எந்த வேலை எனக்கு காட்டினும்


குடும்ப வாழ்விற்குள் நுழையும் முன் அட்டைப் பூச்சுகளாய் பெற்றோரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் குடும்பம் பிள்ளைகள் என்று வந்த பின் தனித்து செயல்பட வேண்டிய சூழல் வந்து விடுகிறது. பிள்ளைகளை காப்பதற்காக, குடும்பத்தை நடத்துவதற்காக எப்பாடுபட்டாலும் குடும்பத்தை எடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனநிலை உறுதியாகி விடவேண்டும். அதில் சோர்ந்து போகக் கூடாது.

வாழ்க்கைப் போராட்டத்தில் குறிப்பாக மன உறுதியை மட்டும் விட்டு விடாமல் பெண்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையை வாழமுடியாது என்று கோழைத்தனமாக முடிவு எடுக்காமல் எந்த வேலையையும் செய்து குடும்பத்தைக் காப்பதற்கு உறுதி பூண்டுக் கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஷா கேந்திரா என்ற பெண்ணிற்கு 40 வயது. இவருக்கு இரண்டு குழந்தைகள், கணவர் இல்லை. ஆஷாவோ கல்லூரி படிப்பை இடையிலே விட்டு விட்டு வந்தவர். ஆனால் வாழ்க்கையில் தென்றலிடும் என்று நினைத்த ஆஷாவிற்கு புயலடித்து விட்டது.  

ஆனால் மனந்தளராத ஆஷா கல்வியை தொடர்ந்து படித்தார். அது மட்டுமல்லாமல் நாள்தோறும் எட்டு மணிநேரம் அரசு பணியில் கால் வைத்து விட வேண்டும் என உறுதியாக உழைத்தார். 2019 ம் ஆண்டு நடைப் பெற்ற முதல்நிலை அரசு பணியாளர் தேர்வில் கலந்துக் கொண்டார். கொரானாவின் கோரதாண்டவத்தால் தேர்வு முடிவுகள் தள்ளிப் போனது.

குடும்பம் பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டது. எந்த வேலையைச் செய்தாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். முதல் நிலை அரசு பணியாளர் நிலைக்கு வரவேண்டும் என்று கனவு கண்ட ஆஷாவிற்கு ஜோத்பூர் நகராட்சியில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு  செய்யப்பட்டதை கேள்விப்பட்டு துப்புரவு பணியாளராக பணி செய்ய ஆரம்பித்தார். காலங்கள் புரண்டு ஓடி வாழ்க்கையை புரட்டிப் போட்டாலும் விதைத்த விதை என்றாவது முளை விடாமலா போய்விடும்! காத்திருந்தவருக்கு தேனாய் ஒரு செய்தி வந்தது. முதல் நிலை அரசு பணியில் தேர்ச்சிப் பெற்றார் என. இப்பொழுது துப்புரவு பணியாளரான ஆஷாவிற்கு அதே ஜோத்பூர் நகராட்சி நிர்வாகத்தில் உயர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். வாழ்க்கையில் வரும் சோதனை கற்களை படிகற்களாக மாற்றுவதற்கு பொறுமையும், முயற்சியும் அவசியமான ஓன்று. 

திருமறையில் பாரசீக பேரரசர் அகாஸ்வேரின் அரண்மனையில் எஸ்தர் என்ற இளம்பெண் பொறுமையுடன் தன் இனத்தையோ, வழி மரபையோ வெளிப்படுத்தாமல் பொறுமையுடன் வாழ்வில் முன்னேற முயன்று வந்தார். பிரச்சனை என்று வந்த போது மனந்தளராமல் அதை முறியடிக்கும் வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுகிறார். உபவாசம் இருந்து இறைவனின் பெலத்தைப் பெற்று பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறார். நான் இளம் பெண் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று ஒதுங்காமல் மிகவும் நுட்பமாக அரச வரையரைக்குள் நின்று போராடி வெற்றி காண்கிறார். எஸ்தரைப் போன்று இன்றைய பெண்களும் இறைவனின் பெலத்தால் பிரச்சனைகளுக்கு முடிவுக்கட்டுங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து 93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்