வேண்டுதல் வேண்டுமா?



இறைவனிடம் பல்வேறு சூழல்கள் ஏற்படும் போது நாம் வேண்டுதல்கள் செய்கிறோம். சில வேளைகளில் பொருத்தனைகள் செய்துக் கொள்ளுகிறோம். கடவுளே நீர் இதைச் செய்தால், நான் உமக்கு இதைச் செய்வேன் என பேரம் பேசிக்கொள்ளுகிறோம். சில பொருத்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது. சில ஏற்புடையது அல்ல.

கரூர் மாவட்டத்தைச்சார்ந்த ஒருவர் அரசு பணிச் செய்து நிறைவுச் செய்தவர். இவர் ஒரு அரசியல் கட்சியிலே தீவிர பற்றுள்ளவர். அந்த பற்றினால் இறைவனிடம் ஒரு வேண்டுதல் செய்துள்ளார். அந்த வேண்டுதல் நிறைவேறுமானால் நான் என் உயிரையே உமக்கு தந்துவிடுவேன் என்று தீர்மானித்துள்ளார்.

அவர் வேண்டுதலின் படியே நடந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே வேளையில் தான்  தீர்மானித்ததின்படியே கோயில் வளாகத்திலே தீக்குளித்து இறந்துவிட்டார். அவர் இறக்குமுன் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் எனது வேண்டுதல் நிறைவேறியதால் சுய நினைவுடன் இறக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இப்படிப்பட்ட முடிவுகள் பரிதாபத்திற்குறியது. நாம் இவ்வாறான பொருத்தனைகளை இறைவனிடம் செய்யக்கூடாது. திருமறையிலும் எப்தா என்ற நீதிதலைவர் ஒரு பொருத்தனையை ஏறெடுக்கிறார். அந்த பொருத்தனையின் விளைவை நினைத்து அவரே கீழ்கண்டவாறு புலம்புகிறார். "ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே!   நீ என்னை துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே!  அதை நான் மாற்ற முடியாதே!" என வருந்துகிறார்.

இறைவன் எப்பொழுதுமே மனிதனின் உயிரை வாங்குகிறவர் அல்ல. அதனை மனிதனுக்கு கற்றுக்கொடுக்கவே ஈசாக்கு சம்பவம் திருமறையில் கொடுக்கப்படுகிறது.   ஆபிரகாம் தன் மகனைக் கொல்வதற்கு முற்பட்ட போது "பையன் மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே" (ஆதியாகமம் 22;12) என்று இறைவன் ஆபிரகாமுடன் பேசினார். மனிதன் வாழ்வதற்காக இறைவன் விரும்புகிறார். மனிதன் உயிரை மாய்த்துக் கொள்வது இறைவனுக்கு விருப்பம் இல்லை. 

திருமணத்திற்கு முன் சிலர் பொருத்தனைகளை செய்துக் கொள்வார்கள். ஆனால் திருமணம் ஆனப் பின்பு சூழல்கள் எல்லாம் மாறிவிடும். அப்பொழுது ஐயோ எனது பொருத்தனைகளை நான் நிறைவேற்ற முடியவில்லையே என்று புலம்புவர். ஆகவே திருமணத்திற்கு பின்பு உள்ள வாழ்வைப் பற்றி திருமணத்திற்கு முன்பே தீர்மானிப்பதை தவிர்ப்பது நல்லது. இறைவனிடம் பேரம் பேசுவதை நாம் தவிர்ப்பதும் நல்லது.

தவறான தீர்மானங்களை ஒருவர் எடுக்கிறார் என்று அறிந்தால் அல்லது அதைக் குறித்து உங்களிடம் பகிர்ந்துக் கொண்டால் அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மேலானது, அல்லது நல்ல ஆற்றுப்படுத்துனரிடம் அழைத்துச் சென்று சரிச்செய்துக் கொள்வது மிகவும் நன்று.

தவறான முடிவுகளை எடுப்பவர்களைக் குறித்து மருத்துவர் கா.செந்தில்வேலன், (விடியல் மருத்துவமனை) அவர்கள் குறிப்பிடும் போது, இவ்வாறு அதிக உணர்ச்சி வசப்படுதல், பயங்கரமாக நெகிழ்ச்சியுடன் செயல்படுபவர்கள், தங்களை மறந்து செயல்படுபவர்கள் அல்லது சூழல்களில் தங்களை கரைத்துக் கொள்பவர்கள் போன்றவர்களை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். தவறான முடிவுகளை எடுக்கும்போது விளையாட்டாக நினைத்துக் கொள்ளக் கூடாது. சீரியஸாக நாம் எடுத்துக் கொண்டால்தான் தவறான முடிவுகளை எடுப்பதற்கு முன் அதிலிருந்து நாம் அவர்களை விடுவிக்கமுடியும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

Source: blog.TdtaChristianMatrimony.Com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி