Youtube சமையல்


என் பிள்ளை நன்றாக சமையல் செய்வாள். உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக இருப்பாள் என்று பெருமைப்பட்டது அந்த காலம். இப்பொழுது என் மகள் சமையல் கட்டுப்பக்கம் வந்ததே கிடையாது. காப்பி போடக் கூடத் தெரியாது. எல்லாம் சமையல்காரியே பார்த்துக் கொள்வாள் என்று பெருமையாக நினைக்கிற காலம் இது.

காலத்தின் மாற்றமோ என்னவோ தெரியவில்லை. கொரானாவின் தாக்கத்தினால் வேலைக்காரிகள் வீட்டு வேலைக்கு வர இயலவில்லை. அப்படியே வருகிறேன் என்றாலும் சும்மா வருகிறாளா அல்லது கொரானாவோடு வருகிறாளோ, தெரியவில்லையே என்று நானே வீட்டு வேலையைப் பார்த்துக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.

எவ்வளவு தான் படித்தாலும் வீட்டு வேலைகளை, சமையல்களை கொஞ்சம் ஆண்களும், பெண்களும் கற்றுக் கொள்வது ஒன்றும் தவறில்லை. இப்படிப்பட்ட கொள்ளை நோய் தாக்கங்கள், எதிர்பாராத sickness கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ வரும்போது உதவியாக இருக்கும். ஏதாவது ஒரு சூழலில் கொஞ்சகாலம் தனித்து இருக்கவேண்டிய சூழல் வரும்போதும் உதவியாக இருக்கும்.

தென்னிந்தியாவின் முதன் "Diamond Play Button" அந்தஸ்தைப் பெற்றுள்ளது தமிழ் நாட்டைச் சேர்ந்த 'Village Cooking' யூடியூப் அலைவரிசை தான். இந்த உன்னதமான சாதனையைப் படைப்பதில் இளைஞர்களுடன் இணைந்து வரிந்துக்கட்டியது சமையல் கலைஞரான வ.பெரிய தம்பி அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் என்ற பகுதியைச் சார்ந்தவர்கள். சுப்பிரமணியன் என்ற இளைஞர்தான் இதன் மூளையாக செயல்பட்டு கிராமத்து சமையல்கலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து அசத்தியுள்ளார்.   எம்.பில் பட்டதாரியான இவர் 2018ல் இருந்தே உணவு தொடர்பான வீடியோக்கள் வெளியிட விரும்பினார். எப்பொழுதும் புதுமை மக்களை ஈர்க்கத்தானே செய்யும். அதுவும் கிராமத்து மண்ணிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் கிராமத்து சமையலை பார்த்து மகிழ்வது இயற்கைதானே. இதனால் தான் இந்த வில்லேஜ் குக்கிங்கை ஒரு கோடி பேருக்கு மேல் பார்க்கின்றனர். ஒரு கோடி சந்தாதாரர்கள் பார்க்கும் யூடியூப் அலைவரிசைக்குத்தான் வைர விருது வழங்கப்படுகிறது. இப்படி டைமண்ட் ப்ளே பட்டன் அந்தஸ்தை வாங்கிய இந்த சமையல்களை வெறுமனே பார்க்கிறவர்களாக அல்ல, செய்துக் கொடுத்து குடும்பத்தை நடத்த கற்றுக்கொள்ளுங்கள்.

உணவை உங்கள் கைகளினாலே செய்து உங்கள் குடும்பத்திற்கு பரிமாறும் போது வெறும் உணவு மட்டுமல்ல, உங்கள் அன்பும்,பரிவும்,கரிசனையும் தான் சேர்ந்து பரிமாறப்படுகிறது. எந்த விதமான உடலை கெடுக்கக்கூடிய கெமிக்கல்ஸ் சேர்க்கப்படாமல் முற்றிலும் தவிர்க்க முடிகிறது. இன்று உணவே விஷமாக மாறி வருகிறது.   ருசி என்ற பெயரில் விஷத்தை நாம் அருந்தி வருகிறோம் என்பதை மறந்து விடாதிருங்கள். இன்று புற்றுநோய்க்கு காரணமாக நமது உணவே அமைந்து விடுவது எவ்வளவு வேதனையான விஷயம்.

திருமறையில் ஈசாக்குக்கு பிரியமான உணவை ரெபெக்காள் தாயாரித்து வழங்கியதை காணமுடிகிறது. எதையாவது வாங்கி சாப்பிட்டு காலத்தை கழிக்க வேண்டும் என்று நினைக்காதிருங்கள். ஈசாக்கின் இறுதி காலம் வரையிலும் ரெபெக்காளின் சமையல் கவர்ந்துள்ளது. பெண்கள் மட்டும் தான் சமையல் செய்ய வேண்டும் என்று அல்ல, ஆண்களும் செய்யலாம், உதவியும் செய்யலாம். ஒருவர் சுகவீனமாகிவிட்டால் மற்றவர்கள் சமையல் செய்து குடும்பத்தை தாங்கலாம். இது ஒன்றும் வேட்கக் கேடான செயல் அல்ல. புதிய தலைமுறை zomatto, swiggy யை  மட்டுமே எதிர்பார்த்து இராமால் குடும்ப பொறுப்புடன் சமையலையும் கற்று, அன்புடன் பரிமாறுங்கள். இனிய குடும்பமாக அமையும்.  

Youtube பார்த்து சமையல் செய்யலாம். ஆனால் Youtube பார்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இறைவனுக்கு நன்றி செலுத்தி உணவை அருந்துங்கள். சமையலில் உள்ள குறைகளைக் கூறி சண்டையிடுவதை தவிருங்கள். வீணான காரியங்களைப் பேசி சாப்பிடும் போது நரகமாக்காதிருங்கள். இறைவன் நமக்கு சாப்பிடுவதற்கு கொடுத்த உணவை எண்ணி மகிழ்ந்து அருந்துங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து 93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி