அன்பின் உச்ச நிலையா
திருநெல்வேலி பகுதியில் ஒரு முதியவர் இறந்தவுடன் மனைவியால் தனித்து வாழ இயலாமல் தவித்து இருக்கிறார்கள். குழந்தைகள் இல்லாத இத்தம்பதியின் .வாழ்வில் இப்பிரிவு மிகவும் பெரிய இழப்பாக, வெறுமையை விட்டுச் சென்றது. பாட்டியிடம் அன்பான வார்த்தைகளை பேச ஆளில்லை. துக்கத்தில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லாத வெறுமையான வாழ்வு தான் தவறான முடிவு எடுக்க பாட்டியை தூண்டியுள்ளது. இச்செய்தியை வாசிக்கும்போது முதிர்வயதிலும் பிரிவை ஏற்க முடியாத அளவிற்கா அன்புடன் வாழ்ந்தனர்? என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அப்படி அன்பினால் அவர்கள் வாழ்வு கட்டப்படும் அளவிற்கு எப்படி நடந்திttருக்க வேண்டும்.
வெர்ஜினியா சட்டையர் (virginia satires)ன் கூற்றின் படி குடும்ப வாழ்வு அன்பில் கட்டி எழுப்பப்பட கீழ்கண்ட நாலு முறைகளை பொதுவாக கைக்கொள்வர். இவைகள் சட்டங்களாக அல்ல மனதில் எழுதிக் கொள்ள வேண்டியவைகள்.
முதலாவது “தன்மதிப்பு” (self worth) என்பது குடும்ப வாழ்வில் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கணவனும்/மனைவியும் தான் துணையால், குடும்பத்தினால் நேசிக்கப்பட்ட எதிர்பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொள்வார்கள். எனவே இந்த விஷயத்தில் கட்டுப்பாடுகள் போடுவதை தவிர்த்து விடுவர். பெற்றோரை பார்க்க மனைவி விரும்பினால் அவர்கள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு மீண்டும் அழைத்து வந்து மகிழ்வுடன் வாழ முற்படுவர். அதேபோல் தொலைபேசியில் அவ்வப்போது பேசிடும் போது அதை கண்டு முறுமுறுக்காமல் அத்தை, மாமா எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா என்று உரையாடுதல் வேண்டும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நமது துணை அங்கீகரிக்கப்பட வேண்டும் அவர்களுக்குரிய மதிப்பை மற்றவர்கள் மத்தியில் உயர்த்தும்படியாகவும், அன்பு செலுத்தும்படியான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போகும் போது ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, பிறரை திருப்தியாக்க முற்படுதல் வேண்டும் மற்றவர்களுக்கு முன்பாக அவமரியாதையுடன் பேசுதல், கேலி கிண்டல் செய்து அவர்களை அவமதித்தல் போன்றவை தவிர்க்கப்படுதல் வேண்டும்.
இரண்டாவதாக “கருத்து வெளியிடுதல்” (communication) என்பது முக்கியமான மற்றொரு கூறுபாடாகும். குடும்ப வாழ்வில் அடிக்கடி மற்றவர்களை குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆபிரகாம் சாராள் இடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்தபோதும் அவைகளை பெரிதுபடுத்தாமல் இசைந்து வாழ்ந்ததை காண முடிகிறது.
திறந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இடமளித்தல் முக்கியமான ஒன்று. உனக்கு என்ன தெரியும்? நீ பேசினாலே வீட்டில் சண்டை தான் எனவே தயவு செய்து வாயை திறக்காதே என்று பிறருடைய வாயை மூடுதல் என்பது வேதனையை அளிக்கறதாக மாறிப்போகும். என்னுடைய கருத்துக்கு இந்த வீட்டிலே இடம் இல்லையா? எனக்கு ஒன்றுமே தெரியாதா என்று முறுமுறுப்பும், மனக்குமுறுதலும் ஏற்பட்டுவிடும். இவைகளைத் தவிர்த்து ஒருவர் பேசுவதை மற்றவர்கள் கேட்டு சிரித்து மகிழ ஆரம்பிக்கும்போது அந்த துணையை இழப்பது என்பது மிகவும் பெரிய வேதனையாக மாறிப் போய் விடுகிறது.
மூன்றாவது குடும்ப வாழ்வில் சில “விதிகளை” (rules) ஏற்படுத்திக் கொள்கின்றனர் அல்லது மறைமுகமான ஒப்பந்தங்களை அவ்வப்போது செய்து கொள்ளுகின்றனர். நான் இப்படித்தான் இருப்பேன். எனக்கு மாலை ஆகிவிட்டால் கோயிலுக்குப் போய்விட்டு வந்தால்தான் மனநிறைவு. எனவே அந்த நேரத்தில் என்னை தொந்தரவு செய்யாதே. வேறு வேலைகளை எனக்கு தராதே என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் நன்று. தேவைப்படும்போது அவ்வப்போது மறுபரிசீலனையும் செய்து கொண்டு காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வர்.
நான்காவதாக “வெளி உலகத்துடன் உறவை வைத்துக் கொள்ளுதல்” (relationship with outside world) என்பதும் முக்கியமான அம்சமாகும். குடும்ப வாழ்விற்கு முன்பு தங்களுக்கென்று நண்பர்கள் இருந்திருப்பார்கள். பணிபுரியும் இடங்களில் உள்ள நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை திருமணமானவுடன் முறித்துவிட வேண்டும் என்று அல்ல. மாறாக அவர்கள் குடும்பங்களில் நடைபெறும் வைபவங்களுக்கு இருவரும் போய் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும். பொது தொடர்புகள், அன்பு உறவுகள் போன்றவை தொடர்வதற்கு துணை முக்கியமானவர்கள். இப்படிப்பட்ட நெறிமுறைகளை வகுத்து வாழ்வதால் தான் பலர் துணையை இழக்கும் போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
உலகத்திலே நிறைவானதும் மேன்மையானதும் ஒன்று உண்டு என்றால் அது அன்பு மட்டும்தான்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment