இன்னும் சந்தேகமா?


கணவன் மனைவியின் உறவானது பிற உறவுகளைக் காட்டிலும் சிறந்தது, உன்னதமானது. அந்த உன்னதமான உறவை சந்தேகப்படும் போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எத்தனை முறை தான் நான் நல்லவன், நல்லவன் அல்லது நல்லவள், நல்லவள் என்று விளங்க வைப்பது. இனி இவருக்கு/இவளுக்கு புரிய வைப்பது முடியாத  காரியம்! என்று புலம்புவது உண்டு. ஆனால் தென்காசி மாவட்டத்தில் புரிய வைத்துத் தோற்றுப் போன ஒரு பெண் தன்னையும், தன் பிள்ளைகள் வாழ்வையும் பரிதாபமாக முடித்துக் கொள்ள முடிவெடுத்தது இதயத்தை உருக்கி விடுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தன் இளம் வயதின் மனைவியோடு மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு சிறு குழந்தைகளைக் கர்த்தர் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால் அந்த இளைஞனுக்கு சந்தேகம் அடிக்கடி ஏற்பட்டு மனைவியை அடித்து துவைக்க ஆரம்பித்துள்ளார். துன்பம் தாளாது பலரிடம் முறையிட்டுப் பார்த்தார். இறுதியாக தன் சொந்த வீட்டிற்கே போய் விட்டார். இளைஞன் உறவினர்கள் மூலம் சமாதானம் பேசி மீண்டும் குடும்பத்தை நடத்த ஆரம்பித்தார்.  மீண்டும் சந்தேகம் அவனை ஆட்டிப்படைக்க மீண்டும் துன்பம் குடும்பத்தில் துளிர்விட்டது. இனி எந்தவிதத்திலும் இந்த மனுஷன் திருந்த மாட்டான் என்று நினைத்து தன் பிள்ளைகளுடன் வாழ்வை முடித்து இளைஞனிடம் இருந்து விடைப் பெற்றாள்.

சந்தேகத்தின் முக்கிய காரணிகளில் ஓன்று பயம். நம் குடும்ப வாழ்வை வேறு யாரும் பங்கிட்டுக் கொள்வார்களோ என்ற பயம் பலரை பாடாய்பபடுத்துகிறது. நம் மனைவியிடம் நமக்கு உள்ள அன்பு உறவு பாழ்பட்டு விடுமோ என்ற பயத்தினால் மனைவியை அடக்கி ஒடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். கூண்டு கிளியைப் போல் பாதுகாக்க விரும்புகின்றனர். அவர்களது சிறகுகளை அடிக்கடி கத்திரிக் கோலால் மொட்டையாக கத்தரித்து விடுகின்றனர். நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், வேறு யாருடனும் பேசக்கூடாது, பார்க்கக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இந்த பயத்தின் விளைவு குடும்ப சமாதானத்தை இழக்கச் செய்து விடுகிறது. சந்தோஷமாக எங்குப் போய் விட்டு வந்தாலும் சந்தேகப் பேய் ஆட ஆரம்பித்து விடும்.

சந்தேகம் உறவை பாதித்து விடும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. நம் துணைவர்/துணைவியின் அன்பான செயல்களைக்கூட அதை நேர்மறையாக எடுக்க முடியாமல் போய் விடுகிறது.

சிலவேளைகளில் வேறு யாராவது உங்களை ஏமாற்றி விட்டால் இதைப் போன்று என் கணவன்/மனைவி என்னை ஏமாற்றிவிடலாம் என்று சந்தேகிக்க ஆரம்பிக்கின்றீர்கள். இது உங்களது தவறு. ஆனால் உங்கள் மனைவியையோ, கணவனையோ சந்தேகப்பட்டு துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

சில வேளைகளில் செய்தித்தாள், T.V போன்றவற்றில் பார்க்கிற நாடகங்கள், திரைப்படங்கள், நிகழ்வுகள் போன்றவற்றை பார்க்கும்போது ஒரு விதமான தாக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதைப் போன்று நம்முடைய வீட்டிலும் நிகழ்ந்து விடக்கூடுமோ என்ற பயம் சிலரை ஆட்கொண்டு சரியான தூக்கத்தை இழக்கின்றனர். சிலர் வேலைக்குப் போனாலும் பல முறை போன் செய்து மனைவி/கணவனை check பண்ணுகின்றனர்.   நிம்மதியில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழல் வரும்போது மனம் விட்டு பேசவேண்டும். இது ஓன்று தான் நல்ல தீர்வுக்கு வழி. நாம் எங்கேப் போனோம், யாரிடம் எல்லாம் பேசினோம். நம்முடைய நண்பர்கள் யார்? போன்றவற்றை மனம் திறந்து பேச வேண்டும். அப்பொழுது ஒளிவு  மறைவு இல்லாமல் போய்விடும். வீண் சந்தேகங்கள் அகன்று போய் விடும்.

திருமறையில் யோனத்தான் தாவீது உறவு என்பது மிகவும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. "யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனை தன் உயிரைப் போல சிநேகித்தான்" (1சாமு 18:1). சவுல் தாவீதை சந்தேகக் கண்ணோடேப் பார்த்துக் கொண்டிருந்தாலும் யோனத்தானும் தாவீதும் அன்பிலே பின்னிப் பினைந்திருந்தனர். இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. சிக்கல்கள் வரும்போதும் இணைந்து பேசி மனதில் உள்ளதையெல்லாம் பேசிக் கொண்டனர். எனவே இருவருக்கும் இடையே சந்தேகம் வரவில்லை. உயிருக்கு உயிராக நேசித்தார்கள். இதைப் போன்று தான் பிரச்சனைகள் வரும் போது பேச வேண்டும், பேசிப் பேசி எங்கே சந்தேகம் எழுகிறதோ அது மறையும் வரைப் பேசி தெளிவுபடுத்த வேண்டும். சந்தேகத்திற்கு காரணமாய் வருகிற நபரை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். சந்தேகத்திற்கு ஏதுவான சூழல்கள் வரும் போது பேசி பேசி அத்தனையையும் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஆண்டவரும் உங்களுக்கு துணை நிற்பார். முழங்கால்களை முடக்கி ஆண்டவரிடம் கூறுங்கள், தேவைப்பட்டால் நல்ல ஆலோசனை தருகிறவர்களை அணுகுங்கள். இது தீர்க்கப்படாத பிரச்சனை அல்ல.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்