தள்ளாடும் சுய கவுரவம்


நண்பர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். என்னவென்று வினவினபோது, தனக்கு ஒரு பிரச்னை ஆனால் யாருக்கும் தெரிய வேண்டாம். confident ஆக வைத்துக்கொள்ளுங்கள். வெளியே தெரிந்தால் என் பெயருக்கு அவமானம் என்றார். 

சொல்லுங்கள் என்றேன். ஐயா என் மனைவிக்கும், எனக்கும் சிலமாதமாகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. அவள் என்னை மதிப்பதில்லை. பிள்ளைகளை மட்டும் நன்றாக கவனித்துக் கொண்டு என்னை உதாசினப்படுத்துகிறாள். நாங்கள் இருவரும் இணைந்து வீட்டைக் கட்டினோம். ஆனால் வீடு அவள் பெயரில் தான் பதிவுச் செய்துள்ளோம். பிரச்சனைகள் பெரிதாகும்போது வீட்டை விட்டு வெளியேப்  போ என்று மதிப்பில்லாமல் என்னை பேசுகிறாள். நான் தற்போது என் பெற்றோர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்று வருகிறேன்.

நான் எப்படி உங்களுக்கு உதவிச் செய்ய வேண்டும் என்ற போது, தயவு செய்து என் மனைவியிடம் நான் இந்த பிரச்சனையை உங்களிடம் சொன்னேன் என்று மட்டும் சொல்லிவிடாதிருங்கள் என்று புலம்பித்தள்ளினார்.

ஒருவருடைய வாழ்வில் மனக்காயங்கள் ஏற்படும்போது அவர்களுக்குள்  இருக்கும் "நான்" என்ற உணர்வு காயப்பட்டுவிடுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும்போது அவர்களை அறியாமல் தன்னைக் குறித்த தாழ்வுமனப்பான்மையும், மன அழுத்தங்களும் அதிகரித்து விடுகிறது. ஒருவருடைய சுய கவுரவம், தனித்தன்மை (self respect, individualism) ஆகியவை திருமணவாழ்வில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இவை ஆணுக்காகிலும், பெண்ணுக்காகிலும் ஏற்படும் போது வெறுப்புணர்வுகள் பல்வேறு விதங்களில் வெளிப்படும். அநேக பெண்களும், ஆண்களும் இவ்வாறு அவர்களுடைய தனித்தன்மை அழிந்து போகும் போது மன நோயாளிகளாய் மாறிவிடுகின்றனர். 

இதுபோன்று நடைபெறும்போது கணவன், மனைவி இருவரும் தங்கள் குறைகளை உணர வேண்டும். ஒருவர் மற்றவர்களை ஏன் காயப்படுத்த முனைகின்றனர்? மற்றவர்கள் எப்படிப்பட்ட நடக்கையால் இப்படி மாட்டிக்கொள்ளுகிறார்கள் என்பதையும் உணர்ந்துப்பார்க்க வேண்டும்.

சில பெண்கள் தங்கள் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அப்படி இல்லாமல் முற்றிலும் மாறுபடும் போதும் இவ்வாறு நடந்து விடுகிறது. சில ஆண்கள் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரிந்துக்  கொள்ளாமல் வாழ முற்படுகின்றனர். வெளி உலக செயல்பாட்டில் நாட்டமில்லாமல் பெட்டிப்பாம்பாக வாழும் போது சில பெண்கள் குடும்ப பொறுப்பை எடுத்து நடத்தவேண்டிய சூழலுக்குள் நிர்பந்திக்கப்படுகின்றனர். வெளியே அலைந்து வீட்டுக்காரியங்களை முடிக்க வேண்டிய சூழலில் கணவன் மீது வெறுப்புணர்வு மேலோங்கி விடுகின்றது. அதன் விளைவாகவே சிலரின் சுயமரியாதை பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. 

"புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்." (1 கொரிந்தியர் 7:3) என்று திருமறை நமக்கு அறிவுறுத்துகிறது. தன் மனைவி, பிள்ளைகள் மீது கொஞ்சமும் அக்கறையில்லாமல், போனால் போன இடம் என்று நடந்துக்கொண்டால்  மனைவிக்கு கோபம், எரிச்சல் வருவது இயற்கைத் தானே. நீங்கள் உங்களை மதிக்கும்படி நடந்துக்கொள்ள முற்படவேண்டும்.

அதே வேளையில் பெண்கள் மனதில் நிறுத்தவேண்டிய ஒரு காரியம், உங்கள் கணவர் பொறுப்பில்லாதவர்களாக இருக்கும் போது அவர்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கு முற்படுங்கள். உங்கள் புருஷன் மற்றவர்களால் புகழப்படும் அளவிற்கு அவரை மாற்ற உங்களால் இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். "அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்." (நீதிமொழிகள் 31:23) என்றும் திருமறை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. எனவே குணசாலியான பெண்கள் உங்கள் கணவரை காயப்படுத்தாமல் அவரை தூக்கி நிறுத்தி, உங்கள் குடும்பங்களை புத்திசாலித்தனமாக கட்டி எழுப்புங்கள். கர்த்தர் உங்களோடிருப்பாராக. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்