திருப்பிக் கொடு
இச்சூழலில் சில இளைஞர்கள் வெறும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வரதட்சனையை வெறுக்கிறேன் என்று காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே மாநிலத்தில் மணமகன் சதீஷ் செய்த செயல் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்கிவருகிறது. இவர் இளம் வயதினிலேயே வரதட்சணை வாங்குவது தவறு என்ற சிந்தனையுடன் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு பெரிய பணக்காரரும் அல்ல, ஆனால் உழைப்பாளி. நாதஸ்வர கலைஞர். கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் எல்லாம் கொரானா காலங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தாலும் கொள்கையில் உறுதியாகவே இருந்து அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டதுமே வரதட்சணை வேண்டாம் என்று பெண் வீட்டாரிடம் கூறியுள்ளார். இருப்பினும் 50 பவுன் நகை போட்டுக் கொண்டு மணமகள் மணமேடை வந்து அமர்ந்துள்ளார். திருமணம் நடைபெற்றது. மாங்கல்யத்தைக் கட்டியதுமே, மணப்பெண்ணின் கழுத்தில் உள்ள திருமாங்கல்யம் மற்றும் இரண்டு கைகளுக்கும் ஒவ்வொரு வளையல் போக மீதியான நகைகளை மணமகளின் பெற்றோரிடமே கொடுக்கச் சொன்னார் சதீஸ். மணமகள் ஸ்ருதியும் தன் பெற்றோரிடமே திருப்பிக் கொடுத்தார். இவரின் இச்செயல் கேரள மாநில இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு அசைவை உருவாக்கியது.
இதை வாசிப்போரே பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று திருமறை நம்மை எச்சரிக்கிறது. பணம் வாழ்க்கைக்கு தேவைதான். ஆனால் அதுவே பிரதானமாக மாறி அநேக பெண்களின் திருமண வாழ்வையே பாதிக்கிறது என்றால் நாம் சிந்திக்க வேண்டாமா? உழைக்கும் திறமையையும், நல்ல வேலை வாய்ப்புகளையும் கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார். “உன் கையின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்” என்று திருமறை கட்டளையிட்டிருக்கும் போது அடுத்தவரின் சம்பாத்தியத்தை நாம் சாப்பிட நினைக்கலாமா? பெண்களின் பங்கை பெற்றோர் கொடுக்கலாம். ஆனால் இவ்வளவு கொடுத்தால் திருமணம் என்று பேசுவது நியாயமா? இவ்வாறு வரதட்சனையால் பேரம் பேசப்பட்டு வந்த பெண் எவ்விதம் அன்பாகச் செயல்பட முடியும்? அவர்களின் காயங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நன்றாக இருக்காதே! எனவே திருமணம் என்பது பணத்தின் அடிப்படையில் அமையாமல் அன்பில் நற்குணத்தில் அமையட்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும் எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் புத்தகம் : என் ரூபவதியே வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment