நம்மை Beat பண்ணிரும் போல!


குரங்கிலிருந்து மனுஷன் வந்தானா? மனுஷனில் இருந்து குரங்கு வந்ததா? என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, மனுஷனைக் காட்டிலும் மிருகங்கள் சிறப்பான செயல்களை வெளிப்படுத்தி மனுஷனை தோற்கடித்து விடுகிறது என்று முடிவு கட்ட வேண்டிய சூழலுக்கு வந்து விடுகிறது.

ஹாரி ஹர்லோ என்ற அமெரிக்க விஞ்ஞானி தாய் சேய் உறவு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அறிய குரங்குகளைப் பயன்படுத்தினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் சில உண்மைகள் வெளியானது. இவை மனித இனத்திற்கும் பயனுள்ள பல செய்திகளைத் தருகிறதாக உள்ளது.

குரங்கு குட்டிபோட்ட உடனே குட்டியை அதன் தாயிடம் இருந்து பிரித்து தனியாக வளர்க்க ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு பாலூட்டுவது போன்று சரியான நேரத்துக்கு உணவையும், விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்களையும் தாராளமாக கொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆனால் தாய் குரங்கை மட்டும் பார்க்க வாய்ப்பைக் கொடுக்கவே இல்லை. இவ்வாறு குட்டிக் குரங்கு வளர்ந்து வந்த பின்னர் மற்ற குரங்குகளுடன் பழக அனுமதித்தார். ஆனால் இந்த குரங்கு மற்ற குரங்குகளுடன் பழகுவதற்கு விரும்பவே இல்லை. அதே வேளையில் எதிர்பாலின குரங்குகளுடன் பழகுவதற்கு அனுமதித்தபோதும் ஏறெடுத்துப் பார்க்க விரும்புவதில்லை. எனவே அம்மா, பிள்ளை உறவுகள் தான் சமூக பழக்க வழக்கங்களைக் கற்கும் பல்கலைகழகம் என்பதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக குடும்ப  வாழ்க்கையைக் கூட தீர்மானிப்பதில் அம்மா, பிள்ளையின் உறவு என்பது எப்படி இருந்ததோ அதின் தாக்கம் வெளிப்படும் என்பதை ஹாரி உணர்ந்தார்.

குட்டி குரங்குகள் அம்மா குரங்கின் தாக்கத்தைப் பெற்று தான் தனது சுய அடையாளத்தையும், சமூக நடத்தைகளையும் நிர்ணயிருக்கிறது. குறிப்பாக ஆண் குட்டிகளுக்கும் தாய்க்கும் இடையே ஓரு அன்பு உறவு என்பது எல்லா உயிர் வாழ் மிருகங்கள்/மனிதர்களிலும் காணப்படுகிறது என்பதை உணர முடிகிறது.  

மிருகங்கள் இவ்வாறு தாய் பிணைப்போடு வாழ்ந்தாலும், வயது வந்த உடன் அது தனித்து இயங்குவதற்கும், அதற்கென்று ஏற்ற துணையைக் கண்டு பிடிப்பதற்கும் தாய் மிருகங்கள் விட்டு விடுகிறது. அவைகளுக்கு தடையாக இருப்பதில்லை. ஆனால் மனித வாழ்வில் மட்டும் எவ்வளவு தான் பிள்ளைகள் பெரியவர்களானாலும், தாய் விட்டு விடாமல் துரத்தி துரத்தி மருமகளை பிள்ளையிடம் இருந்து பிரிக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம்?

'கணவன் தான் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்' (ஆதியாகமம் 2:24) என்று திருமறைக் கட்டளையிடுகிறது. காரணம் என்ன? பார் மிருகங்கள் கூட பிள்ளைகள் சரியான நேரத்தில் துணையுடன் வாழ விட்டு விடுகிறது.   மனுஷனே/மனுஷியே என் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தாவது உன் பிள்ளையை வாழ விடு என்று கர்த்தர் கூறுகிறார். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி