வாழ்க்கை என்பது ஒரு சவால்!
ஆனி சிவா என்ற பெண்மணி வாழ்வில் நடந்த சம்பவமானது கேரளமாநிலத்தை கலக்கி விட்டது. வர்க்கலை பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஏன் எத்தனையோ பேர் துணை ஆய்வாளராகப் பொறுப்பேற்றிருக்கும் போது ஆனி சிவாவின் வாழ்க்கை மட்டும் பெருமையாகப் பேசப்படுகிறது என்றால் அவர் குடும்ப வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் தான்.
இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டவர். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் போதே கணவரால் புறக்கணிக்கப்பட்டார். அவருடைய பாட்டி வீடே அவருக்குத் தஞ்சமானது. வாழ்வதற்கு வழித் தேடி சுற்றுலாப்பயணிகளிடம் ஐஸ்கிரீம், எலுமிச்சை சாறு போன்றவற்றை விற்று சிறிய சம்பாத்தியத்தில் வாழ்க்கையை நடத்தி சவாலை சந்திக்க ஆரம்பித்தார்.
வாழ்க்கையை நாம் வாழ்ந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருக ஒரு பெண் தோழிக்கிடைத்தாள். படிப்பதற்கு ஊக்கம் கொடுக்கவே சமூகவியலில் இளங்கலைப் பட்ட படிப்பை முடித்து முன்னுக்கு வர ஆரபித்தார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இணங்க காவல்துறை பணிகளுக்கான தேர்வுகளிலேயும் கால் பதிக்க ஆரம்பித்தார். திக்கற்றப்பிள்ளைகளுக்கு இறைவனானவர் அவளுக்கு காவல் துறை பணியில் தேர்வு பெற உதவினார். "சக்திக்கும் தன்னம்பிக்கைக்கும் முன் மாதிரி" என்ற வாசகத்துடன் கேரளாவில் உள்ள காவல் துறையானது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
சங்கீதக்காரன் கூறும் போது "தேவனை நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது. அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமானவர். நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 62:1,2). சூழல்கள் மாறும் போது, சவால்களை சந்திக்கும் போது இறைவன் நம்மோடு இருக்கிறார். அவர் கைவிடமாட்டார். "திக்கற்றப் பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே" (சங்கீதம் 10:14). ஆண்டவர் நம்மை ஒரு போதும் தள்ளுவதில்லை. மனிதர்கள் நம்மைத்தள்ளலாம். பிரச்சனைகள் என்று வரும் போது இறைவன் அவைகளைத் தாண்டிச்செல்ல உதவிடுவார். கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்போம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment