பெண் புத்தி நுண் புத்தி
இந்திய நாட்டைப் பொருத்த வரையில் பெண்களை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்க பெற்றோர்கள் முற்படுகின்றனர். ஒரு மான் காட்டில் வாழும் போது தன்னை, தன் இனத்தை கவனத்துடன் காத்துக்கொள்வது போல் பெண்கள் இருக்கிறார்கள். சிறு சறுகுகள் சலசலத்தாலும் விழிப்புடன் இருந்து ஓட்டம் பிடித்து விடும். அதைபோல் பெண்களும் உள் உணர்வில் பெலம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.
நமது குடும்பத்திற்கு வரும் நபர் எந்த நோக்கத்துடன் வருகிறார், அவருடைய பார்வை, எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வதில் பெண்கள் விழிப்புணர்வுள்ளவர்கள். ஆகவே தான் தன் கணவர் மற்றும் பிள்ளைகளிடம் இவரிடம்/இவனிடம் பழகாதே, அவர்/ன் மோசமானவன் என்று எச்சரிப்பது வழக்கமாக இருக்கிறது. இதை உணர்த்தும் சிறுகதையை "சிதறு தேங்காய்" புத்தகத்தில் வாசித்தேன். அது குடும்ப வாழ்விற்கு பயனுள்ளது.
ஒரு மன்னர் தன் நாட்டின் மீது அக்கறைக்காட்டி நிர்வாகம் செய்யாமல், வேட்டையாடுவதிலேயே தன் நேரத்தை செலவுச் செய்துக் கொண்டிருந்தார். இப்படிச் செய்வது நல்லதல்ல என்று அடிக்கடி அவரின் மனைவிக் கூறுவாள். அவரோ அதை மனதிலே வைத்துக் கொள்வதே இல்லை. எப்படித்தான் அவரைத் திருத்துவது என்று நினைத்த அரசி ஒரு முடிவிற்கு வந்தாள். இனி அரசர் வேட்டையாடிக் கொண்டு வருகிற விலங்குகளை இனி சாப்பிடக்கூடாது என இறுதியாக அரசரும் திருந்தினார்.
ஒரு நாள் அரசர் தன்னுடைய முக்கியமான மந்திரியுடன் பேசிவிட்டு லேட்டாக வந்தார். அரசி யாரிடம் இவ்வளவு நேரம்? என்றாள்
அவரின் பெயரைக்கூறியதும் நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு, அவர் உங்களுக்கு விசுவாசமானவர் இல்லையே என்றாள். அரசருக்கு பெருத்த ஆச்சரியம்! எப்படி என்றார்?
உங்களின் மனைவியாக நான் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறேன். உங்களுக்கு உதவிச் செய்ய அழகான பெண்களையெல்லாம் உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். ஆனாலும் அந்த பெண்கள் என் இடத்தை எடுத்து விடுவார்களோ என்று பொறாமைப்பட்டதும் இல்லை, சந்தேகப்பட்டதும் இல்லை.
ஆனால் உங்கள் மந்திரி யூக்யூஸி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் உங்களுக்கு மந்திரியாக இருக்கிறார். இதுவரையிலும் திறமையான நபர்களை உங்களுக்கு காட்டியதே இல்லை. இப்படி காட்ட மறுப்பவர்கள் தன்னுடைய பணியில் சிறப்பானவர்களாக இருக்க முடியாது என்று சொல்லி மெதுவாக சிரித்தாள்.
யூக்யூஸியை மீண்டும் சந்தித்த அரசர் இந்த கருத்தை மெதுவாக அவிழ்த்துவிட்டார். அடுத்த நாளே அதிசயம் நிகழ்ந்தது. ராஜினாமா கடிதம் ஒரு கையில், ஸ்ன்ஷீவா என்பவரை மறுகையிலும் கொண்டு வந்து அரசர் முன் நிறுத்தினார். புதிய நபராகிய ஸ்ன்ஷீவா நாட்டை திறம்பட நடத்தினார். நாட்டின் மக்கள் மகிழ்ந்தார்கள்.
திருமறையில் அபிகாயில் என்ற பெண்மணி தன் கணவர் நாபால் தாவீதின் ஊழியக்காரர்களை அவமானப்படுத்தி அனுப்பினார் என்று கேள்விப்பட்டாள். உடனடியாக அவள் மூளை புத்திசாலித்தனமாக செயல்பட ஆரம்பித்தது. தாவீதும் அவனுடைய மனிதர்களும் நாபாலின் குடும்பத்தை அழிக்க முற்பட்டு வரும் போது தன் வேலைக்காரர்கள் மூலமாக தாவீதின் ஆட்களுக்கு உணவைக் கொண்டுச் செல்கிறாள். அவளுடைய சிறந்த ஐடியா, நாபால் குடும்பம் முற்றிலும் அழியாதபடி காக்கப்பட்டது. ஆனால் இந்த செய்தியை நாபால் கேட்டபோது "அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்." (1 சாமுவேல் 25:37) நமக்கு இந்த ஐடியா வராமல் போய் விட்டதே, முட்டாள்தனமாக செயல்பட்டோமே என்பதை பின்னால் தான் அறிந்துக்கொள்கிறான். ஆனால் நாபாலின் மனைவியின் மூளை உடனடியாக செயல்பட்டு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டது. எனவே பெண்களின் அறிவுரைகளை ஏளனம் செய்வதைத் தவிருங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment