தீர்மானிப்பதில் கவனம்


"எனது ஓட்ட வாழ்க்கை முழுவதும் நான் கனவு கண்ட பதக்கமானது, தீர்மானிப்பதில் நான் செய்த சிறு பிழையால் என் கைகளிலிருந்து நழுவியது” என்று தனது சுய சரிதையில் எழுதியவர் பறக்கும் சீக்கியர் என்று புகழ்பெற்ற இந்திய தடகள நட்சத்திரம் மில்கா சிங்.

பாகிஸ்தானில் உள்ள கோவிந்தபுராவில் 1929ல் பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது அவரது கண் எதிரே பெற்றோர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் என 5 பேர் கொல்லப்பட்டனர். அவரது தந்தை உயிர் போகும் நிலை வந்த போது 'ஓடி விடு இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்' எனக் கூறியதால் இந்தியாவிற்குள் ஓடி வந்தவர். இந்திய எல்லையில் ரயிலில் பயணம் செய்வதவர்.   ஆனால் டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.   டெல்லியில் இருந்த அவரது சகோதரி தான் மில்காவை விடுவித்தார்.

1952ல் ராணுவத்தில் சேருவதற்கு முயற்சி எடுத்தது கைக்கூடியது. செகாந்திராபாத்தில் பணிபுரிந்த போது ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொண்டார். அவருடைய சிறப்பான ஓட்டத்தை பார்த்த பயிற்சியாளர் குருதேவ் சிங் அவரை ஊக்குவித்தார்.

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கினங்க ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 1958ல் காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே உரியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும்  (1958,1962) பங்கு கொண்டு மூன்று தனி நபர் தங்கம் மற்றும் ரிலேரேசில் ஒரு தங்கம் வென்றுள்ளார்.

வெற்றி மேல் வெற்றி பெற்ற அவருக்கு ஒலிம்பிக் போட்டி மேல் தான் முழு கவனமும் இருந்தது. இத்தாலியின் ரோம் நகரில் 1960ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் போட்டியில் 45.6 நொடிகளில் கடந்தார். ஆனால் 0.1 நொடியில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். இந்த ஓட்டத்தின் இறுதி 150 மீட்டர்களை கடப்பதற்கான சக்தியை சேகரிப்பதற்காக நிதானிக்கும் போது அவர் செய்த பிழை அது. அவர் வாழ்நாள் முழுவதும் இப்பிழைக்காக மனம் வருந்த வைத்து விட்டது. இதைத் தான் தனது சுய சரிதையியில் மேலே குறிப்பிட்டது போன்று வர்ணித்துள்ளார் அல்லது வருந்தியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை என்ற ஓட்டத்திலும் நாம் எடுக்கும் சில தீர்மானங்கள் நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாக அமைந்துவிடுகிறது. ஆபிரகாம், சாராள் இருவரும் எடுத்த தீர்மானம் அவர்கள் பிற்கால வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போனது (ஆதி 16:2; 21:11). தன் வீடு கட்டப்பட வேண்டும் என்று அவசரப்பட்டு சாராள் தனது அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்குக் கொடுக்கிறாள். இதன் விளைவு சாராள் அற்பமாக கருதப்பட்டாள். இந்த துக்கம் இதோ முடியவில்லை,ஆகாரின் மகன் தன் மகனோடு சுதந்திரம் அடையக்கூடாது என்று சாராள் கூறிய போது ஆபிரகாமுக்கு துக்கமாக மாறிவிட்டது.

தவறான தீர்மானங்கள் குடும்பங்களில் தொடர் துக்கத்தையும், வேதனையையும் கொடுத்துக் கொண்டே இருக்கும். இறைவனின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அடங்கி நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் எடுக்கிற தீர்மானமானது திருமறையின் அடிப்படையை சார்ந்து இருக்கிறதா? அல்லது நமது சுயநலத்திற்காக எடுக்கப்படுகிறதா? இறைவனின் கட்டளைகளுக்கும், விருப்பத்திற்கு மாறாக எடுக்கப்படும் முடிவுகள் துவக்க காலத்தில் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் காணப்படலாம்.   ஆனால் போகப் போக அவை துன்பத்தையும், வருத்தத்தையும் நமக்கு கொடுக்க துவங்கி விடும்.

எனவே குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், மாமியார், மாமனார், என்று எந்த உறவாக இருந்தாலும் அவர்களோடு உள்ள உறவில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள்; வேலைகளில், பதவி உயர்வுகளில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் எதுவாக இருப்பினும் கடவுளின் சித்தத்தை அறிந்து பொறுமையோடு எடுப்போம்.               

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்