Over Sentiment Boss
மூன்று பேருக்கும் பார்க்க வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டார்கள். மூன்று பேரில் இருவர் டாக்டர், மற்றோருவர் Engineer. வயது எல்லாருக்கும் 30க்கு மேலே!
ஏன் வரன் அமையவில்லையா? என்று தயங்கி கேட்டேன்.
அந்த அம்மா அசால்டாக ஒன்றும் சரியாக வந்து அமைய மாட்டேங்குது. ஓன்று படிப்பு சரியாக வந்தா, வீடு வாசல் ஒன்றும் இருக்க மாட்டேங்குது.
சொத்து சுகம் இருந்தா, சரியான படிப்பு இருக்க மாட்டேங்கு, இரண்டும் இருந்தா வயது சரியா பொருந்த மாட்டேங்குது என்று சிரித்தார்கள்.
நான் யோசித்தேன், 138 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் வரன் வர மாட்டேங்குது என்றால் எவ்வளவு பெரிய பொய்! அதுவும் டாக்டர், இஞ்சினியர் என்று நன்கு படித்து கை நிறைய சம்பளம் வாங்கும் பையன்களைத் தேடி வீட்டு வாசற்படியிலே காத்திருப்பார்களே, என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
வரன் பார்ப்பதற்கு வந்த பெண்மணி பல மணமகள் Profile யை பார்த்துவிட்டு போனது தான் மிச்சம். பல மாதங்கள் ஆனாலும் ஒன்றும் வலையில் அகப்படவில்லை என்றார்கள்.
உண்மையில் இவர்களுக்கு அகப்பட்டாலும் விட்டுவிடுவார்கள். காரணம் சில அம்மாக்கள் தங்கள் பிள்ளைகள் திருமணமாகி வாழ்வதைக்காட்டிலும் குழந்தைகளாய் வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் எப்படி தன் தாயை விட்டு பிரியாமல் ஒட்டிக் கொண்டே இருக்கிறதோ அப்படி 35 வயதானாலும் ஒட்டிக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு சந்தோஷம். ஏதாவது பிரச்சனையென்றால் அம்மாவே பார்த்துக் கொள்வேன். நீ ஏன் கவலைப்படுகிறாய் என்று முந்தானையை எடுத்து 35 வயது மகன் கண்களில் உள்ள கண்ணீரைத் துடைத்து விட்டு தன் மகனுக்கு அதிகபட்ச பாதுகாப்பு தருவதாக காட்டிக் கொள்கின்றனர்.
நம் வீட்டில் உள்ள பூனை, நாய், மைனா, கிளி கூட சரியான வளர்ச்சி வந்த உடன் சுயமாக வாழ bye போட்டு அனுப்பி விடுகிறது. ஆனால் சுயநலமான பெற்றோர்கள் அப்படி அனுப்ப விரும்புவதில்லை. காரணம் பிள்ளைகள் பணம் காய்க்கும் மரமாகவும், தேவைப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல நல்ல டிரைவராகவும், தடுமாறினால் தாங்கி பிடிக்கும் கைத்தடியாகவும் பிள்ளைகளை மாற்றி மனதுக்குள் வைத்து விடுகின்றனர். எனவே எத்தனை வரன்கள், கரணம் போட்டாலும் பாச்சாபலிக்காது பாஸ்.
சிந்தியுங்கள் இளைஞர்களே! பாசமழையில் உருகி வாழ்வை இழந்து விடாதிருங்கள். இறைவன் சுயநலமான பெற்றோரை ஒருபோதும் வாழ்த்துவதில்லை. 'அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறனுக்கானவைகளையும் நோக்குவானாக' என்று திருமறைக் கூறுகிறது. தங்கள் சுய நலத்திற்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் பெற்றோரை புரிந்துக்கொள்வது கடினம். காரணம் பாசம் உங்கள் கண்களை மறைக்கும்.
நகோமியைப் போன்று "நீ இல் வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவோ?" என்று பெற்றோர்கள் கூறினால் தான் விடிவு காலம். இல்லையென்றால் சுயமான முடிவு எடுக்கவேண்டிய சூழல் வரும் என்று பெற்றோர்களிடம் கூறுங்கள், அருணோதயம் சந்தித்து விடும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment