எதை நோக்கி பயணிக்கிறோம்
சிறு குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்து வா விளையாடுவோம் என்று கூப்பிட்டு விளையாடுவார்கள். பின்பு சண்டைப் போட்டு விடுவர். மீண்டும் அடுத்தநாள் சேர்ந்து விளையாடுவர். அது போன்று குடும்ப வாழ்வை வாழ இயலாது.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் தன் இரண்டாவது மனைவி கிரன் ராவை விவாகரத்துச் செய்வதாக கூறிய விவகாரம் வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. அமீர்கான் ஏற்கனவே ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். இவருடன் உள்ள குடும்ப வாழ்க்கையானது 2002ல் முறித்துக்கொண்டார். முதல் மனைவியின் வழியாக ஜீனைத் என்ற மகனும், ஈரா என்ற மகளும் உள்ளனர்.
அமீர்கான் 2005ல் கிரன்ராவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். 2011 ஆண்டு வாடகைத் தாய் மூலம் ஆசாத் ராவ் கானைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த தம்பதிகள் குடும்ப வாழ்க்கை 15 ஆண்டுகள் தான் பிடித்தது. இப்பொழுது விவாகரத்துச் செய்யப் போவதாக அமீர்கான் அறிவித்துள்ளார். அவர்கள் வெளியிட்ட அறிக்கைதான் நமக்கு வியப்பைக் கொடுக்கிறது. அவர்கள் கூறும் போது எங்கள் 15 ஆண்டு குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டோம். எங்களது குடும்ப உறவில் நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பு நிறைந்ததாக இருந்தது. இப்பொழுது நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளோம். ஆனால் இனி கணவன் மனைவியாக இருக்கப் போவதில்லை. மாறாக பெற்றோர் மற்றும் குடும்பமாக வாழ முடிவுச் செய்துள்ளோம். எங்கள் மகனுக்கு நாங்கள் அற்பணிப்புள்ள பெற்றோராக இருப்போம். மகனை நாங்கள் ஒன்றாக வளர்ப்போம். நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவை நீங்கள் எங்கள் குடும்ப வாழ்க்கையின் முடிவாக அல்ல, ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட முடிவுகளை ஒரு போதும் நாம் எடுக்கக் கூடாது. குடும்ப வாழ்வில் மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், மனம்விட்டுப் பேசி சரி செய்தல் என்பது முதன்மையானது. கணவன் மனைவியாக அல்ல ஆனால் குடும்பமாக வாழ்வோம் என்று அமீர்கான் கூறுவது போன்று வாழ்வது என்பது சிக்கல் நிறைந்த ஓன்று.
கிறிஸ்தவ குடும்பம் என்பது கர்த்தரின் தோட்டம். இந்த தோட்டத்தில் மனிதர்கள் வளர்க்கப்படுகிறார்கள். (Home is the garden of the Lord, a nursery for human lives to grow in) இங்கு கணவன் மனைவி என்ற இருவரின் வேறுபாடுகளைக் களைந்து ஒரே உடலாக, ஒரே உயிராக, ஒரே நோக்கமுள்ளவர்களாக வளர எதிர்பார்க்கப்படுகிறோம். அரைகுறைப் பெற்றோராக அல்ல, சுயநலப் பெற்றோராய் அல்ல, நம்பிக்கைக்குறிய பெற்றோர்களாக, முழு அன்பையும் கொடுக்கும் பெற்றோர்களாக, முன்மாதிரியான பெற்றோர்களாகவே வாழ கர்த்தர் எதிர்பார்க்கிறார். கிறிஸ்து நமக்கு காட்டிய முன்மாதிரிகளையும், திருமறைக் காட்டும் வெளிச்சத்திலேயும் குடும்ப வாழ்வை அற்பணிப்போம்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment