அவசரம் வேண்டாம்


இறைப்பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் ஒரு நடந்த சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார். அது இன்றைய இளைஞர்களுக்கும், திருமணவாழ்விற்கு  ஆயத்தப்படுபடுகிறவர்களுக்கும்  பயனளிக்கக்கூடியது.

ஒரு இளைஞர் பதறிக்கொண்டு வந்தார். ஐயா என் ஊரில் உள்ள அத்தை இறந்து போய்விட்டார்கள் என்று கதறினார்.

போதகர் கேட்டார், “அதற்கு ஏன் இவ்வளவு மனங்கசந்து அழுகிறாய். நீ ஒரு வாலிபன், உனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். அழாதே என்றார்.”

இளைஞனோ, இல்லை என் வாழ்க்கையே போய்விட்டதே என்று மீண்டும் அழுதான்.

போதகர் மீண்டும் ஏன் உன் வருங்கால மனைவியின் தாயாரா? ஏன் உன் திருமணம் தடைப்பட்டுவிடுமா? அல்லது திருமணத்தை தள்ளி வைத்து விடுவார்கள் என்று வருத்தப்படுகிறாயா? என்று மீண்டும் கேட்டார். 

இளைஞனோ இல்லை, ஆனால் அந்த aunty  எச்ஐவியால் இறந்துள்ளார்கள். அவர்களோடு தவறான உறவை நான் வைத்திருந்தேன். எனவே எனக்கும் எச்ஐவி இருக்கும். எனவே திருமணம் செய்தால் என் வருங்கால மனைவிக்கும் வந்துவிடும். என் வாழ்க்கையே வீணாய் போய் விட்டதே என்று கதறினான்.

நீ முதலில் போய் மருத்துவமனைக்குச்  சென்று check பண்ணிவிட்டு வா என்றார் போதகர்.

இளைஞனுக்கோ சோதித்துப்பார்க்கும் அளவிற்கு மனதில் திடம் இல்லை. ஆதலால் அந்த இளைஞனுக்கு counselling கொடுத்து, ஜெபித்து, சோதனை செய்ய அனுப்பி வைத்தார். பயப்படாதே, நீ உன் தவறுக்காக கடவுளிடம் மன்னிப்பு வேண்டிக்கொள். உனக்கு எச்ஐவி இருக்காது என்று தைரியப்படுத்தி அனுப்பி வைத்தார்.

மீண்டும் இளைஞன் வந்தான், பதறிய கைகளில் ஒரு கவர் இருந்தது. ஐயா இது தான் என் report என்று நீட்டினான். என்ன நிலையில் report இருந்தது என்றார். அவனோ பதற்றத்துடன்   ஐயா எனக்கு அதைப் பிரித்துப்பார்க்கும் அளவிற்கு தைரியம் இல்லை என்று நீட்டினான்.

வாங்கி பிரித்துப் பார்த்தார் போதகர். நெகட்டிவ் என்று ரிப்போர்ட் கூறியது. அவனை தட்டிக் கொடுத்து பயப்படாதே, இனி இதே போன்று தவறான வாழ்விற்கு ஒப்புக்கொடுக்காதே என்றார். உன் திருமணம் சிறப்பாக அமைய ஜெபிக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார்.

திருமணத்திற்கு வளர்ச்சி என்பது முக்கியம். இன்று பணம் இருந்தால் போதும் திருமணம் செய்து வைத்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு பெற்றோர்களும் பிள்ளைகளும் கூட வந்து விடுகின்றனர். ஆனால் டாக்டர்.அல்போன்ஸ் அவர்கள் மூன்று விதமான தகுதி இருக்கும் போது தான் திருமணத்திற்குள் நுழைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

  • உடல் வளர்ச்சி: நம் நாட்டில் குழந்தைத் திருமணங்கள் மிகவும் எளிதாக நடந்து விடுகிறது.  இப்படி நடக்கும்போது கணவனுக்கு நல்ல வழிகாட்டியாக, துணைவியாக, ஆலோசகராக அமைய முடியாது. பெண்களுக்கு 20 வயதும், ஆண்களுக்கு 25 வயதும் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். பேராசிரியர் ஹில் என்பவர் “திருமணம் செய்துக்கொள்ள அவசரப்பட வேண்டாம்” (Don’t be in a rush to marry) என்று பொதுவாக குறிப்பிடுகிறார். ஏனென்றால் திருமணத்திற்கென்று குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

  • உள்ள வளர்ச்சி: உடல் வளர்ச்சியோடு மனிதனின் உள்ளமும் வளர்கின்றது. ஏனென்றால் ஒருவர் திருமணத்தை பற்றியதான சரியான கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் புரிந்து கொண்டு தான் திருமணத்திற்குள் நுழைவது அவசியம். தவறான தகவல்களை இன்று வலைத்தளங்களில் இருந்து இளைஞர்கள் பெற்றுக் கொள்வதால் திருமண வாழ்வை தவறாகவே அணுக முற்படுகின்றனர். இதனால் உள்ள வளர்ச்சி (maturity) இன்மையை பல்வேறு செயல்களில் வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

  • உணர்வு வளர்ச்சி: உணர்வுகளில் ஒவ்வொருவரும் வளர்ந்து வர வேண்டும் என்பது என்னவென்றால் சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் இருப்பது, தேவையில்லாமல் சந்தேகிப்பதை தவிர்ப்பது, ஆத்திரப்படாமல் அவைகளை அணுகுவது, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் காலத்தை கடத்துவதை தவிர்ப்பது, பிரச்சனைகள் வரும்போது பேசி தங்களுக்குள் தீர்த்துக் கொள்வது,   கடும் சினத்தை தவிர்ப்பது போன்றவற்றில் வளர்ச்சி அடைவது தான்.

சிறுபிள்ளைகளாக இருக்கும்போது அடம் பிடிப்பதும், பொருட்களை தூக்கி வீசுவதும் இருக்கலாம். ஆனால் வளர்ச்சி அடையும் போது சிக்கலான சூழ்நிலைகளிலும் சமாளித்து சென்று விடக்கூடிய மன பலத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றனர். “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” (I கொரிந்தியர் 13:11) என்று பவுலடியார் வளர்ச்சி அடைந்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

இப்படிப்பட்ட மூன்று விதமான வளர்ச்சி நிலையை அடையும் முன் குறுக்கு வழிகளில் இன்பங்களை அடைய முற்படும் போது வாழ்வையையே கசப்பாக்கிவிடும். இப்படி கசப்பான வாழ்வை அடைந்து முழுக் குடும்பமுமே துன்பப்படுவதை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே இறைவன் வகுத்த வழியில் பொறுமையோடு வாழப் பழகிக்கொள்ளுவோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி