கிடைக்குமானால், அந்த ஆண் எந்த பொறுப்புகளையும், கஷ்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் விலகி ஓடி விடுவான். எனவே பெண்களை எளிதில் கிடைக்காமல் பராமரிப்பிலேயே பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறார்கள். இந்த செயலை இந்தியர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். எனவே பெண்களுக்கு மதிப்பு அதிகம். திருமண வாழ்விற்கு முன் ஒரு பெண் தன்னை ஒரு ஆணுக்கு கொடுத்தால் அது திருமண ஒப்பந்தத்திற்கு மீறிய செயலாக அமைந்து விடுகிறது. அதே வேளையில் அந்த ஆண் எளிதாக ஏமாற்றி விட்டு சுலபமாக பிரிந்து சென்று விடுகிறான் என்று நவநீதன் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே திருமணமின்றி சேர்ந்து வாழ்வது என்பது என்றும் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகும். திருமறையில் கூறுவதுபோல் “நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்….வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்...உன் இருதயம் அவன்/ள் வழியிலே சாயவேண்டாம்; அவன்/ள் பாதையிலே மயங்கித் திரியாதே.”(நீதிமொழிகள் 7: 15 to 27) என்று கவனமாக வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறது. திருமறை நமக்கு வழிகாட்டும் வழியிலேயே நடந்தால் நமக்கு துன்பமில்லை. என்றும் மகிழ்ச்சியே
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment