அம்மா பையன்


ஆண்களில் சிலர் எப்பொழுதும் அம்மாவின் சொற்படியே நடப்பவர்களாக இருப்பார்கள். திருமணமான மனைவியை விட அம்மா தான் தனக்கு முக்கியம் என்று தீர்க்கமாக இருப்பார்கள். எங்க அம்மா என்னை எவ்வளவு நேசித்தார்கள் அதற்காகவாவது நான் அவர்கள் சொல்லைக் கேட்க வேண்டியது முக்கியமல்லவா என்று பேசுவார்கள்.

திருமணமானவுடன் தன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை நிராகரித்து விடக்கூடாது என்பதில் சில அம்மாகள் கவனமாக இருப்பதற்கு காரணம் என்ன? சில வேளைகளில் உலகமே சொல்லும், அம்மா பேச்சைக் கேட்டு மனைவியைத் துரத்தி விட்டு விட்டானே! இவன் எல்லாம் மனுஷனா? என்று கூறினாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டிப் போல தாயின் பின்னால் தலையை ஆட்டி ஆட்டிச் செல்லும் திருமணமான ஆண்கள் எத்தனைப் பேர்.

எங்க அம்மா பேச்சைக் கேட்டு இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் இரு அல்லது உங்க வீட்டுக்குப் போய்  விடு என்று கணவன் மனைவியிடம் எச்சரிக்க காரணம் என்ன?

இவைகளுக்கான காரணத்தை டாக்டர்.ஷாலினி அவர்கள் குறிப்பிடும் போது சில பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழும் சூழல் இருக்கும். அப்படி கிடைத்த கணவர் சரியாக குடும்பத்தின் தேவைகளை சந்திக்காதப் போது தன் மகனை, கணவன் இருக்கும் இடத்திற்கு உயர்த்தி, அவன் மூலமாக குடும்பத்தின் பொருளாதார தேவைகள், குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டிய காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் என்று குறிப்பிடுகிறார்.     

சில வேளைகளில் ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டால் பெண் பிள்ளைகளைக்கூட வலுவானவர்களாக ஆண்களைப் போல் வளர்த்து எல்லா காரியங்களையும் செய்ய வைத்து விடுவார்கள் அம்மாமார்கள் எனக் கூறுகின்றார்.

இப்படி கொம்பு சீவி விடப்படும் ஆண் பிள்ளைகளுக்கோ அல்லது பெண் பிள்ளைகளுக்கோ தாய் தான் தெய்வம். அவர்கள் சொல்லை மீறி தன் மனைவியிடமோ அல்லது கணவனிடமோ பேசக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இவர்கள் தாயை முதன்மைப்படுத்தி துணையை துச்சமாக நினைத்து விடுவர். தாய் மகுடி ஊதுவதற்கு ஏற்றார் போல் அவர்கள் பிள்ளைகள் ஆடுவார்கள். உன் கணவனோடு அல்லது மனைவியோடு வாழாதே என்றால் பிரிந்து கூட வந்து விடுவார்கள், அந்த அளவிற்கு அடிமையாகி விடுவார்கள்.

நாம் திருமணமானவன்/ள் எனவே கணவன்/மனைவி முக்கியம் என்ற எண்ணம் மறந்து போய் விடும். இப்படிப்பட்ட சுயநலமான பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு இருக்கும் பிள்ளைகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  

திருமறையில் யாக்கோபு தன் தகப்பனாகிய கண்தெரியாத ஈசாக்கை ஏமாற்றி ஆசீர்வாதம் பெறுவதற்கு காரணமாய் இருந்தது தாயாகிய ரெபெக்காள் தான். சாபத்தை ஒரு வேளை ஈசாக்கு சொல்லி விட்டால் அது என் மேல் விழட்டும் என்று மகனை தூண்டி விடுகிறாள். இப்படிப்பட்ட சுபாவம் சற்று சிக்கலானது. ரெபெக்காளிடம் சிறந்த நற்குணங்கள் இருந்தாலும் இந்த தவறான குணம் அவளுக்குள் காணப்பட்டதை மறுக்க இயலாது. ஆனால் யாக்கோபுக்கு சரியான துணையை தேர்ந்தெடுக்க நல் ஆலோசனைகளைக் கூறுகிறாள். பிள்ளைகளுக்கு எப்பொழுதும் பெற்றோர் நல்ல ஆலோசனைகளை மட்டுமே கூற வேண்டும்.  

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி