அப்பா நான் பார்க்கிறேன்


ஒருமுறை ஒரு மாமரத்தோட்டத்தில் உள்ள மாங்காய்களைத் திருட நினைத்த ஒருவர் தன் மகனோடு சென்றார். தன் மகனை சற்று தூரத்தில் விட்டுவிட்டு அவர் மரத்தில் ஏறத் தொடங்கினார். தன் மகனிடம், மகனே யாராவது என்னை பார்க்கும் சூழல் வந்தால் எனக்கு ஒரு சத்தம் கொடு நான் மறைந்துக்கொள்ளுகிறேன்  என்றார். மகனும் சரி என்று கீழே நின்று கொண்டான். அவர் மேலே ஏறி காய்களை பறிக்க தொடங்கினார். மீண்டும் தன் மகனிடம் யாராவது என்னை பார்க்கிறார்களா என்று கேட்டார். மகன் “இல்லை” என்றான்.

அவர் தொடர்ந்து மாங்காய்களை திருடிக் கொண்டே இருந்தார். மீண்டும் மகனிடம் கேட்டார் யாராவது என்னை பார்க்கிறார்களா? மகன் பதிலாக ஆமா என்றான். பதறிப்போன அந்த மனிதர் வேகமாக மரத்திலிருந்து இறங்கி கீழே வந்தார்.

எங்கே இருந்து, யார் பார்க்கிறார்கள் என்று பதட்டத்துடன் மகனிடம் கேட்டார். மகன் தகப்பனிடம் நான் தான் உங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மற்றவர்கள் பார்க்கிறார்களா  என்று கவலை. ஆனால் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று  கவலையே  இல்லையே அப்பா என்றான்.

நாம் நம்முடைய பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதே பலருக்கு தெரியவில்லை. நம்முடைய பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து போய் பிள்ளைகள் முன்பு பொய் பேசுகிறோம், தவறான காரியங்களுக்கு திட்டமிடுகிறோம், பிறரை குறித்து அவதூறாக பேசுகிறோம், கோபங்கள், சண்டைகளை வெளிப்படுத்துகிறோம், தூஷணமான வார்த்தைகளை பேசுகிறோம், இழிவான செயல்களை செய்கிறோம். பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாக அவர்களை நினைக்கின்றோம்.

பிள்ளைகள் நாம் பேசுகிறது, செய்கிற காரியங்களை அப்படியே பிரதிபலிக்கிறவர்களாக imitate பண்ணுகிறவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினால் அவர்களும் பேசுவார்கள். அது கெட்ட வார்த்தை என்று தெரிந்து பேசாமல், கோபம் வரும் போது அப்பா இப்படித்தான் பேசுவார்கள். எனவே நாமும் இப்படித்தான் பேச வேண்டும். கோபம் வரும்போது அம்மா Tv ரிமோட்டை தூக்கி வீசுவார்கள். அதுபோல நாமும் கோபம் வரும்போது கையில் கிடைத்த பொருட்களை தூக்கி வீசி உடைக்கவேண்டும். கோபம் வந்தால் கதவை பூட்டிக்கொண்டு அம்மா, அப்பாவை மிரட்டுவார்கள். அதுபோல நாமும் செய்ய வேண்டும். பிள்ளைகள் நாம் செய்கிற செயல்களை அப்படியே பின்பற்றியேத்தான் செய்கிறார்கள்.

சிறுபிள்ளைகள் 5 வயதுக்குள்ளாக எத்தனை வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள்? எந்த சொல் அகராதியையும் வைத்து அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக பெற்றோர் பேசுகிறதை பிள்ளைகள் அப்படியே கேட்டு பேச பழகுகின்றனர். சில பிள்ளைகள் ஐந்து வயது ஆன பின்பும் பேச முடியாமல் தடுமாற காரணம் பெற்றோர்கள். இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். பிள்ளைகளை பார்க்கிறவர்கள் விருப்பமில்லாமல் பார்த்துக் கொள்ளும் போது அவர்கள் பிள்ளைகளிடம் பேசாமல், டிவியை பார்த்துக்கொண்டு, பிள்ளைகளுக்கு நேரத்திற்கு நேரம் உணவை மட்டும் கொடுத்து படுத்து உறங்க வைத்துவிடுவர். பெற்றோர்களும் வீட்டிற்கு வந்த பின்னர் பிள்ளையுடன் நேரம் செலவிடாமல் tv, mobile, computer என்று உட்கார்ந்துக்கொண்டால் பிள்ளைகள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே நம்முடைய பேச்சு, செயல் என்பது எவ்வளவு பிள்ளைகளுக்குள் வேலைச்செய்கிறது என்பதை பார்த்தீர்களா? பிள்ளைகளுடைய குணநலன்களின் அமைப்பில் (character building) பெற்றோரின் பங்கு முக்கியமானது. குழந்தைகள் ஒழுக்கநெறியுடன் வாழவும், மனிதநேயத்துடன் பிறரை அணுகவும், சிறப்பான காரியங்களில் தங்களது பங்களிப்பை செலுத்தவும் பெற்றோரின் செயல்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும்.

பவுல் தன்னுடைய இறைமக்களுக்கு எழுதும்போது “நீங்கள் என்னிடத்தில் கற்றும், அடைந்தும், கேட்டும், கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்.” (பிலிப்பியர் 4:9) பவுலின் வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்டும் வாழ்வாக மாறிவிட்டது. அப்படி என்றால் பெற்றோருடைய வாழ்க்கை எப்படிப்பட்ட முன்மாதிரியை காட்ட வேண்டும்.

இயேசுவானவரும் தனக்குப் பின் சென்ற மக்களை பார்த்து சொல்லும்போது “நான் உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப் போகிறேன்” என்கிறார். யோபு தன் பிள்ளைகள் விருந்துகளுக்கு போய்விட்டு வந்தால் உடனடியாக அவர்களை அழைத்து கடவுள் சந்நிதியில் வைத்து பரிசுத்தம் பண்ணிக்கொள்ள பலி செலுத்தி, முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்டினான்.

நம்முடைய வாழ்வு எப்படி அமைந்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். தவறான முன்மாதிரிகளை வைத்தவர்கள் அதற்குள்ள பலனை அனுபவிக்க வேண்டிய சூழல் வரும். திணையை விதைத்தால்  திணையைத்தான் அறுக்க முடியும்.  எதை விதைக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் யோசித்து அதற்கான பலனுக்காக காத்திருப்போம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி