குடும்பம் அது இறைவனின் பரிசு


சில மனிதர்களின் குடும்ப வாழ்வு நமக்கு நல்ல பாடமாக அமையும். அதில் முன்னாள் டி.ஜி.பி ஒருவரின் பணி நிறைவின் போது அவருடைய மனைவி அளித்த பேட்டி மிகவும் கவனிக்கப்பட உள்ளது. அவர் தன் கணவரைப்பற்றி குறிப்பிடும் போது என் கணவன் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருந்தாலும் வீட்டிற்குள் வரும் போது நல்ல கணவனாக, என் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகத் தான் நுழைவார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவார். நண்பர்களோடு பேசி மகிழ்வதுப்போன்று வீட்டில் உள்ளவர்களுடன் பேசி மகிழ்வார். குறிப்பாக பிள்ளைகளுடன் கிரிகெட், கேரம் என்று விளையாடி மகிழுவார். இரவு வேளைகளில் வீட்டிற்கு வந்தாலும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாட பிள்ளைகளை அழைப்பார்.

துப்பாக்கிச் சூடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்று பல்வேறு கடினமான சூழல்களை அவர் எதிர்கொண்டு வந்தாலும் வீட்டிற்குள் நுழையும் போது அமைதியாகத்தான் இருப்பார். சில வேளைகளில் இரவு இரண்டு மணிக்குத்தான் வருவார். கொஞ்சநேரம் பேசிவிட்டு மீண்டுமாக நான்கு மணிக்குக் கிளம்பிவிடுவார். அவருடைய நிலையை நானும் புரிந்துக்கொள்ளுவேன். சிலவேளை ஸ்பெசல் டாஸ்க், என்கவுண்டர் போன்ற சூழல்கள் வரும்போது வீட்டிற்கு வரமாட்டார். அப்படியே வந்தாலும் டென்சனை வெளியேக் காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால் அவர் எப்படிப்பட்ட மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பதை நான் புரிந்துக்கொள்ளுவேன் என்கிறார்.

குடும்பவாழ்வில் கணவன் பணியை மனைவிப் புரிந்துக்கொள்ள வேண்டும். அதேப் போல் மனைவியின் பணியினை கணவன் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய பணிகளில் ஏற்படும் மன அழுத்தத்தை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக் கொள்ள வேண்டும். பிறரை அலட்சியமாக எண்ணிப் புறக்கணிக்கக் கூடாது. இன்று பலர் மனைவியின் பணியினையும், அவர்கள் அலுவலகத்தில் ஏற்படும் சிக்கல்களையும், மேலதிகாரிகளால் ஏற்படுத்தப்படும் பணிச்சுமையையும்  புரிந்துக்கொள்ள  முற்படுவதில்லை. அவர்கள் பேசும் போது காதுக் கொடுத்துக் கேட்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் மிகப் பெரிய உதவிச் செய்ய முடியாது தான். ஆனால் காதுக் கொடுத்துக் கேட்கும் போது உங்கள் மனைவிக்கு ஒரு மனதிருப்தி ஏற்படும். தன் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்வதற்கு தன் கணவர் இருக்கிறார் என்ற சந்தோஷம் கிடைக்கிறது.

ஆபிரகாம் வாழ்வில் பிரச்சனை வந்த போது சாராள் கூறுவதைக் கேட்கும் படி ஆண்டவர் ஆபிராகாமிடம் கூறுகிறார். "தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." (ஆதியாகமம் 21:12). பிரச்சனைகள் வரும் போது மற்றவர்களைப்பார்த்து நீ பேசாமல் இரு. நீ பேசுவதால் தான் பிரச்சனை என்று கூறுகிறோம். அது தவறு. கேளுங்க கேளுங்க கேட்டுக் கிட்டே இருங்க. பிரச்சனை ஆண்டவரின் கிருபையால் மாறிவிடும். வாழ்வு சரியான பாதையில் ஓட ஆரம்பிக்கும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள் 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்