கொஞ்சம் உழைங்க bro


அந்தமான் தீவுக்கு சென்றிருந்தேன். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து கொண்டிருக்கும் போது ஜாராவா என்ற பழங்குடி இன மக்களைப் பற்றி அறிந்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தது. அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காட்டு பகுதி வழியாகச் சென்றுக்கொண்டிருந்தோம். கண்களிலே அவர்கள் படவே இல்லை. திடீரென்று நாங்கள் சென்ற வாகனம் slow ஆனது.

வெளியே எட்டிப்பார்த்தால் சரியாக உடையில்லாத ஜாராவா மக்கள்! அவர்கள் வாழ்க்கை முறை நம்முடைய வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது. நம் ஊரில் உள்ள வாலிபர்கள் அவ்வப்போது வாலிப பெண்களை தரிசனம் செய்ய எந்த வேலையைச் செய்யா விட்டாலும் புது புது dress யைப் போட்டு கொண்டு பெரிய பணக்காரர்கள் போல் காட்சி அளித்து கவர்ந்துக் கொள்ள விரும்புவர். பெற்றோரை கசக்கி பிழிந்து advance மாடல் பைக்கில் வலம் வருவர். அப்படி ஜாராவா வாலிபர்கள் வலம் வந்து பெண்களை மயக்கி திருமணம் செய்யமுடியாது.

திருமணம் செய்ய விரும்பும் ஆண் காட்டிற்குள்ளே போய் வேட்டையாடி மிருகத்தை கொன்று, அதை பக்குவமாக சமைத்து பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். அந்த வேட்டைக்கறி அவளுக்கு பிடித்திருந்தால் அவள் அவனை மணந்துக்கொள்ளுவாள். இல்லையென்றால் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று விலகி கொள்ளுவாள்.         

இவ்வாறு கடினப்பட்டு வேட்டையாடினால் தான் நல்ல உணவை சமைத்துக்கொடுத்து திருமணம் முடிக்கமுடியும். இவ்வாறு ஜாராவா பழங்குடி இன மக்களிடம் காணப்படும் போது, நவநாகரிகத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப்படும் இளைஞர்களே உழைத்து, உங்கள் குடும்பங்களை நடத்த முயலுங்கள். அம்மா, அப்பா, அல்லது மனைவியின் நிழலிலே வாழ முற்படாதிருங்கள். உங்கள் உடலை உழைப்பதற்கு ஒப்புக்கொடுங்கள்.

திருமணம் ஆனபின்பும் மைனர் மாதிரி சட்டையில் அழுக்குப்படாமல் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தின் நபர்கள் குறிப்பாக உங்கள் மனைவியே உங்களை மதிக்கமாட்டார்கள். உழைக்க வேண்டிய வயதில் ஊர் வழியாக சுற்றித் திரிந்தால், வயதாகும் போது நீங்கள் எந்த வேலையும் செய்ய தகுதியற்றவர்கள் என்று உலகமே உங்களை ஓரங்கட்டி விடும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.

திருமறையில் பவுலடடிகள் தெசலோனிக்கேயா மக்களைப் பார்த்து "உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்கள்... வேலைச் செய்து தங்கள் சொந்த சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும்..." என்று கட்டளையிடுகிறார். வேலை செய்ய மனதில்லாதவன் சாப்பிடவும் கூடாது என்கிறார். (2 கொரிந்தியர் 3:11,12). உழைப்பு என்பது குடும்பத்திற்கு அவசியம் மட்டுமல்ல, கவுரவத்தையும் ஒருவருக்கு வழங்ககூடியது. கடினப்பட்டு உழைத்து குடும்பத்தை உயர்த்துங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு: நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்