Mobile Phoneக்கு பூட்டு போடமுடியுமா?
ஏம்மா என்னை இப்படி சர்ச்க்கு கூப்பிட்டுகிட்டு வாரீங்க, எனக்கு bore அடிக்குது. ஏம்மா என்னை இப்படி கல்யாண வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வாறீங்க, எனக்கு இங்க யாரைத் தெரியும்? ஏம்பா என்னை கிரிகெட் விளையாடச் சொல்லி தொந்தரவு பண்றீங்க? நான் தான் செல்போன்ல விளையாடுகிறேன்லா! என்ன சும்மா விட்டுருங்க. எம்மா எனக்கு 20,000 ரூபாய்க்கு நல்ல செல்போனை வாங்கித் தாங்க, என் பிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி சூப்பரான செல்போன் வச்சிருக்காங்க, என் போனைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க.
என் class எல்லாமே onlineல தான் இருக்கு. அப்புரம் ஏன் என் பக்கத்திலேயே உட்கார்ந்து வேவு பார்க்கிறது மாதிரி பார்க்கிறீங்க. என் homework எல்லாமே செல்லில் தான், அப்புறம் ஏன் disturb பண்றீங்க.
பெற்றோர் மனசு பிள்ளைகள் மீதுதான் எப்பொழுதும் ஓடிகிட்டே இருக்குது. 24 மணிநேர வாட்ச் மேன் ஆக பெற்றோர் இருக்க முடியாது. வேலைக்குப் போனாலும் பிள்ளைகள் கைகளில் mobile, laptop. பிள்ளைகள் பாடம் படிக்கிறார்களா அல்லது game விளையாடுகிறார்களா அல்லது chatting பண்ணுகிறார்களா என்று எப்பொழுதும் பார்த்துக்கொண்டே அலையவும் முடியல. பிள்ளைகளை வீணாக சந்தேகப்பட்டால் பிள்ளைகள் எரிந்து விழுவார்களே என்ற பயம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. இருப்பினும் பிள்ளைகளை கவனிப்பது தவறல்ல. ஏனென்றால் இந்திய அரசால் தடைச் செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான pubgயை பல பிள்ளைகள் பார்க்கின்றனர்.
YouTube சேனல் மூலம் சட்டவிரோதமாக விளையாடி, சிறுவர்களை தவறாக வழி நடத்தியதற்காக மதன் என்பவரை கைதுச் செய்தனர். இவருடைய youtube பக்கத்தில் இளைஞர்களுக்கு pubg விளையாடுவதுக் குறித்து பயிற்சி அளிப்பதாக கூறி பலரை ஈர்த்துக்கொண்டார். இவருடைய youtube பக்கத்தை மாத்திரம் சுமார் எட்டு லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். இதனைப் பயன்படுத்தி பாலுக்குள் விஷ துளிகளை மெதுவாக ஊற்ற ஆரம்பித்தது தான் மிகவும் சிக்கலை உருவாக்கியது. இவர் சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி பேசி விஷ விதைகளை ஊன்றினார். இதன் விளைவாக சிறுவர்களும், பெண்களும் பாதிக்கப்பட்டனர்.
இப்படி சிறுவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதனை பெற்றோர் மனதில் கொண்டு பிள்ளைகள் மீது அன்பு செலுத்தி, நேரம் செலவிட வேண்டும். நீங்கள் செலவிடும் நேரம் பிள்ளைகளுக்கு இனியதாக அமைய வேண்டும். அந்த நேரத்திலும் பாடத்தை பற்றியே பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட தீர்மானிக்க வேண்டும். சிலவேளை அவர்களுக்கு எரிச்சலாகத் தோன்றலாம். ஆனால் பிள்ளைகளோடு நம் நேரத்தை செலவிட வேண்டும் என்பதில் பெற்றோர் தீர்க்கமாக இருக்கவேண்டும். "பிள்ளையானவனை நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து..." என்று திருமறை கட்டளையிடுகிறது (நீதிமொழிகள்22:6). அதனை செய்துக் கொண்டிருப்போம், விடாதிருப்போம். பிள்ளைகளை கர்த்தரின் கைகளிலே அர்பணிப்போம். அது மட்டுமே செல்போனுக்கு விடிவுகாலத்தை அளிக்க முடியும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment