தொப்புள் கொடியில் சிக்கிய பெரிய தம்பி
மெதுவாக தோளில் கையைப் போட்டுக்கிட்டு, ஏதாவது திருமணம் செய்துக்கொள்ளக்கூடாதா? வயசு ஆயிட்டுதே என்றேன். சிரித்தார் பதிலை காணவில்லை.
தீடீரென்று உள்ளே இருந்து பதில் வந்தது. ஐயா நீங்கதான் என் மகனுக்காக ஜெபிக்கனும். ஒரு நல்ல பொன்னப் பார்த்து நீங்க தான் தரனும். ஒங்க காலத்துல எப்படியாவது திருமணம் நடக்கணும் அப்படி அம்மா சொன்னாங்க. அப்பா இல்லாத பையன் எல்லாமே நான்தான் அவனுக்கு. என் காலைத் தான் சுற்றி சுற்றி வருவான். மாசமானதும் சம்பளத்த என் கையில் தந்திருவான். பஸ்ல போரதுக்கு கூட என் கிட்ட காச வாங்கிகிட்டுத்தான் போவான். நான் எதுக்கு, எவ்வளவு செலவழிக்கிறேன்னுஒரு நாள் கூட கணக்கு கேட்டது கிடையாது. அம்மா எல்லாத்தையும் நல்லதாதான் செய்வாங்கன்னு ஊரு முழுக்க என்னைப் பற்றி பெருமையா பேசுவான்.
நான் கேள்வி கேட்க கேட்க பதிலை பெரியதம்பி சொல்லிவிடாம அம்மாவே மறிச்சி பேசி முடிச்சாங்க.
டீ போடப்போன நேரத்துல மெதுவா பெரிய தம்பிகிட்ட கேட்டேன். "ஏம்பா, அம்மான்னா உசிரா?" பதில் வந்தது. "கடவுளுக்கு அடுத்தாப்ல எனக்கு எங்க அம்மா தான் எல்லாம்". என்னை அவ்வளவுக்கு கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாங்க. எங்க அம்மா எங்க அப்பாவை சின்ன வயசிலேயே accidentல இழந்திட்டாங்க. ஆனால் எங்க அம்மா எனக்காக வாழ்க்கையையே தியாகம் பண்ணி இருக்காங்க. வேலைக்குப் போய் என்னை பாடுபட்டு படிக்க வச்சி இப்படி உருவாக்கியிருக்காங்க.”
புரிஞ்சுகிட்டேன். அம்மா புராணம் பெரிய தம்பியை உருக்கி வைத்திருக்கிறது. அம்மா போட்ட கோட்டைத் தாண்டுவது கடினம் என்பதை புரிந்துக் கொண்டேன்.
டீயைத் தந்த போது எதிர்பாராத விதமாக பெரிய தம்பி சட்டையில் டீ கொட்டி விட்டது. உடனே அந்த தாய் ஓடிப்போய் வேறே ஒரு dressயை எடுத்துக் கொடுத்துக்கிட்டு மெதுவாக சொன்னாங்க. "என் மகன் dress எல்லாத்தையும் நான் தான் துவைக்கிறேன். ஒரு டீ கூட அவனுக்குப் போடத் தெரியாது” என்று பெருமையாக கூறினார்கள்.
அப்பொழுது தான் புரிந்தது 40 வயது ஆணுக்கு டீ கூட போடத் தெரியாது, dress யை துவைத்தது கிடையாது என்றதும் அவன் கழுத்தை என் மனக்கண்ணால் பார்த்தேன், "அவன் தாயின் தொப்புள் கொடி பெரிய தம்பியின் கழுத்தை சுற்றி இருந்தது".
தன் மகன் மீது பாசத்தை ஊற்றி வளர்ப்பது போல் வளர்த்து, வளர்ச்சி அடையாத ஆண் மகனாக வளர்த்து வரும் துரோகத்தை உணர்ந்தேன்.
உண்மையான அன்புக்கு, பிள்ளை நம்மை விட்டு போய்விடுவானோ என்ற பொறாமை இருக்காது. அன்பு அயோக்கியமானதைச் செய்யாது (1 கொரிந்தியர் 13:4,6). அன்பு என்ற பெயரிலே பிள்ளை திருமணம் நடைபெறாமல் இருக்க என்னென்ன சாக்குப் போக்கு சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொல்ல சில பெற்றோர்கள் பழகிப் போனார்கள். கர்த்தர் உங்கள் மாய்மாலமான் அன்பை உணர்வார். இளைஞர்களே மாயவலையில் இருந்து வெளியே வாருங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு: நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment